'>

Sunday, February 6, 2011

உங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்னு வாத்தியார் பாடி வச்சிருக்காருங்கண்ணா. உங்களை மட்டுமில்லை உங்கள சுத்தி இருக்கிறவுகள கூட அறிஞ்சிக்கிட்டா நெஜமாலுமே வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காம வாழலாங்கண்ணா. உங்க ஜன்ம ராசி/லக்னத்தை வச்சு உங்க கேரக்டரை சொல்லியிருக்கேண்ணா.

உங்க ராசிய நீங்க எப்படி டிரைவ் பண்ணிங்கங்கறது ரெம்ப முக்கியம் ஜாதகம், நட்சத்திரம்,பாதம், சந்திரனோட இருப்பை வச்சு டிரைவ் பண்ணியிருந்தா ரெம்ப நல்லது. அதான் சைன்டிஃபிக் அப்ரோச்.ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயர்ல முதலெழுத்தை வச்சு பார்த்தாலும் ஓகே. டோனி, பிங்கி மாதிரி இஷ்டாத்துக்கு வச்ச பேரை வச்செல்லாம் பார்க்கிறதை விட 12 கேரக்டரையும் படிங்க. உங்களுக்கு எது செட் ஆகுதோ அதான் உங்க ராசி ஓகே.(அனுபஜோசியம்னா இதான் பாஸ்!)

வெறுமனே உங்க கேரக்டரை மட்டும் கண்டுகிட்டு பக்கத்தை மூடிராதிங்க. உங்க அப்பா,அம்மா, அப்பப்பா,அம்மம்மா ( சிலோன் ரேடியோ சொல்வாய்ங்களே அந்த மாதிரி ) எல்லாரோடதையும் படிக்கனும்ல . பேசாம ஒரு ப்ரிண்ட் அவுட் கொண்டு போயிருங்க. ஒதவும்.

ஒரு ஹ்யுமேனிஸ்டான ஜோசியரா எந்த வித ஒளிவு மறைவுமில்லாம ரூ.250 கன்சல்டன்ஸி ஃபீஸா தர்ர க்ளையண்ட்ஸுக்கு சொல்ற பலன்களை அப்படியே இங்கன தந்திருக்கேண்ணா. பொத்தி பாதுகாத்துக்கங்க. இந்த பக்கத்தை ஆர்க்குட்,ஃபேஸ்புக்,கூகுல் புஸ்,டிவிட்டர் இப்படிப்பட்ட சைட்ல இருக்கிற உங்க ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் கண்ட மேனிக்கு ஷேர் பண்ணுங்க அண்ணாத்த ! அதென்னமோ ஓட்டு ஓட்டுங்கறாய்ங்களே அதையும் போட்டுத்தான் தொலையுங்களேன்.

உங்களை பத்தியும் தெரிஞ்சிக்காம,உங்கள சுத்தி உள்ளவுகளை பத்தியும் தெரிஞ்சிக்காம கோதாவுல இறங்கறது தற்கொலைக்கு சமானம்.

கட்டுச்சோறு கட்டிக்கொடுத்த மாதிரி வெறுமனே பலனை கொடுத்தாலும் படிச்சிட்டு போயிருவிக. இருந்தாலும் மனசாட்சி கேட்கமாட்டேங்குது . நிறைய ஜோசியர்ங்க இப்படித்தான் புஸ்தவத்தை படிச்சு மனப்பாடம் பண்ணி கதை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஆனால் நான் இந்த பலனை ஒர்க் அவுட் பண்ண வழியையும் சொல்லி வைக்கிறேண்ணா.

உங்கள்ள ஆர்வமுள்ளவுக கொஞ்சமா முக்கினா மஸ்தா மேட்டரு வெளிய வருங்கண்ணா. அதை எல்லாம் எனக்கு மெயில் பண்ணா நம்ம வலைப்பூவுல வெளியிடறேங்கண்ணா.

ராசி/லக்னங்களின் குண நலனை அறிய வழிகள்:
1.முதல்ல அந்த ராசிக்குனு கொடுத்திருக்கிற படத்தை பாருங்க. சின்னவயசுல படம் பார்த்து கதைசொல்லு வந்திருக்கில்ல. நம்ம ரிஷிகள் மகரிஷிகள் வெறுமனே கதை பண்ணிட்டு போயிரல தம்பி ! நிறைய ரோசிச்சு நமக்கெல்லாம் க்ளூ கொடுத்துட்டு போயிருக்காய்ங்க.
2.மேஷத்தை முத ராசியா கொண்டா உங்க ராசி எத்தனையாவது ராசினு பாருங்க. துவாதச பாவங்கள் தெரியுமில்லை. பாவ காரகத்வம் தெரியுமில்லை. அந்த ராசியை பாவமா கொண்டா அந்த பாவ காரக்த்வத்துக்கும் உங்க ராசிக்கும் பிரிக்க முடியாத ஒரு லிங்க் இருக்கிறதை புரிஞ்சிக்கிடலாம்.
3.உங்க ராசி/லக்னத்துக்கு அதிபதி யாருனு பாருங்க. அவரோட காரகத்வம் என்னனு பாருங்க. அவரோட காரகத்வம் உங்க லைஃபை நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். குளிர் காயறச்ச ரெம்ப நெருங்கியும் போயிரக்கூடாது (தோல் வெந்துரும்) ரெம்ப எட்டியும் வந்துரக்கூடாது குளிரும்னு சொல்லுவாய்ங்க. உங்க லக்னாதிபதி/ராசியாதிபதி உங்களுக்கு ரெம்ப நெருக்கமாயிர்ரதால தன்னோட காரகத்வத்துல கொஞ்சம் போல தீங்கும் செய்துருவாருங்கோ.

