நிர்வாண உண்மைகள் வலைப்பூவில வெளியான கார்மேக ராஜா @ திருப்பூர் ராஜாவின் வில்லங்கமான (ச்சொம்மா தமாசுக்கு) கேள்விகளுக்கு விளக்கமான பதில்கள் தொடர்கின்றன.
//2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம்.//
கரீட் தான் தம்பி. ஆனால் இங்கன ஒரு நேக் சொல்லித்தாரன். லக்னம்,லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி ரெண்டுல எது வலிமை பெற்றிருக்குன்னு பாருங்க .. அந்த பக்கமா சாஞ்சு பலன் சொன்னா இன்னம் பெட்டர் ரிசல்ட்ஸ் கிடைக்கும்.
இன்னொரு நேக்கும் சொல்றேன். லக்னம் உடலை காட்டும். ராசி மனசை காட்டும்
( சந்திரன் நின்ன ராசிதானே ராசி- சந்திரன் மனோகாரகன் இல்லியா அதனால) . லக்னாதிபதியோட தசை நடந்தா லக்னம் ,ராசியாதிபதியோட தசை நடந்தா ராசி பவர் ஃபுல்லா வேலை செய்யும் ராசா.
இன்னொரு நேக்கும் சொல்றேன். மன்சன் ஒரு 30 வயசுவரை உடம்பு சொல்றத கேட்பான். ( பசிச்சா திம்பான், தினவெடுத்தா கெட்ட காரியம்) ஆனால் 30க்கு மேல உடல் தேவைகள் ஓரளவு ஓஞ்சு போயி நல்லது கெட்டதை மனசால ரோசிக்க ஆரம்பிப்பான். ( சில மிருகங்கள் 90 வயசுல கூட பேத்திய ரேப் பண்ணீரும் அது வேற கதை. நான் சொல்றது மன்சாளுக்கு. மிருகங்களுக்கில்லை.
ஜாதகரோட மென்டல் மெச்சூரிட்டிய ஓரம் சாரமா பார்த்து பார்ட்டி உடலளவுல வாழுதா மன வெளிக்கு போயிருக்கானு பார்த்தும் சொல்லனும்.
//ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?//
நம்ம பஞ்சை (Punch) இன்னொரு தாட்டி சொல்ல வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.
எண்ணம் போல் மனம் , மனம் போல் வாழ்வு. மனசு சஞ்சலமானது. எப்படிப்பட்ட வீரனும் ஒரு செகண்ட்ல பேதியாகிர்ரான். எப்படிப்பட்ட கோழைக்கும் ஒரு செகண்ட்ல வீரம் வந்துருது. சந்திரன் ரெண்டேகால் நாளைக்கு ராசி மாறிர்ரான். 24 மணி நேரத்துல நட்சத்திரம் மாறிர்ரான். 6 மணி நேரத்துல பாதம் மாறிர்ரான். (சில நேரம் ராசியே மாறிப்போகும் - உம் ரிஷபத்துல கிருத்திகை முதல் பாதம் மேஷம் ,இரண்டாம் பாதம் ரிஷபம்.
மனசுக்கு லாஜிக் தெரியாது.படக்குனு கரைஞ்சிரும். படக்குனு சரண்டர் ஆயிரும். வம்சத்தையே திவாலாக்கிரும். வம்சத்தையே தூக்கி நிறுத்திரும் ஏறினா ரயிலு,இறங்கினா ஜெயிலு. அதனால தான் சந்திரனுக்கு அம்மாம் முக்கியத்துவம்.
3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).
ஒரு வேலைய நிமிஷத்துல மிஷின் செய்யமுடியும்னா அந்த வேலைய மனுஷன் செய்யறது மனுஷ சாதிக்கே அவமானம் அதுக்காக வேலையே தெரிஞ்சிக்காம இருக்கிறது வித்தைக்கு துரோகம். வேலை தெரிஞ்சி வச்சிக்கனும் .ஆனால் மிஷினை உபயோகிக்கனும். அது சரியா தப்பானு கிராஸ் செக் பண்ற கப்பாசிட்டி இருக்கனும். சாஃப்ட் வேர் வேலை செய்யலை...... பவர் கட்.....இன்டர் நெட் வேலை செய்யலை - அட குக்கிராமத்துல இருக்கோம் அப்ப என்னா செய்யறது .அதனால நிச்சயமா வேலை தெரிஞ்சிக்கனும். அட்லீஸ்ட் களவும் கற்று மற மாதிரி கத்துக்கிட்டாச்சும் மறந்துரனும். ஆத்திர அவசரத்துல அது மூன்றாம் நாள் ஏசு உயிர்த்தெழுந்தாப்ல எழுந்துரும்.
//திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும்// இது லட்சியம். ஆனால் ராசி பாவசக்கரத்தை பார்க்க வேண்டியது அவசியம். இன்னா தமாசுன்னா 90% ஜாதகத்துல ராசிக்கும் பாவத்துக்கும் வித்யாசமே இருக்கிறதில்லை. அதனால தான் ராசிச்சக்கரத்தை வச்சி காலத்தை ஓட்ட முடியுது.
4. அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?
தமிழ்ல வேணா அப்படி இருக்கலாம். தெலுங்குல நிச்சயம் யூஸ் பண்றோம் ( நான் உட்பட). ராசிச்சக்கரம் என்பது பக்காவான வட்ட வடிவில் இல்லை. அதனால 360 டிகிரி அப்சல்யூட்டா வர வாய்ப்பே இல்லை. அதுல ஏதோ மிச்சம் சொச்சம் ஜூனு விழுதுன்னு அதை அஜீஸ் பண்ண அபிஜித்தை ஏற்பாடு பண்ணியிருப்பாய்ங்க.
தம்பி! என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லவா ? ஜோதிஷம்ங்கறது ஒரு சரிய்யான கடைக்கால் மேல எழுப்பப்பட்ட கட்டடம். கட்டிடத்துல தப்பு இருக்கலாம்.ஆனால் அடிப்படை பக்கா.இல்லாட்டி இத்தனை ஓட்டைகளோட இந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?
5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!
கரீட். சந்திரன் ஜல கிரகம்னு ஜோதிஷம் சொல்லுது. (ஆதி நாள்ளருந்து) அங்கன வாட்டர் கன்டென்ட் இருக்கிறதா முந்தா நாள் தானே விஞ்ஞானம் சொல்லுச்சு. பல்லு,இதயம் ரெண்டுத்துக்கும் சூரியன் தான் காரகம்னு ஜோதிஷம் சொல்லுது. (ஆதி நாள்ளருந்து). ஆனால் மிக சமீபத்துல தான் ஒரு சர்வே பண்ணி பல் நோய் உள்ளவுகள்ள அதிக சதவீதம் பேருக்கு இதய நோய் வந்திருக்கிறதா ப்ரூவ் பண்ணாய்ங்க. இந்த மாதிரி இன்னம் நிறைய ஸ்டாக் இருக்கு. நான் என்ன சொல்றேன்னா பூனை எந்த கலரா இருந்தாலும் அது எலிய பிடிக்கனும். ஜோதிடர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒவ்வொரு பஞ்சாங்கத்துலயும் 12 ராசிக்காரவுகளுக்கும் எந்தெந்த நாள்ள சாவுக்கு சான்ஸ் இருக்கு, பெண்டாட்டிய கொளுத்திர வாய்ப்பிருக்குனு போடனும். அந்த தேதிகள்ள அரசு போக்குவரத்து நிறுவனங்களில் வேலை செய்யும் குறிப்பிட்ட ட்ரைவர்களுக்கு ட்யூட்டி போடக்கூடாது. மத்தவுகளூம் ட்ரைவிங்கை அவாய்ட் பண்ணலாம் .,இப்படி ஜோதிஷத்தை பல வகையில பப்ளிக் இன்டரஸ்ட்ல யூஸ் பண்ணனும். இப்படிபல திட்டம் இருக்கு தம்பி.
6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?
மதுரையில அழகிரி இருக்காரு. அவரோட க்ளோஸ் சர்க்யூட்ல சிலர் இருப்பாய்ங்க. இவிகளை பிடிச்சாத்தான் வேலை நடக்கும்.இவிகளுக்கு பிடிக்கலைன்னா டவுசர் கிழியும். அதே சமயம் அழகிரி சாரோட சர்க்யூட்ல ஆயிரக்கணக்கான வட்டம் ,சதுரம்லாம் இருக்கும். எல்லாத்தையும் கண்டுக்கிட்டா கண்ணை கட்டுமே அப்படித்தான் பெரியவுக மத்த துணைக்கோளையெல்லாம் கண்டுக்காம விட்டிருப்பாய்ங்க
7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?
அய்யோ... அய்யோ.. ராகுன்னா மோசடி, கேதுன்னா விரக்தி. இன்னைக்கு மனித வாழ்வை ஆள்றதே இந்த ரெண்டு கான்செப்ட் தான். மேலும் நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்ச நாள்ள வாரத்துக்கு ஒன்னு ரெண்டு தான் தோஷ ஜாதகம் வரும். இன்னைக்கு ஒன்னு ரெண்டு தான் சுத்த ஜாதகம் வருது. இந்த நிலையில ராகு கேதுவை விட்டுட்டு ஜோசியம் சொன்னால் கோவிந்தாதான். மேலும் ராகு,கேதுக்கள் மிலேச்சர்கள் என்னும் வெளி நாட்டினரை,பிற மொழியினரையும் காட்டும் கிரகங்களாகும் எப்போ முஸ்லீம் படையெடுப்பு துவங்கியதோ அன்னைக்கே ராகு,கேதுவுக்கு பலம் கூடிப்போச்சு. இன்னைக்கு வேற விதமா படையெடுக்கிறாய்ங்க. க்ளோபளைசேஷன். அதனால ராகு கேதுவை விட்டுட்டு பலன் சொல்றதெல்லாம் வேணா பாஸ்
8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?
ஸ்டேஷன்ல எஸ்.ஐ வரச்சொன்னாருன்னு ஒடனே தெரிஞ்சா ஒடனெ ஸ்டேஷன் போயிரலாம் ( கவுன்சிலரையோ நிருபரையோ சப்போர்ட்டுக்கு பிக் அப் பண்ணிக்கிட்டு) . நமக்கு தெரியலை. நாம பாட்டுக்கு ஊர் சுத்திக்கிட்டு குட்டிகிட்ட கடலை போட்டுக்கிட்டு இருக்கிறச்ச எஸ்.ஐ ஜீப்புல வந்துட்டாருனு வைங்க சீன் நாறிடும்ல. அதனால தான் ஜோசியம்.
அடிமைத்தொழில் செய்யற நாள் வரப்போவுதுனு முன் கூட்டி தெரிஞ்சா அலப்பறைய குறைச்சுக்கிடலாம்ல. ஆமை தன் கால்களை ஓட்டுக்குள்ள இழுத்துக்கறாப்ல இழுத்துக்கலாம்ல.
திடீர்னு ஒரு நாள் ரோட்டுக்கு வரதை தடுக்கலாம்ல.
9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.
நீங்க சொல்றதெல்லாம் குடுமி பார்ப்பான் சொல்ற பரிகாரத்துக்குத்தான் பொருந்தும் . நீங்க என்னோட ந்வகிரக தோஷத்துக்கு நவீன பரிகாரம், ஜாதகத்தை செயலிழக்கச்செய்வது எப்படி? நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை போன்ற பதிவுகளை படிச்சு பாருங்க.
நம்ம பரிகாரத்தோட நோக்கம் நவகிரகங்களோட வேக்குவமை ஏதோ ஒரு வழில எக்ஸாஸ்ட் பண்ணி அதுக்கு வேலை கொடுத்துர்ரதுதான். உ.ம் செவ் சரியில்லை.விபத்து -கொலை முயற்சி உறுதின்னா ரத்ததானம் பண்ணிர்ரது
10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.
இந்த கேள்வியும் மேற்படி ஐயரு மாருக்கு ரீ டைரக்ட் ஆகவேண்டியது. ஜோதிடம் கேட்பது எப்படி?ன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க. நவ கிரகங்கள் எல்லாம் ஜஸ்ட் பேரர்ஸ். இங்கன விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கிற ஹோஸ்ட் காட் தான்ங்கறது நம்ம ஸ்டாண்ட். கிரகமும் கடவுளோட படைப்புத்தானே. நீ என்ன எம்.எல்.ஏவானு எம்.எல்.ஏ சாரோட மச்சானை முறைச்சிக்க முடியுமா?
11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).
இதைப்பற்றியும் விவரமா எழுதியிருக்கேன். உங்க பிறப்பு எண், கூட்டு எண், பெயர் எண் இத்யாதிக்குரிய கிரகம் உங்க ஜாதகத்துல பலமா இருந்தாதான் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகும். ஆனால் நீங்க எந்த தேதில பிறந்திருந்தாலும் பெயர் எண் எதுவா இருந்தாலும் ஜாதகம் ஒர்க் அவுட் ஆகும்.
12. ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?
பாஸ்! நான் பிச்சை எடுத்தப்ப கூட பணம் சம்பாதிக்கனும்னு நினைச்சதே இல்லை. "பணம் பணம் பணம்"ங்கற நாவலை எழுதின எண்டமூரி வீரேந்திர நாத்துக்கு இந்திய வல்லரசு கனவுகளை மெயில்ல அனுப்பினப்ப இன்னொரு தாட்டி அனுப்பினா போலீஸ் கமிஷ்னருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்னாரு. அன்னைக்கு டிசைட் பண்ணேன் தாளி பணம்னா என்ன ? அதை எப்படி சம்பாதிக்கிறதுன்னு.
எங்கம்மா என்னை பெத்தப்ப இந்த எண்ணம் எனக்குள்ள இல்லை. திடீர்னு பிறந்தது.ஒவ்வொரு எண்ணம் பிறக்கறப்பயும் நாம புதுசா பிறக்கறோம் பாஸ். அந்த மாதிரி தான் நாடும். தலையெழுத்து மாறுதுல்ல.
//இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, இன்னொரு நாள் அதையும் கேட்கிறேன்.//
அய்யயோ இன்னும் ............நிறைய சந்தேகங்களா? ரூம் கீம் போட்டு ரோசிக்காதிங்க தம்பி.. இன்னைக்கு உள்ள சந்தேகங்களை மட்டும் கேளூங்க ( ச்சொம்மா காமெடிக்கு) நீ கேளூ ராசா..
No comments:
Post a Comment