அண்ணே வணக்கம்ணே,
என்னடா பதிவுக்கு மதிப்பு போடறான் விலை வைச்சுருவானோன்னு நினைச்சு கோச்சிக்கிடாதிங்க. இந்த பதிவு அஃபிஷியல் கன்சல்டன்ஸில நான் தர்ர பேக்கேஜ் மொத்தம் 3 பார்ட். இப்ப நீங்க படிக்கப்போற முன்னோட்டத்துக்கு என் மதிப்பு ரூ100 நாளைக்கு தரப்போற நவகிரக காரகம் மற்றும் பரிகாரங்கள் பதிவோட மதிப்பு ரூ 100 நான் கிரகங்களோட பலா, பலங்களை குத்து மதிப்பா கணிச்சு சொல்ற ஆக்சுவல் பலனோட மதிப்பு ரூ.50 தான். ஆக இன்னைக்கு நீங்க ரூ100 மதிப்புள்ள பதிவை இலவசமா படிக்கப்போறிங்க.
இந்த பதிவை போட என்ன காரணம்னு பார்த்துருவமா? அவாளை நான் திட்டித்தீர்க்க முக்கிய காரணம் வித்தையை அவிக மூடி வச்சதுதான். அது தங்களாவாக்கு மட்டுமேன்னு செயல்பட்டதுதான். அதே நேரம் முஸ்லீம்,பிரிட்டீஷ் படையெடுப்பு நிகழந்தப்போ தங்களோட வித்தைகள் விலை போகாத காரணத்தால துபாஷிகளாகி வித்தையை குப்பையில எறிஞ்சுட்டு பொழப்பை பார்க்க போயிட்டாய்ங்க. கதி கெட்டதுக, ஸ்க்ராப் பார்ட்டிங்க மட்டும் வித்தைய கட்டி அழுதுக்கிட்டிருந்ததுக. ( இதுல எந்த நிலையிலயும் வித்தையை விட்டுகொடுக்காத லட்சியவாதிகளும் இருந்திருக்கலாம் ஆனால் அவிக சொற்பம்)
நான் ஆன்லைன்ல ஜோதிட ஆலோசனை தர்ர சமாச்சாரம் தெரிஞ்சதுதான். விளையாட்டா ஆரம்பிச்சது ( இதையும் நான் ஆரம்பிக்கலை சனம் தான் ) பத்திக்கிச்சு. ரூ.250 கட்டணம் செலுத்துறவுகளுக்கு நான் என்னாத்த கொடுக்கிறேனு ஓப்பன் பண்ணிரனும்னு நினைச்சுத்தான் இந்த பதிவே. (அவாளை திட்டித்தீர்க்க ஒரு மோரல் இருக்கனும்லியா?)
மொதல்ல நான் கொடுக்கிற முன்னோட்டத்தை இந்த பதிவுல தரேன். நாளைக்கு இன்னம் கொஞ்சம் சரக்கை தரேன் ஓகே உடு ஜூட்..
ரிஷிகள் ,மகரிஷிகள் தம் வாழ்வை அர்ப்பணித்து வகுத்து தந்த ஜோதிட விதிகள், என் அனுபவம், தர்கம், கால மாற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டு அளிக்கும்
ஜனன ஜாதக பலன்
ஓம் கம் கணபதே நமஹ ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலசம்பதாம்பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
அன்புடையீர் ,
ஜோதிஷ சாஸ்திரத்தின் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற தொடர்பு கொண்டமைக்கு நன்றி.
முன்னுரை:
தாங்கள் எனது வலைப்பூவில் நான் எழுதி வரும் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை படித்து ஜோதிடத்தில் ஓரளவாவது அடிப்படை ஞானத்தை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வெறுமனே தங்கள் கேள்விகளுக்கு பதில் தந்தாலே தாங்கள் திருப்தி அடையக்கூடும்.என்றாலும் என் க்ளையண்ட்ஸை முடிந்த வரை எஜுக்கேட் செய்வது என் நோக்கமாகும்.
அதே நேரத்தில் ஜாதகபலன் கள் எழுதும் ஜோதிடர்கள் நட்சத்திரபலன் ராசி பலன்,லக்ன பலன் என்று விஸ்தாரமாய் எழுதுவர். இவையெல்லாம் இந்த கணிணி யுகத்தில் சின்ன தேடலில், ஒரு சில பஞ்சாங்கங்களிலும் கிடைக்கக் கூடிய பொதுப் பலன் களாகும். ஒவ்வொரு ஜாதகருக்கும் நடந்தே ஆக வேண்டிய அவசியமில்லை.
எனவே தேவையான இடத்தில் தேவையான அளவு ஆங்காங்கே கொடுக்கப் படும்.
எச்சரிக்கை:
தங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை பொருத்து ஏற்படக்கூடிய பலன்கள்எதையும் விடாது குறிப்பிட்டுள்ளேன். கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன். விரைவில் இது குறித்த விவரங்களை எனது வலைப்பூவில் வெளியிடுவேன்.
ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கு ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும்போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும்போது அது பல மடங்காகிறது.
ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .
மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.
எனவே நான் இங்கு தரும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. இப்போது வரை நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆக நான் இங்கு கூறியுள்ள பலன் 60 சதவீதம் நடந்தாலே நான் சூப்பர் ஜோதிடன் என்பதை மனதில் வைத்து பலனை படிக்கவும் .
ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி
ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை காட்டும். இதில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? முதல் பெட்டி தான் லக்னம். மொத்தம் 12 லக்னங்கள் உள்ளன. 9 கிரகஙள் உள்ளன. ஒவ்வொரு லக்னத்துக்கும் நல்லதை செய்யும் கிரகங்களும் உள்ளன ,கெட்டது செய்யும் கிரகங்களும் உள்ளன.
கடவுளின் மந்திரி சபை:
நவகிரகங்கள் கடவுளின் மந்திரிசபையில் மந்திரிகளை போன்றவையாகும். பிரதமர் மந்திரிகளுக்கு இலாகா பிரித்து கொடுப்பது போல் கடவுள் பூமியில் உள்ள எல்லா விஷயத்தையும் 9 ஆக பிரித்து அவற்றின் மீதான அதிகாரத்தை ஒவ்வொரு கிரகத்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிரகம் தங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அதன் இலாகாவில் உங்களை அடித்துக் கொள்ள ஆளிருக்காது. அதே கிரகம் கெட்டிருந்தால் அதன் இலாகாவில் நாயடிதான்.
12 சேனல்கள்:
ஜாதகத்தில் 12 சேனல்கள் உள்ளதாக சொன்னேன். அவற்றில் தெரியக் கூடிய விஷயங்களை இப்போது பார்ப்போம்.
முதல் சேனல்:(லக்னம்)
உங்கள் உடல்,மன நலம்,நிறம்,குணம்
2ஆவது சேனல்:
(தன பாவம்)தனம்,வாக்கு,குடும்பம்,கண்கள்
3 ஆவது சேனல்:
சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்
பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்
4ஆவது சேனல்:
தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்
5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,
6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாமன்,வயிறு
7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
9.ஆவது சேனல்:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,
சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
10ஆவது சேனல்:
வாழும் வழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோகம்,வியாபாரம்
11.ஆவது சேனல்:
மூத்த சகோதிரி/சகோதரன்,லாபம்.
12ஆவது சேனல்:
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.
( அப்பாடா இனி பலன் சொல்லும்போது உடுப்பி ஹோட்டல் சர்வர் மாதிரி ஒவ்வொரு தடவையும் பாவ காரக்த்வங்களை ரிப்பீட் பண்ணாம டிவி மெக்கானிக் மாதிரி பலான சேனல் அவுட். பலான சேனல் சூப்பர்னு சொல்லிரலாம்)
எச்சரிக்கை:
கிரகங்களையே உங்களிடம் பேச வைக்கப்போகிறேன். இந்த முறையில் பலனை தருவதால் தசாபுக்தி பலன் என்று தனியே தரும் அவசியம் இருக்காது. அந்தந்த தசா நாதன் ,புக்தி நாதன் உங்களிடம் பேசியதை படித்து பார்த்தால் போதும். அந்தந்த கிரகம் தன் தசை,புக்தியில் என்ன பலன் நடைபெறும் என்று தெரிந்துகொள்ளலாம்..
1 comment:
ரொம்பவும் informative-ஆ இருக்குங்க பகிர்வதற்கு நன்றி!
Post a Comment