இனி உங்க குண நலன் களை பார்ப்போமா?
1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா உங்க மாதிரி பார்ட்டிங்கள விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும் மனசுல எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்) கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக. பணம், பேச்சு, குடும்பம்னால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே இந்த விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு துக்கமோ, நஷ்டமோ வந்தா உடனே ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.

4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
திடீர் கோபம் கொள்ளுதல், சில நிமிடங்களில் சமாதானமடைதல். பெரிய்ய விஷயங்களை சகித்து கொள்ளுதல், சின்ன விஷயங்களுக்கு பெரிதாக கோபித்தல் இத்யாதி குணங்களால் இவர் எப்படித்தான் பிழைக்க போகிறாரோ என்ற எண்ணம் குடும்பத்தார் மனதில் ஏற்படலாம். வீடு கட்ட முனையும் போது ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும். கையில் முழுப்பணத்தை வைத்துக்கொண்டே இறங்கவும். இந்த லக்னக்காரர்கள் வீடுகட்ட ஆரம்பித்து அதை ஒரு தவணையில் முடிப்பது சந்தேகமே
இவர் கடல் போன்றவர். கடலின் கரையோரம் அலையடித்தபடி இருக்கும். அதே போல் இவரும் ஒதகாத மேட்டருக்கெல்லாம் பதைச்சுக்கிட்டு இருப்பார். கடல் ஆழத்துல ரெம்ப அமைதியா இருக்கும். இவருக்குள்ளயும் ஆழ்மனதில் ஒரு வித அமைதி இருக்கும்.
கடல்ல எப்படி அனைத்துவகையான தண்ணீரும் வந்து சங்கமமாகிறதோ அதே போல் இவரும் பல்வேறு நபர்களின் குண நலன்களை கிரகித்து வெளிப்படுத்துவார்.
முகம் பார்க்கும் கண்ணாடி. எதிரில் நிற்கும் நபரின் முகமே ,முகபாவனையே இவரை ரெஸ்பாண்ட் ஆக வைக்கும். நேத்து முந்தா நேத்து நடந்ததெல்லாம் கணக்கு வைக்கமாட்டார்.
நேத்து என்ன நடந்திருந்தாலும் இன்னைக்கு நீங்க சினேக பூர்வமா புன்னைகைச்சா இவரும் உடனே ஸ்மைல் பண்ணுவார்.
இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் இருக்கும். தெய்வ பக்தி, இன்னபிற சென்டிமென்ட்ஸ் இருக்கும். தன்னை யாராவது காப்பாத்தனும்னு நினைக்கிறவரு. அதே சமயத்துல தன்னை சரணடைஞ்சவங்களை காப்பாத்த பெரிய பெரிய ரிஸ்க் எல்லாம் எடுப்பாரு.
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், (அல்லது இவர் வளர வளர தந்தையின் நிலை பலகீனமடைந்து வரும்) தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட். இவரை கண்டிப்பதோ,குறை கூறுவதோ கூடாது. மீறி செய்தால் நாம ஷெட்.

6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும் மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு ரிட்டர்ன் வாங்கி சாப்பிடுவாய்ங்க.
10. மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே) கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும் நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும். பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)

5 comments:

Unknown said...

எல்லா மீன ராசிக்கரங்களுக்குமே அது தான் கடைசி பிறவியா? கேது 12ல் நின்னா கடைசி பிறவின்னு சொலுறாங்களே.. அது இவங்களுக்கு பொருந்த்மா ?

ஒருவேளை மீன ராசியா இல்லம கேது 12ல் இருந்த்தா? .. இல்லை மீனராசியா இருந்து கேது 12ல் இல்லாம இருந்தா ?

மீன ராசியாவும் இருந்து கேது 12லும் இருந்தா?...

Unknown said...

ranjan
rranjan@….l.com
—- வ/மா/தி at 8:17பிற்பகல்

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், ஜோதிடம் என்பது உண்மைதான் என்றா? அப்படியானால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு பதில் கூற இயலுமா?

1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

6. சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?

7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

- இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் முழுமையாக/உண்மையாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

- ரஞ்சன்,

பிரிட்டானியா

அதற்கு எனது அன்றைய பதில்…

பார்க்க..http://ramanans.wordpress.com/2011/02/07/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Unknown said...

நல்ல ஆசிரியர்

வரகூரான் நாராயணன் said...

ராசிக்கா,லக்னத்துக்கா நீங்கள் எழுதியது?

Chittoor Murugesan said...

Two in one