'>

Friday, April 29, 2011

அம்மை அவள் கையில்

ஆதி தேவன் அருள் வேட்டல்

எலி ஏறும் ஏந்தலே
புலி ஏறும் ஏந்திழையை
ஏற்றிப்பாடுதற்கே
போற்றி புகழுதற்கே

என் கனித்தமிழை கனிய விடு
கணிணியில் வடியவிடு
தனித்தமிழாய் தரணியெங்கும்
வலம் வர ஆணை கொடு

           -  நூல் -      

பற்றுச்செலவெல்லாம்
பண்ணிலே எழுதிட்டேன் - வாழ்வு
அற்ற குளம் ஆனாலும்
வற்றாதிருந்த தமிழ்
வற்றும்  நாளாச்சோ?

வான் வரை உயர்ந்திட்டு
வான் உறை தேவர் செவி
பற்றி இழுக்கும் தமிழ்
தரணியில் புதிராகி
புரியாது போனதென்றே
புவி மிசை  இறக்கி வைத்தேன்

அன்னையை அடுத்த பின்னே
அவள் எனில்
கருவாகி உருவாகி நடமாட
துவங்கிடவும்

அவள் கால் சலங்கை ஒலியதனால்
என்னில் துலங்கிட்ட
துரித மாற்றமெல்லாம்
தூய தமிழ் கொண்டே
கூறிட் துணிவு கொண்டேன்.

உரையில் சொல்லி வைத்தால்
பிறையெல்லாம் பிதற்றலாகும்
அகரம் அறியாத அறிவிலிகள்
தூற்றலாகும்

பண்ணில் இறுக்கி வைக்க
பண்டைத்தமிழ் ஆய்ந்த அறிஞரே அண்டிடுவர்
மறை பொருள் கண்டிடுவர்
பிறை மதி கொண்டோர்க்கும்
உட் பொருள் விண்டிடுவர்.

அம்மை அவள் கையில் பொம்மை என்றானேன் - தாய்
பசுவின் பின்னேகும் இளைய கன்றானேன்

மறுமைக்கு பாதையிட்டு பக்குவமாய் எனை நடத்தி -பின்
இம்மைக்கும் இடம் கொடுத்தாள் ட்

உமையெனை இமையெனவே காத்திட்டாள்
என்னுள் புதுமலராய் பூத்திட்டாள்

சினிமா மோகத்தில் சீமைக்கு பறந்தேகி
சீர் கெட்டு மீண்ட மகன்

உச்சியில் கை வைத்து
பிச்சியாய் கண் கலங்கி அன்னை ஒருத்தி ஆங்கே

மண் மகிமை உணர்த்துதற்போல்
மாதா அவள் எனக்கு தன் மகிமை உணர்த்திட்டாள்

அந்த மகன் ஏர் பிடித்து
விளை நிலத்தை உழுதாற்போல்

இந்த மகன் உள  நிலத்தில்
பீஜத்தை விதைத்திருந்தேன்

பொற்பதம் பிடித்த பின்னே
அற்புதமும் ஓர் அற்புதமோ?

நகரும் நகர் வாழும் நரரும் நகையாரோ நாளெல்லாம்.
பகரும் பதம் புரிந்தால் பகையாரோ பாரோரெல்லாம்

கண்ணார கண்டாலே கண்கட்டு என்றிடுவார்
வெறும் வாயாலே நான் சொல்ல ஏற்பரோ அவணியிலே

பெற்றதை நான் சொல்ல ஊற்றுகிறான் என்றிடுவார்
கற்றதை நான் சொல்ல சுற்றுகிறான் என்றிடுவார்

ஆரென்ன சொன்னாலும் தடையில்லை
அன்னையை அடுத்த பின்னே பின்னை ஒரு முடையில்லை


(தொடரும்)

4 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் முருகேசன் சார்,

கவிதை சூப்பர்,

//அம்மை அவள் கையில் பொம்மை என்றானேன் - தாய்
பசுவின் பின்னேகும் இளைய கன்றானேன்//

உங்கள் சரணாகதி கண்டு மகிழ்ச்சி..

//மறுமைக்கு பாதையிட்டு பக்குவமாய் எனை நடத்தி -பின்
இம்மைக்கும் இடம் கொடுத்தாள்//

அதென்ன மறுமைக்குப் பின் இம்மை ? புரியலையே தலை ?

Chittoor Murugesan said...

ஜானகி ராமன் சார்,
ஜெனரலா இந்த மாதிரி எல்லாம் நடந்தா உலகியல் ரீதியா எல்லாம் டம்மியாவே இருக்கும்.

ஆனால் நம்ம மேட்டர்ல இம்மைக்கும் அதாவது உலகியல் வாழ்க்கைக்கும் நல்ல ஒரு கிரவுண்டை ஏற்படுத்தி கொடுத்திருக்கா(ள்) அதுலதான் நாம வள்ளாண்டுட்டு இருக்கம்.

yoghi said...

ஆன்மீக லைன்ல் சரியான பாதையில் பயனித்துக்கொன்டிருப்பதாக தெரிகிரது
இலக்கை அடைய எல்லாம் வல்ல இரைவன் உஙகலுக்கு துனைபுரியட்டும்

MANI said...

தல உங்களுக்கு பாட்டெல்லாம் எழுத வருமா! பரவாயில்லயே.

////பண்ணில் இறுக்கி வைக்க
பண்டைத்தமிழ் ஆய்ந்த அறிஞரே அண்டிடுவர்
மறை பொருள் கண்டிடுவர்
பிறை மதி கொண்டோர்க்கும்
உட் பொருள் விண்டிடுவர்.///

///உரையில் சொல்லி வைத்தால்
பிறையெல்லாம் பிதற்றலாகும்
அகரம் அறியாத அறிவிலிகள்
தூற்றலாகும்///

நீங்க பண்ணிலே இனி பாடம் நடத்துங்கள் நாங்கள் மறைபொருள் விளங்கிக்கொள்கிறோம். உரையில் சொல்கிறேன் என்று சென்னை தமிழில் தாக்க வேண்டாம்.

கவி நன்றாக உள்ளது அடுத்த பகுதி எப்போது தல.