'>

Wednesday, April 27, 2011

ஆடி மாசம்+ கில்மா = ?

என்னதான் வர்ர அமாவாசை வரைக்கும் லீவுனு அனவுன்ஸ் பண்ணிட்டாலும் மனசு கேட்குதா. அதான் தூள் பக்கோடா மாதிரி இந்த பதிவு.


ஆடி மாதம் என்றால் சூரியன் கடகத்தில் இருப்பார். சிம்மம் இவர் சொந்த வீடு. நீங்க ஷிஃப்ட் முடிஞ்சு வீட்டுக்கு வர்ரச்ச உங்க தெருமுனையில எந்த மாதிரி மூட்ல இருப்பிங்களோ அந்த மூட்ல சூரியன் இருப்பார்.

இவர் ஈகோவுக்கு காரகர். தீர்ந்து போற நிலையில உள்ள பேட்டரி சீக்கிரம் எக்ஸாஸ்ட் ஆயிரும்.அப்படி சனங்க ஈகோ எல்லாம் தலைவிரிச்சாடற மாசம் ஆடிமாசம்.

ஒரு நல்ல காரியம் நடக்கனும்னா  நாலு பேரு ஈகோவை கழட்டி வச்சுட்டு இறங்கினா தான் நல்லபடியா நடக்கும்.

ஆளாளுக்கு முறுக்கிக்கினு கிடந்தா நடக்குமா? மனக்கஷ்டம் தான் மிச்சமாகும்.அதுலயும் கில்மாங்கறது "மானம் ஈனம் சூடு சுரணை "எல்லாத்தையும் கழட்டி வச்சா மட்டுமே கிடைக்கிற சமாசாரம். தப்பித்தவறி கிடைக்குதுனு வைங்க. எப்படி கிடைச்சிருக்கும்?

அதட்டியோ ,மிரட்டியோ கிடைச்சிருக்கும். அந்த மாதிரி மன நிலையில குழந்தை உருவானா அதனோட கேரக்டர் எப்படி இருக்கும்/ மேலும் ஆடியில் சூல் கொண்டா சித்திரையில் குழந்தை பிறக்கும்ங்கறது கணக்கு.

 சித்திரை மாதம் குழந்தை பிறந்தா அதனோட ஜாதகத்துல சூரியன் உச்சத்துல இருப்பாரு. சூரியன் என்பவர் அகந்தையை தருபவர். சூரியன் கிரகக்கூட்டத்தின் தலைவர் என்பதால் அவர் உச்சம் பெற்ற ஜாதகத்தில் பிறந்த குழந்தை அதி விரைவில் அக்குடும்பத்தின் தலைவனாகும் நிலை வரலாம்.(அதாவது அப்பா காலி - பெரிய அண்ணன் காலி )  சூரியன் யோக காரகனா உள்ள லக்னத்துல பிறந்தாலே இதான் நிலைமை. இதுல பாவியாகி அ இருக்ககூடாத இடத்துல நின்னா இன்னா கதி?

பிராமணர்கள் நம்மை கூடாது என்று தடுத்து அவர்கள் மட்டும்  ஆடியில் திருமணம் செய்ய காரணம் "எங்களால் புலன்களை கட்டுப்படுத்த முடியும்" என்ற  அவர்களின் நம்பிக்கையே

தூள் பக்கோடா மாதிரி சில மேட்டரு பின்னால வருது பாருங்க.

1.மாசத்துக்கு 27 நாளா?
ஆமாம்னு ஒரு அய்யரு டிக்ளேர் பண்ணாரு. நம்ம புட்டபர்த்திக்காரர்  என்னைக்கோ வாய் தவறி 96 வயசு வரை வாழ்வேனுட்டாரு. பாவம் அல்பாயுசுல (அவர் கணக்குப்படி) பூட்டாரு. "உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"

மொத்தம் 27 நட்சத்திரம் தேன். சந்திரன் ஒரு ரவுண்டு முடிச்சா ஒரு மாசம் முடிஞ்ச மாதிரி தேனுட்டு கணக்கு காட்டி பாபா வாக்கு பொய்க்கலைனு  சொல்றாரு. நீங்க இன்னா சொல்றிங்க?
.
2.ரஜினி மேல் காப்பிரைட் வழக்கு:

ரஜினி காந்தோட பாபா சினிமா ஞா இருக்கா? (ஏன் நைனா பயமுறுத்தறேனு அலுத்துக்காதிங்க) அதுல வானத்துல பறக்கிற காற்றாடி தன் கைக்கு வரணும்னு ரஜினி மந்திரம் ஜெபிப்பாரு. காத்தாடி புதுககாதலி மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு ரஜினி கைக்கு வரும்.

இந்த மேட்டர் " ஆட்டோ பயாக்ரஃபி ஆஃப் எ யோகி" புஸ்தவத்துல இருந்து உருவப்பட்டிருக்கு.  எழுதினவர்: பரமஹம்ச யோகானந்தா

இத்தனைக்கும் மேற்படி புத்தகம் பக்கா காப்பிரைட் ரிசர்வ்டு கேட்டகிரில இருக்கு. ஆராச்சும் ஒரு கார்டு எழுதிப்போடுங்கப்பா. ரஜினி மேல வழக்கு வந்தா நாலு பதிவு சூடா எழுதலாம்ல.

3. கலைஞர் செய்திகள் : ( மே 27,2011 )

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான சார்ஜ் ஷீட்டில்  முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பெயர் சேர்க்கப்பட்டு  அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து  திமுக உயர்மட்ட செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் கூடி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தமிழக முன்னாள் துணை  முதல்வர் மு.க. ஸ்டாலின்  இது யு பி ஏ கூட்டணியின் ஒற்றுமையை குலைக்க நீண்ட நாளாய்  நடக்கும்  சதியின் ஒரு அங்கமே என்றும் இதற்காக திமுக மத்திய அரசுக்கு தந்துவரும் ஆதரவை  வாபஸ் பெறாது என்றும் தெரிவித்தார்.

( சத்தியமா இது காமெடிக்காக எழுதினதுங்கண்ணா மானங்கெட்டு போய் இதை கூட நெஜமாக்கிரப்போறாய்ங்க)

3. சின்னதா 2  கவிதைகள் :

நீ என்னை தொட்டு ஆந்திர அரசாய் இலவச மின்சாரம் வழங்கும்போது
தமிழக அரசாகி உன் கன்னங்களுக்கு சத்துணவு போட துடிக்கிறது மனசு

                              *  *   *
எறும்பு ஊர கல்லும் குழியும்.
என் கரங்கள் ஊர குழிந்ததுதான் உன் தொப்புளா?
.

No comments: