'>

Sunday, May 1, 2011

உஜிலா தேவிக்கு உய்யலாலா!

வடிவேலு " நல்லாத்தானே போயிட்டிருந்தது"ம்பாரே அந்த நிலைமை நமக்கும் வந்துருச்சுங்கண்ணா. உஜிலாதேவியை அப்பப்போ கண்டுக்கறது வழக்கம். ஆனால் என்ன ஆச்சோ ஏதாச்சோ  தெரியலை இந்த கழுகு மூக்குக்கு பா.ஜ.க வாசம்லாம் வீச ஆரம்பிச்சது. நாமும் ஒன்னு ரெண்டு தபா கவுரதையா சொல்லி பார்த்தோம் கேட்கிறாப்ல இல்லை.

கேட்காட்டி ஓஞ்சுபோவட்டும் . நாம போடற பதிவை எடுத்து சொந்த ப்ளாக்ல வச்சு ஜல் ஜக் பார்ட்டிங்களை விட்டு வையறதெல்லாம் கூட நடந்தது. நாம பட்ட பாட்டுக்கு மானம்,ஈனம் ,சூடு,சுரணை எல்லாத்தையுமே விட்டுத்தொலைச்சுட்டு ..

ஆத்தா எதுனா கிடைச்சா அதை உன் பிரசாதமா ஏத்துக்கறேன். (செருப்படியானாலும் சரி) எதுனா பூட்சா உனக்கான  காணிக்கைனு நினைச்சுக்கறேன்னுட்டு காலத்தை ஓட்டிக்கினு கீறோம்.

நம்ம பாய்ண்டு ஒன்னுதான். எல்லா உசுருக்கும் ஆதி அமீபா. ஒரே உசுரு. அந்த ஒரு உசுருலருந்துதான் அல்லாரும் வந்தோம்.

எல்லா உசுரும் மறுபடி ஒன்னு சேரத்தான் துடிக்குது. அதுக்கு இந்த உடம்பு தான் தடைனு மயங்கி "கொல்ல அ கொல்லப்பட துடிக்குது. (சைக்காலஜியே ஒத்துக்கிட்ட சமாசாரம் இது)  இது செக்ஸ்ல டெம்ப்ரரியாவாச்சும் சாத்தியம். தியானத்துல பர்மணன்டாவே சாத்தியம்னு பெரியவுக சொல்றாய்ங்க.

மன்சன் இந்த படைப்புக்கு தன்னை மையமா வச்சு பார்க்கிறதாலதான் இத்தனை சிக்கல். நம்ம உஜிலா தேவி தன்னை மையமா வச்சு எழுதிக்குவிச்சாலும் பரவால்லை.  நாலு பேரோட எழுத்தைப்போல கிடக்குது போன்னு விட்டுரலாம்.

ஆனால் பாவம் இந்து மதத்தை மையமா வச்சு உலகமதங்களையெல்லாம் பார்க்கிறாரு. தன்னை மையமா வச்சு வாழற டஃபேதார் கூட ட்யூட்டி நேரத்துல "ஐயாவை"  உலகத்தின் மையமா வச்சு பிஹேவ் பண்றான்.

அந்த இங்கிதம் கூட உஜிலாதேவிக்கு இல்லை. நை நைன்னு மதங்களை ஒப்பிடறதே வேலையா போச்சு. ஊசி ஊசிதான் .கடப்பாறை கடப்பாறைதான். ஊசியால ஆகிற வேலை கடப்பாறையால ஆகுமா? ( நான் இந்துமதத்தை சொல்லலிங்கண்ணா-அவிக தானே பாபர் மசூதியை இடிக்க கூட்டமா கொண்டு போனாய்ங்க). இந்த ஒப்பீடுல்லாம் வேண்டாத வேலையில்லையா?
Read More

நாம தண்ணிங்கறோம் தெலுங்குக்காரன் நீள்ளுங்கறான், இந்திக்காரன் பானிங்கறான். ( நன்றி:ராமகிருஷ்ண பரமஹம்சர்) தாளி இதுல ஒப்பீடு என்ன வேண்டி கிடக்கு.

ஒரு பதிவுல காந்தி இந்து சிறுவனை பகவத் கீதை படிக்கசொன்னாருன்னு சொல்றாரு. இன்னொரு பதிவுல இந்து சிறுவர்கள் பைபிள் படிக்கனும்னு இவரு சொல்றாரு. கீதையோட லட்சணம் என்னனு ஒரு தொடரே எழுதி கிழி கிழினு கிழிச்சு  தொங்கவிட்டாச்சு. முடிஞ்சா அதை தைக்கப்பார்க்கனும்.

நம்முதே நாறுது. இதுல அடுத்தவன் கட்கத்தை மோந்து பார்க்கவேண்டிய அவசியம் என்ன? ஒரு தாட்டி ஏழை பணக்காரனாயிட்டா உலகமே இயங்காதுன்னு உளறிக்கொட்டினாரு.

இன்னொரு நாள் ஆத்திகம் - நாத்திகம்னு ஆரம்பிக்கிறாரு. நாத்திகர்கள் எல்லாம் அபிஷ்டுக்கள் போலவும் -நாஸ்திகர்கள் பெரிய மனசுக்காரர்கள் போலவும் //ஆத்திகர்கள் நாத்திகத்தை வெறுத்துயிருந்தால் இவைகளை பதிவு செய்யாமலே விட்டுயிருக்கலாம்.//ங்கறாரு.


அடங்கொய்யால நாத்திகனை விடு. வைணவம் -சைவம்னு கொலைவெறியோட திரிஞ்ச காலம்லாம் என்ன ஆச்சு? பௌத்தர்களையும்,ஜெயினர்களையும் ஒரு பாடா படுத்தினிங்க. உசுரோட வச்சு எரிச்ச சம்பவம்லாம் உண்டே.  இந்த இழவை http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_30.html எல்லாம் கூட கண்டும் காணாம இருந்துட்டன்.

இன்னைக்கு http://ujiladevi.blogspot.com/2011/05/blog-post_02.html  தீர்ப்பு நாளுக்கு போயிட்டாரு.

//ஆனால் இந்த விஷயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ சமய கொள்கைகள் அறிவு பூர்வமானது என்று சொல்லி விட முடியாது. //

அறிவுப்பூர்வமானதானு ஒரு ஸ்கேன் ஓடவிட்டா இந்துமதத்துல ஒரு துணுக்கு கூட தேறாதுங்கோ. அறிவுக்கு அப்பாற்பட்டதை சொல்றதுதான் மதம்.

//அல்லாவை ஏற்றவனுக்கு கல்லறை சுகமானது.  ஏற்காதவனுக்கு துக்கமானது என்றால் பிறந்து மூன்று வருடத்தில் அல்லாவையோ ஏசுவையோ ஏன் சிவபெருமானையே கூட யார் என்று தெரியாமல் தான் எதற்காக பிறந்தோம் என்று உணராமரல் செத்து போகும் குழந்தை இறுதி தீர்ப்பு நாள் வரை கல்லறைக்குள் எப்படியிருக்கும்?//

அடடா.. இந்த நாலணா லாஜிக்கை பதிணென் புராணங்களுக்கு அப்ளை பண்ணி பார்க்கவேண்டியதுதானே.

//மறுபிறப்பை நிறுபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லையே தவிர புணர் ஜென்மம் என்பதை அனுபவபூர்வமாக  நம்ப கூடியதாக இருக்கிறது.//

அது சரி மாமியார் உடைச்சா மண்குடம். மருமக உடைச்சா பொன் குடம் தானே


// மறு பிறப்பிற்க்கு எப்படி ஆதாரம் இல்லையோ அதே போல இறுதி தீர்ப்பு நாளை நம்புவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.//

இந்து மதத்துல பிரளயம்னு சொல்றிங்க. இஸ்லாம்ல கியாமத் நாள்னு சொல்றாய்ங்க. பவிஷ்ய புராணத்துல சொல்லப்பட்டுள்ள பிரளயகால லட்சணங்களும் - கியாமத் நாளுக்கான லட்சணங்களா இஸ்லாம் சொல்ற லட்சணங்களும் அக்கா தங்கச்சி மாதிரி ஒரே சாடையில இருக்கு. அல்லாஹ்விற்கு பொறுமை இருந்து அவர் தீர்ப்பு சொன்ன சொல்லிட்டு போவட்டுமே உங்களுக்கு எங்கே வலிக்குது.

உங்க ( நம்ம) சாமியெல்லாம் டாஸ்மாக் கடையில குடிமகன்கள் மாதிரி சோமரசம் அடிச்சுக்கிட்டு ரம்பா,ஊர்வசி மேனகாவோட அஜால் குஜால் பண்ணிக்கிட்டு ஜல்சாவா இருந்துருவாய்ங்க போல.

ஆகிற வேலைய பாருங்க குருஜி..  மொதல்ல நம்ம வீட்டை சுத்தம் பண்ணுவம். இதான் கடேசி மறுப்பு. இதுக்கு மேலயும் மாற்றம் வரலைன்னா ஏமாற்றம் எனக்கில்லை. எதையோ எதிர்பார்த்து அலப்பறை பண்ற உங்களுக்குத்தேன் ஏமாற்றம்.

அப்பாறம் உங்க இஷ்டம். ரெம்ப கஷ்டம். எனக்கில்லை ஒரு நஷ்டம்.

1 comment:

Unknown said...

contact me

I need to ask some question to you