'>

Saturday, October 23, 2010

ஜோதிட சாஸ்திர மர்மங்கள்: II

(முகேஷ் மாயா உரையாடல் தொடர்கிறது.உரையாடலின் துவக்கம் ஞா இருக்கில்லியா? மாயாவுக்கு 42 வயசுல மாசிவ் ஹார்ட் அட்டாக் வருது. ஏன் எனக்கு மட்டும்னு கேட்கிறா ஒரு காலத்துல ஜோதிஷத்துல ஆராய்ச்சி பண்ண பார்ட்டியான முகேஷ் அதீயோடந்தமா விளக்கம் தரான் )

நேற்றைய பதிவின் சுருக்கம்:

இதயம் ராஜ உறுப்பு. சூரியன் ராஜகிரகம்.அதனால சூரியன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் வர வாய்ப்பிருக்குன்னுட்டு  முகேஷ் சொல்றான். மாயாவும் முகேஷும் தொடர்ந்து பேசறாங்க  கேளுங்க.

"முகேஷ் எனக்கொரு சந்தேகம் .. நான் எனக்கு ஏன் மாசிவ் ஹார்ட் அட்டாக் வந்ததுனு தான் கேட்டேன். ஆனால் நீ கண்டதையும் என் பிரச்சினையோட தொடர்பு படுத்தி பேசிக்கிட்டே போறயே"

"அப்படி போடு அரிவாளை.  இந்த படைப்புல ஒவ்வொரு விஷயத்துக்கும் மத்த 99 விஷயத்துக்கும் தொடர்பு உண்டு. கேயாஸ் தியரி. ஹார்ட்டுன்னா அது என்ன  லவுட் ஸ்பீக்கர் மாதிரி ஒரு சவுக்கு கம்பத்துல கட்டிவைக்கப்பட்டிருக்கா? அது மனித உடல்ல ஒளிச்சு வைக்கப்பட்டிருக்கு. மனித உடலை பாதிக்கிற எல்லா அம்சங்களும் இதயத்தையும் பாதிக்கும். உதாரணமா: பல்,இதயம் ரெண்டுக்கும் காரகன் சூரியன்னு ஜோதிஷம் சொல்லுது. லேட்டஸ்டா நடந்த ஒரு சர்வேல  இதய பிரச்சினை உள்ளவுகளுக்கெல்லாம் இளமையில பல் பிரச்சினை இருந்ததா தெரிய வந்திருக்கு"

"எனக்கு சின்ன வயசுல நாலு பல் போச்சு. நான் ஏதோ சாக்லெட் சாப்பிட்டதாலனு நினைச்சேன்"

"சாக்லெட்டுங்கறது புறக்காரணம். சாக்லெட் சாப்பிடனுங்கற எண்ணம் ஏன் உனக்கு வந்தது? உற்சாக குறைவு. காரணமா உடம்பு க்ளூக்கோஸ் கேட்குது. நீ சாக்லெட் சாப்பிடறே. பல் போச்சு. உற்சாக குறைவுக்கு காரணம் சூரிய பலக்குறைவுதான்"

"போப்பா நீ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடறே"

"இல்லை கண்ணு.. நான் இந்த இயற்கைய துப்பறியறேன். எனக்கு கிடைச்ச துப்புகளை உன்னோட பகிர்ந்துக்கறேன். எடுத்தா எடு விட்டா விடு"

" இதய பிரச்சினைக்கு பல் பிரச்சினை ட்ரெய்லர்னே. பல் பிரச்சினைக்கு ட்ரெய்லர் என்ன?"

"இருக்கு.  நீ பிறந்த பிற்பாடு உங்க அப்பா ஸ்டெப் பை ஸ்டெப் ஃபேட் (fade) ஆயிக்கிட்டே வந்திருப்பாரு"

"ஆமா இதுவும் கரீட்டுதான். ஆனால் இதுக்கும் பல்லுக்கு என்ன சம்பந்தம்?"

"இருக்குடி கண்ணு.. அப்பா ஸ்ட்ராங்கா இருக்காருனு வை.பிள்ளை எந்தவித ஸ்ட் ரெஸ்ஸும், இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸும் இல்லாம சாதாரணமா இருப்பான்.  அவன் படிப்பு, வேலை தேடறது இத்யாதியெல்லாம்  பதைப்பில்லாம நடக்கும். பையன் கான்ஃபிடன்டா இருப்பான். அவன் உடம்பும் அதுக்கேத்தாப்ல நார்மலா இருக்கும்.
சப்போஸ் இவன் பிறந்த சில வருஷத்துலயே அப்பன் நாறிட்டானு வை. மேலுக்கு என்னதான் பொறுப்பில்லாம இருக்கிறதா தெரிஞ்சாலும் உள்ளூற அவனுக்குள்ள ஒரு பதைப்பு இருக்கும்.  பதறி செய்யற எந்த காரியமும் சிதறும். இதனால அவனுக்குள்ள தன்னம்பிக்கையின்மை,தடுமாற்றம் ஏற்பட்டுரும். உயிர்களின் அடிப்படை உணர்வு, தேவை சுதந்திரம். ஆனால் அவனோட தோல்விகளால அவன் அடிமையாக முன் வரான் .அடிமையா மாறிர்ரான். ஆனால் அவனோட ஆத்மா மட்டும் ( சூரியன் ஆத்ம காரகன்)  சுதந்திரத்துக்காக தவிச்சிக்கிட்டே இருக்கும். இந்த இரட்டைத்தன்மையால அவன் பாடில பயோ கெமிஸ்ட்ரியே மாறிரும்.  கால்ஷியம் சஃபிஷியன்டா இருந்தாதான் பல்,எலும்பு,முதுகெலும்பெல்லாம் ஹெல்த்தியா இருக்கும். இதெல்லாம் ஹெல்த்தியா இருந்தா ஆட்டோ மேட்டிக்கா தன்னம்பிக்கை கூடும். சுதந்திர தாகம் பெருகும். ஆனால் அவனோட சர்வைவலுக்கு ஆபத்துவந்துரும். இதனால அவன் பாடி கால்ஷியத்தை அப்சர்ப் பண்றதை குறைச்சுக்கும்.அதனால பல் எலும்பு முதுகெலும்பெல்லாம் பாதிக்கும் எதிர்காலத்துல இதயபிரச்சினையும் வரும்"

"முகேஷ்.. இதையெல்லாம் சீரியஸாதான் சொல்றியா ? இல்லை நாம என்ன சொன்னாலும் இவ கேட்டுக்குவானு பீலா விடறியா? ஒன்னுமே புரியலை. நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை"

"அது சரி நோகாம கேட்டுக்கற உனக்கே இந்த ரேஞ்சுல குழப்பம் வரும்போது பேய் பங்களாவுக்குள்ள தனியாளா நுழைஞ்ச மாதிரி இந்த ஆராய்ச்சில இறங்கின எனக்கு எப்படி இருந்திருக்கும்?"

"சரிப்பா மேலே சொல்லு"

"இதயத்துக்கு மட்டுமில்லே தலைக்கும் சூரியன் தான் காரகன்."

" த பார்ரா என்னவோ பிரதமர் மந்திரிகளுக்கு போர்ட் ஃபோலியோ பிரிச்சு கொடுத்தமாதிரி இருக்கே"

" தொலைக்காட்சி சேனல்ஸ் வச்சிருக்கிற திமுகவுக்கு தொலைதொடர்பு துறைய கொடுத்தாய்ங்களே அந்த மாதிரி அலப்பறை எல்லாம் இங்கே  கிடையாது. தற்குறிக்கு கல்வித்துறை,  நித்ய ரோகிக்கு மருத்துவத்துறைனு கொடுக்கிற பிசினஸ் எல்லாம் கிடையாது. தலைக்கும் ,இதயத்துக்கும் லிங்க் இருக்கு. இது ரெண்டுத்துக்கும்  சூரியனுக்கும் லிங்க் இருக்கு. அதனால தான் ரிஷிகள் தலை,இதயம் ரெண்டும் சூரியனுடைய காரகம் கொண்டவைனு சொல்லியிருக்காய்ங்க"

"எப்டி எப்டி? சூரியனுக்கும் தலைக்கும் என்ன சம்பந்தம்?"

"சூரியனோட கதிர்கள் மொதல்ல டச் பண்றது தலையைத்தான். மண்டை பிளக்கிற வெய்யில்ல கில்மா ஜோக்கே சொன்னாலும் சிரிப்பு வருமா? வராது.  மனுஷ உடம்புல ஆதி நாட்கள்ள இருந்த ரோமங்கள் எல்லாம் உதிர்ந்து போச்சு. ஆனால் தலையில உள்ளது மட்டும் ஏன் கொட்டிப்போகலை?"

