அண்ணே வணக்கம்ணே!
வம்பு வழக்கு வேணாம்னு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் 6 மாசத்துக்கு ஒன்னு வந்து மாட்டிக்குதுங்கண்ணா.
என்னவோ பெரியமன்ச தராவா கீதேனு அப்பப்போ பார்த்துக்கிட்டிருந்த
உஜிலா தேவி யை உஜாலா சொட்டு நீலம் இல்லாமயே வெளுக்க முடிவு பண்ணிட்டன்.
மேற்படி வலைப்பூவில் பா.ஜ.க வாசம் வீசுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டவன் நான். மேற்படி வலைப்பூ
//இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்// என்கிறது .
இதே பத்தியில் ஏசு என்ற இடத்தில் இந்துக்டவுளருள் ஒருவர் பெயரையும் கிறிஸ்தவர்கள் என்ற இடத்தில் இந்துக்கள் என்ற வார்த்தையையும் போட்டு எழுத உஜிலா தேவிக்கு மனம் + தில் இருந்தால் பா.ஜ.க வாசம் என்ற குற்ற்ச்சாட்டை வாபஸ் வாங்கிக்கொள்ள நான் தயார்.
வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுத அவர் தயாரில்லை என்றால் என் குற்றச்சாட்டு அக்மார்க் உண்மை என்று அர்த்தம்
பை தி பை அவன் அவள் அது தொடரை ஆவலுடன் படிக்கும் அந்த நானூறு பேரில் நீங்களும் ஒருவரானால் பத்தாம் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க
2 comments:
இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தாய் இருக்கப் போவது ஊழலும், தீவிரவாதமும் இல்லை. அதைவிடவும் இந்து மதவாதமே. இது இந்தியாவை பின்னோக்கித் தள்ளி இந்தியாவை பாகிஸ்தான் போல மதவெறி நாடாக்கி வளர்ச்சியில்லாமல் செய்யும் என்பது உண்மை.. அவற்றை சாதிக்க பாஜக, ஆர் எஸ் எஸ் போன்றவையும் அவர்களின் அல்லக்கைகளாக செயல்படும் பலரும் தமிழ்நாட்டில் பொல்லாச் சொப்பணத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இந்து மதவாதத்தை ஏற்றுக் கொள்ளாதத்தால் தான் மொக்கைக் காங்கிரஸ் கட்சியை இரண்டு முறை தேர்தலில் ஜெயிக்க பண்ணினார்கள் இந்திய மக்கள். ஊழலையும் மோசமான ஆட்சியை விடவும். இந்தியர்கள் முற்போக்கான சிந்தனையால் மதவாதத்துக்கு ரீவீட் அடித்தார்கள். இத்தனைக்கும் இந்திய மக்கள் தொகையில் 85 சதவீதம் இந்துக்களே !!! இன்னுமா இவர்களை வைத்து அரசியல் பண்ணலாமுனு இருக்கு பாஜாக.. அழிஞ்சு போயிடும்..... நல்லதொரு பதிவு
இக்பால் செல்வன்,
எங்கயோ ஆரம்பிச்சு 'இங்கன" வந்து சேர்ந்துர்ராய்ங்க.
உஜிலாதேவில ஒரு சில பதிவெல்லாம் ரெம்ப ரேஷ்னலா நல்லாவே இருந்திருக்கு.
ஆனால் பாருங்க இப்படி ஒரு பதிவு போட்டிருக்காய்ங்க.
ஆந்திராவுல வி.ஹெச்.பி காரவுக மல்ட்டி கலர்ல ஒரு ப்ரவுச்சர் போட்டு தெருத்தெருவா கொடுத்தாய்ங்க.
அதுல ஜெயேந்திர சரஸ்வதி கைது விவகாரத்தை காங்கிரசின் இந்து விரோத போக்கா சித்தரிச்சிருக்காய்ங்க.
கூலிப்படையை ஏவி கொலை செய்விக்கிற ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்துட்ட பிறவு ஜெயேந்திரருக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?
இப்போ நித்யானந்தாவுக்கு கர்னாடக பா.ஜ.க 'முட்டு' கொடுத்து வச்சிருக்கிறதா கேள்வி.
விட்டா உண்மையை போட்டு உடைக்கிற இந்த பதிவையும் இந்து விரோத போக்கா ஃபோக்கஸ் பண்ணுவாய்ங்களோ?
நிலைமை சரியில்லை .ஏமாந்தா பக்குனு பத்திக்கிறாப்ல இருக்கு. இந்த நிலையில இந்த மாதிரி போண்டாவுல விஷம் கணக்கான எழுத்துக்கள் ஏன்னு தான் கேட்கிறேன்.
அட எல்லாமதத்துலயும் தான் ஹிப்பாக்ரசி இருக்கு. அந்தந்த மதத்தை சேர்ந்தவன் அவனோட மதத்தை விமர்சிக்கட்டும்.
நாட்டுல நிலைமை சரியில்லிங்க..எல்லா மேட்டருக்கும் ஒரு விபரீத பின்னணிய கொடுத்து இப்படித்தேன் யோசிக்கனும்னு சொல்ல ஒவ்வொரு மதத்துலயும் சின்ன கூட்டம் இருக்கு.
இந்த சிறு குழுக்களை அந்தந்த மதத்தினரே புறக்கணிக்கனும்.
அப்பத்தேன் இந்தியா இந்தியாவா இருக்கும். இல்லேன்னா
இ
ந்
தி
யா
னுட்டு சிதறிப்போயிரும். ஒரே நாடா - பெரிய நாடா - ஓரளவுக்காச்சும் ராணுவ பலம் உள்ள நாடா இருந்தே இந்திய மீனவனை இலங்கை கடற்படையோட துப்பாக்கியிலருந்து காப்பாத்த முடியலை.
சிதறிப்போயிட்டா என்னாகும்?
Post a Comment