அண்ணே வணக்கம்ணே..
பதிவுக்கு போறதுக்கு முந்தி சின்ன மேட்டர். " நம்மில் ரெண்டு பேர் எதை நினைச்சாலும் ஆத்தா உடனே நிறைவேற்றி வச்சுருவா." ஆனாலும் ஆத்தாளுக்கு என்னா குசும்பு பார்த்திங்களா? நாம என்னைக்கு ஒரே விஷயத்தை நினைக்கப்போறோம்?
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"னுட்டு ரேக்கி விட்டுட்டு ஆத்தா கண்டுக்காம விட்டுட்டாளோனு கொஞ்சமா டர்ராயிட்டன். அதனாலதான் என் உணர்வுகளை ஒரு பதிவாக்கினேன். ஆனாலும் இத்தீனி பேரு நமக்கு மோரல் சப்போர்ட் தரும்போது "தாளி ரெண்டு ஒன்னு பார்த்துரவேண்டியதுதான்னு டிசைட் ஆயிட்டன்.உடுங்க ஜூட். அல்லாருக்கும் டாங்ஸுப்பா.
(எல்லாருக்கும்னு சொல்லாம "அல்லா"ருக்கும்னு சொல்றதுல ஒரு சதி இருக்கு) இப்ப பதிவுக்கு போயிரலாமா?
செத்த பாம்பை அடிக்கிறாப்ல தாத்தாவையும் - கனிமொழியையும் கிழி கிழினு கிழிச்சுக்கிட்டே இருக்கிறாய்ங்க பதிவுலகம்,மீடியா மட்டுமில்லை. சீரியல் நேரத்துல கூட தாய்க்குலங்களுக்கிடையில இந்த டாப்பிக் ஓடுதுன்னா பாருங்க..
( நாம மட்டும் சைவமா என்ன?) ஆனால் காட்டுக்கிழிப்பு அவிகளுக்கே அனுதாபத்தை தேடி தந்துரும். ஜனதா பீரியட்ல மொர்ரார்ஜி தேசாய் இந்திராவை அரெஸ்ட் பண்ணாம "ஏன்யா இன்னம் அரெஸ்ட் பண்ணலைன்னு ஒவ்வொரு இந்தியனும் ரோட்டுக்கு வந்து போராடறாப்ல செய்திருக்கனும். கோட்டை விட்டாய்ங்க. படக்குன்னு கைது செய்யவே அனுதாப அலை துவங்கிருச்சு.
கிழிப்புலயும் ஒரு தியரிட்டிக்கல் அண்ட் ஆர்ட்டிஸ்டிக் டச் இருக்கனும்.அப்பத்தேன் அனுதாபம், விரகதாபம்லாம் கிளம்பாது. அதனாலதான் இந்த மனோதத்துவ போஸ்ட் மார்ட்டம். தொடர்ந்து படிக்க்
No comments:
Post a Comment