அன்பிற்குரிய வலைதள நண்பர்களுக்கும்,அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களுக்கும் வணக்கம்.
நண்பர்களே உலகம் எப்போதும் ஒன்று போலவே சிந்திக்கிறது ,யாராவது ஒருவர் ஒரு பக்கம் சாய்ந்தால் எல்லோரும் அதே பக்கம் சாய துடிக்கிறார்கள் ,தங்களுக்கு தேவையோ இல்லையோ ஏதோ ஒன்றோடு இணைத்து தங்களை அடையாளப்படுத்த துடிக்கிறர்கள்.
விளைவு களவாணிகளும் ,காமுகர்களும் ஆன்மீகவாதிகளாகிவிடுகிறார்கள்,நம்ம ஊரில் குளிர்பானங்கள் விற்பது கூட அப்பிடித்தான் ,உண்மையில் இந்த குளிர்பானங்கள் அவுரி வேர் கஷாயம் ,கண்டங்கத்திரி கஷாயம் ,போல தான் இருக்கிறது ,இவற்றில் பெரிதாக ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ,ஆனாலும் நம் மக்கள் இதை குடிப்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் ,ஏனென்றால் மேட்டுக்குடி மனிதர்களும் ,மேலைநாட்டினரும் இதை குடிப்பதால் ,இதைக்குடித்து தாங்களும் அதே போல ஒரு நிலையை அடைந்து விட்டதாக மயங்குகிறார்கள் .சரி விஷயத்திற்கு வருவோம் .
நண்பர்களே!
உண்மையான ஆன்மீகத்திற்கு சரியான அடையாளம் இருக்கிறது .நம் மெய்ஞானிகள் அதை எடுத்துவைத்திருக்கிறார்கள் ,நாம் அதை உணர்ந்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது .இந்த பதிவின் நோக்கமே அதை உணரவைப்பதுதான்.Read More
No comments:
Post a Comment