அண்ணே வணக்கம்ணே,
ஜோதிட சாஸ்திர மர்மங்கள்னு ஒரு பதிவை போட்டேன்.அதை ஒரு தொடர்பதிவா தொடர முடிவு பண்ணேன். டீப்பா கொண்டு போகனும்னா கவுண்டர் பார்ட் தேவை . அதுக்கு "உனக்கு 22 எனக்கு 32" ஜில் தொடரின் பாத்திரங்களை உபயோகிக்க திட்டமிட்டேன். ( முன்னுரைய படிக்காதவுக இங்கன அழுத்தி படிச்சுருங்க) இப்போ பதிவுக்கு போகலமா? ( முகேஷ் தன்னிலையில் சொல்லும் விதமாக எழுதியிருக்கேன்)
மறு நாள் விடியல் 4 மணிக்கு மாயா வந்து எழுப்பினாள். அந்த நேரத்துக்கே குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருந்த மாயாவ பார்க்க வயித்துக்குள்ள ஒரு கலவரம்.
" ஏய்..என்ன இது பிசாசு மாதிரி இந்த நேரத்துக்கு ."
"எனக்கு மட்டும் ஏன் இப்படினு கேட்டேன் இல்லை .. நீதானே நாளையிலருந்து சொல்றேன்னே . நீயும் போய் குளிச்சுட்டு வா "
குளிச்சேன். பூஜை அறைக்கு போய் உட்கார்ந்தோம். வெள்ளை வேட்டியும் மார் மேல கைத்தறி துண்டுமா நான். மெருன் கலர் நூல் புடவையும், லேசான மஞ்சள் பூச்சுமா மாயா.
"ஒன்னு சொல்லவா?"
"ஊம்"
"உன்னை இந்த கெட்டப்ல பார்த்த பிற்பாடுதான் நீ என் பொஞ்சாதிங்கற மேட்டரே ஞா வருது.........ஊஊஊஊஊ ஆஆஆஆஆ" (கிள்ளல்) அதுக்கில்லை மாயா இத்தனை நாள் உன்னை பார்க்க என் காதலி மாதிரி தோணிட்டு இருந்ததுனு சொல்லவந்தேன்"
" அடச்சீ..பூசை அறையில வச்சு பேசற பேச்ச பாரு"
"இல்லடி கண்ணு.. ஒரு கிருஷ்ணர் கோவில் அய்யரு. பயங்கர கிருஷ்ண பக்தன். அவனுக்கு ஒரு காதலி. தினசரி ராத்திரில அவளை கூட்டி வந்து கருவறையிலயே வச்சு படு கில்மா வேலைக பண்ணுவான். ஒரு நா கில்மா கிங்கனா கிருஷ்ணருக்கே கடுப்பாகி - ஏம்பா இந்த இழவையெல்லாம் என் கண்ல படாத முடிச்சுக்க கூடாதான்னாராம் - அதுக்கு அந்த பக்தன் கேட்டானாம் - கிருஷ்ணா! உன் கண்படாத இடம் எதுன்னு நீயே சொல்லுன்னானாம்- பகவான் இல்லாத இடம் எது? நீயே சொல்லு"
"வேணா .. என்னை கடுப்படிக்காதே மேட்டருக்குவா.. எனக்கு மட்டும் ஏன் இப்படி?"
"அடடா.. படிக்காதவன்ல ஜனகராஜ் மாதிரி ஆயிட்டயே - அதுல தங்கச்சிய நாய் கடிச்சுருச்சுப்பா - நீ எனக்கு மட்டும் ஏன் இப்படி?"
"தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலி"
"சரி சரி அரக்கு கலர் புடவையில நீயே ரம்யா கிருஷ்ணன் மாதிரி சாரி ஆத்தா மாதிரி இருக்கே .. அம்பேல் மேட்டருக்கு போவமா?"
"உம்"
"இந்த இதயம் இருக்கே ஆயுர்வேதம் சொல்ற ராஜ உறுப்புகள்ள இதுவும் ஒன்னு. நவகிரக காரகத்வத்துல இதயத்துக்கான காரகத்வம் சூரியனுக்கு தரப்பட்டிருக்கு. சில கிரந்தங்கள் (அவ்ளோ பழசு) குருவையும் பொறுப்பாக்குது. துவாதச பாவங்கள்ள 4 ஆம் பாவம் இதயத்தை காட்டுது. மனம் போல் வாழ்வும்பாய்ங்க. சந்திர பலத்தை பொறுத்து மனசு இருக்கும். ஹார்ட்டுங்கறது பம்பிங் மிஷன். ரத்தத்துக்கு கார்கத்வம் வகிக்கிற செவ்வாயும் ஹார்ட் விஷயத்துல முக்கியம். அடுத்தது சுக்கிரன்"
"ஏய் .. நீ வேணம்னே செக்ஸ கலக்கலாம்னு தானே சுக்கிரனை இழுக்கறே"
"இல்லை தாயீ.. ஒரு ஜாதகத்துல குரு எவ்ள முக்கியமோ சுக்கிரன் கூட அவ்ள முக்கியம். ரெண்டு பேரும் பேலன்ஸ்டா இருக்கனும். சுக்கிர பலத்தை விட குரு பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் குறைஞ்சுரும். குரு பலத்தை விட சுக்கிர பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் அதிகரிச்சுரும். குரு சுக்கிரர்களோட முக்கியத்துவத்தை பத்தி சொல்ல ஆரம்பிச்சா ஒரு நாள் பிடிக்கும்"
"ஓகே ஒரு நாளில்லே.. என் கேள்விக்கான பதில் கிடைச்சு ,கிடைச்ச பதில்ல நான் திருப்தியடையற வரை நீ சொல்லிட்டே இருக்கனும்"
"வாணா மாயா.. இப்பல்லாம் ஹனிமூன் தம்பதிங்களோட ஹோட்டல் அறையிலயே வெப் காம் வச்சு விளையாடறாய்ங்களாம்( 2004) .வாய்ஸ் ரிக்கார் பண்றது பெரிய விஷயமே கிடையாது .எவனாச்சும் மொத்தத்தையும் இன்டர் நெட்ல விட்டுட்டானு வை.. வேற வம்பே வேணா"
"தான் திருடி பிறனை நம்பான்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? "
"அதனோட செகண்ட் பார்ட் கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான் - இது தெரியுமா?"
"தூத்தேரி.. பூஜை ரூம்ல உட்கார்ந்துகிட்டு என்ன பேச்சு இது?"
"கண்ணு உனக்கொரு ரகசியம் சொல்லட்டுமா? ஆழமான உடலுறவுக்கு பிறகு மனசுல ஒரு வித நன்றி உணர்வு பரவும் - அந்த நன்றி உணர்வு பக்தி உணர்வை கிளப்பும். ஆழமான தியானம் அ மனம் குவிந்த ஜெபம், பூஜைக்கு பிறகு ஆட்டோமேட்டிக்கா உடம்புல ஒரு மதமதப்பு வரும் "
"ஹன்யோ.. என்ன நீ நான் கேட்டது என்ன நீ சொல்லிட்டு போற விஷயம் என்ன?"
"ஓகே ஓகே.. இனி நோ டைவர்ஷன். ஒன்லி சப்ஜெக்ட் ஓகேவா ..உன் கைய காமி"
" என்ன ரேகை பார்க்க போறியா ?"
"இல்லே எச்சி உமிஞ்சு சத்தியம் பண்ணத்தான் ஏய்..........காது காது... ஸ் அப்பாடா"
"நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இதயம் ராஜ உறுப்பு. இதுக்குண்டான காரகத்வம் சூரியனோடது. ஓஷோ சொல்வாரு பூமி சூரியனின் குழந்தை. நாமெல்லாம் பூமியின் குழந்தைகள். நான் சொல்றேன் . நாமெல்லாம் சோலார் பேட்டரி மாதிரி - நமக்கு சார்ஜ் கொடுக்கிறது சூரியன். சூரியனோட கதிர்கள் நம்ம பாடில படனும். அதுலயும் காலை,மாலை வெய்யில் நிச்சயம் படனும். இல்லைன்னா நாஸ்தி தான் - பேட்டரி லோவாயிரும்."
" இப்போ லைஃப் ஸ்டைலே மாறிப்போச்சு எல்லாரும் காலை வெயில் நேரத்துல பெட்ல இருப்பாய்ங்க இல்லே காலை நேரத்து பரபரப்புல இண்டோர்ல பம்பரமா சுழன்று கிட்டிருப்பாய்ங்க. மாலை நேரம் சிட்டிபஸ் நசுங்கல்லயோ அல்லது ஓ.டி, பார்லயோ நாறிட்டிருப்பாங்க. மன்சங்க உடம்புல சூரிய ஒளியே படாதே"
"அதனாலதான் இன்னைக்கு ஹார்ட் ப்ராப்ளம் அதிகம் "
" ஒரு வேளை ஜாதகத்துலயே சூரியன் நல்ல பலத்தோட இருந்தா?"
"அவன் சூரியனோட குழந்தை. அப்பனோட கதிர்கரம் தன் மேல படனுங்கற துடிப்பு இயல்புலயே அவனுக்கிருக்கும். அவன் வாழ்க்கையும் அப்படியே அமையும்."
"சப்போஸ் ஜாதகத்துல சூரியன் பலகீனமா இருந்தா?"
" பரீட்சைல குறைச்சலா மார்க் வாங்கின பையன் எப்படி அப்பன் முன்னாடி வந்து நிக்க தயங்குவானோ அப்படி ஓப்பன் ஏருக்கு வரவே தயங்குவான். அவனோட லைஃபும் அப்படியே அமையும். ஜஸ்ட் இண்டோர் ஷூட்டிங் ஆல் ஓவர் தி லைஃப்"
(தொடரும்)
No comments:
Post a Comment