"மனிதன் ஆடை அணிய ஆரம்பிச்சான். அதனால வெயில்,குளிர்லருந்து மனித உடலை காக்க  ரோமத்தோட அவசியம் குறைஞ்சு போச்சு அதனால மனித உடல்ல இருந்த ரோமங்கள் உதிர்ந்து போச்சு.  தலைல உள்ளது மட்டும் ஏன் உதிரலைன்னா.. எப்படி பதில் சொல்றது புரியலியே?"

"என்னதான் இண்டோர்லயே காலத்தை ஓட்டினாலும்,என்னதான் தொப்பி,ஹெல்மெட் அணிஞ்சாலும் ஏன் மொத்தமா கொட்டலை? அதுவும் இளமையில ஏன் கொட்டறதில்லை?"

"யப்பா நீ கே.பி.சுந்தராம்பாள் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே போனா எப்படி? பதிலையும் சொல்லு முகேஷ்"

"சொல்றேன். இளமையில தலை முடி கருப்பா இருக்கு. கருப்பு  நிறத்துக்கு சூரிய வெப்பத்தை கிரகிச்சிக்கிற ஷக்தி அதிகம். அதனாலதான் தலை முடி கருப்பா இருக்கிறவரை இளைஞன்ல தன்னம்பிக்கை, ஈகோ அதிகமா இருக்கு. இந்த ரெண்டுக்கும் சூரியன் தான் காரகர்"

"அது சரி ஹேர் டை போட்டுக்கிட்டா?"

"இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்யாசமில்லையா? மெய்பல்லுக்கும் பொய் பல்லுக்கும் வித்யாசமில்லையா? உடலின் நிறமிகளுக்கும் - ஹேர் டைல உள்ள கன்டென்டுக்கும் தாய்ப்பாலுக்கும், டப்பா பாலுக்கும் உள்ள அளவு வித்யாசம் இருக்குமே"

"சரிப்பா.. இளமையிலதான் ஈகோ அதிகம்ங்கறே.. சில கிழவாடிகளுக்கு சுடுகாட்டுக்கு போறச்ச கூட ஈகோ இருக்கே"

" ஈகோங்கறதே தன் மேல, தன் திறமை மேல  உள்ள சந்தேகம் தான். இளைஞன் தன்னை,தன் திறமையை  பிரயோகப்படுத்தாததால ஈகோவை வளர்த்துக்கறான்.கிழவாடி எக்ஸாஸ்ட் ஆயிட்டமோங்கற சந்தேகத்துல ஈகோயிஸ்ட் ஆகிறான். "

"ஓகே ஓகே.. சூரியனுக்கும் தலைக்கும் உள்ள தொடர்பு இவ்ளதானா?"

"இருக்கு. இன்னம் இருக்கு. மாயா! எண்சான் உடலுக்கு சிரசே பிரதானம்னு சொன்னாய்ங்க. சிரசுல மூளை இருக்கு. மூளையில எண்ணங்கள் இருக்கு. மனித உடலின் இயக்கங்களை  சுரப்பிகள் சுரக்கும் இரசாயனங்கள் கட்டுப்படுத்துது. அந்த  சுரப்பிகளை சுரப்பிகளின் ராஜா ஹைப்போதலாமஸ் கண்ட் ரோல் பண்ணுது.
அந்த ஹைப்போதலாமஸை  நம்ம எண்ணங்கள் கட்டுப்படுத்துது.  எண்ணங்களின் மூலம் என்ன செல்ஃப். தன்னை இந்த இயற்கையிலிருந்து வேறுபடுத்திபார்க்கிற அறிவு தான் செல்ஃப். இதுதான் ஈகோவா டெவலப் ஆகுது.  ஈகோவை தர்ரது சூரியன். ஈகோலருந்து எண்ணங்கள் பிறக்குது . எண்ணங்கள் எங்கே பிறக்குது ?மூளையில பிறக்குது. மூளை தலைக்குள்ள இருக்கு. ஆக எண்ணங்களுக்கு  நிலையமான மூளைய வச்சிருக்கிற சிரசுக்கும், அந்த எண்ணங்களுக்கு ஏற்ப தன் துடிப்பை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்யற  இதயத்துக்கும் நெருங்கின தொடர்பிருக்கு. ஓகேவா."

"அய்யய்யோ ரொம்ப டெக்னிக்கலா இருக்குப்பா?"

"டெக்னிக்கலா இல்லைம்மா லாஜிக்கலா இன்னம் சொல்லப்போனா சைக்கலாஜிக்கலா இருக்கும்"

"ஈகோவுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நாளைக்கு  சொல்றேன்.  "

No comments: