அண்ணே வணக்கம்ணே,
நேத்து இதே தலைப்புல ஒரு 14 பாயிண்டை எடுத்து விட்டேன் . நெல்ல ரெஸ்பான்ஸ். நம்ம கவிதை07 க்கு புதுசா மெம்பர்ஸ் கூட சேர்ந்திருக்காய்ங்க. ஆனாபாதி பதிவுல சட்டுனு "சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?"ன்னுட்டு ஜம்ப் ஆயிட்டன்.
மேற்படி ஆழமான அம்சங்களை பத்தி தொடர்ந்து எழுதலாம்னு ஒரு ஐடியா. வெறுமனே கட்டுரையா எழுதிக்கிட்டிருந்தா தம்பிங்க கோவிச்சுக்கிடுவாய்ங்க. அதனால ஒரு சில பாத்திரங்களை வச்சு இந்த அம்சங்களை ப்ளாஸ்ட் பண்ணலாம்னு ஐடியா.
கவிதை07ல உனக்கு 22 எனக்கு 32 ன்னு ஒரு ஜில் தொடர் எழுதிக்கிட்டிருந்தேன். அதுல ஹீரோவுக்கு (முகேஷ்) 22 வயசு. ஹீரோயினுக்கு(மாயா) 32 வயசு. ஒரு பத்து வருஷம் ஓடிப்போச்சு. சமீபத்துல மாயாவுக்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக். முகேஷை சேர்மனாக்கின எக்ஸ் எம்.எல்.ஏ மேல ரெண்டு தடவை கொலை முயற்சி நடக்குது. ஒரு முயற்சில அவரோட இடுப்புல துப்பாக்கி குண்டு உரசிக்கிட்டு போகுது. இதனால அவருக்கு சில விஷன்ஸ் எல்லாம் தெரிய ஆரம்பிக்குது.( ESP - Extra Sensitive- Power ) மானில முதல்வரோட துர்மரணம் பத்தி சில காட்சிகள் தெரியுது. அதை முதல்வர் வந்தப்ப பகிர்ந்துக்கவும் செய்யறார். முதல்வரோ சின்னதா ஃபிலாசஃபி சொல்ட்டு கழண்டுக்கறார்.
இந்த சிச்சுவேஷன்ல ரெண்டாம் பாகத்தை ஆரம்பிச்சா கதையையும் தொடர்ந்தாப்ல இருக்கும் மர்மங்களையும் போட்டு உடைச்சாப்ல இருக்கும்னு பாபா கவுண்ட்ஸ் ஸ்டார்ட்.
1
2
3
4
5
சரி சரிங்கண்ணா கோவிச்சுக்கிறாதிங்க. மேட்டருக்கு போயிரலாம். ( கதைய தன்னிலைல தான் எழுதிக்கிட்டிருந்தேன் .அதுவும் முகேஷ் சொல்றாப்ல. இப்பயும் அதே ட்ரெண்ட்ல போயிரலாம் )
முதல்வர் வந்து போன பிறவு சேர்மன் பதவிக்கு ராஜினாமா செய்துட்டு மாயாவோட நிறைய நேரம் செலவழிக்க ப்ளான் பண்ணியிருக்கிறதா ஜகன் கிட்டே (எம்.எல்.ஏ) சொன்னேன். அவரு "இப்ப என்ன மாயாவோட நிறைய நேரத்தை ஸ்பெண்ட் பண்ணனும் அவ்ளதானே.. நகராட்சி நிர்வாக இயந்திரத்தை தூக்கி நிறுத்திட்ட, ஓட விட்டுட்ட , அதும்பாட்டுக்கு ஓடட்டும். நீ ஆஃபீஸ் கோயர் மாதிரி 10 டு 5 வந்துட்டு போ. அதுக்கென்னத்துக்கு ராஜினாமா? நீ ராஜினாமா பண்ணினே.. பத்து நாள்ள எல்லாம் குட்டிச்சுவராயிரும்."னுட்டாரு.
கொஞ்ச நேரம் நாட்டு நடப்பை,அரசியலை பத்தியெல்லாம் பேசினதுல நேரம் போனதே தெரியலை. வெளிய வந்தேன். வீட்டுக்கு போனேன். வீடே அமைதியா இருந்தது. ஹால்ல இருந்த ஷீரடி பாபா படத்தண்டை மட்டு குத்து விளக்கு வடிவிலான விளக்கு மட்டும் எரிஞ்சுட்டிருந்தது. மாயா ஈஸிசேர்ல சாஞ்சு கண்ணை மூடிட்டிருந்தா. வான கலர்ல ஒரு நைட்டி. கொஞ்சம் முன்னாடி தான் ஃபேஸ் வாஷ் பண்ணியிருப்பாபோல. முன்னுச்சி முடில ஈரம் கூட இருந்தது. நெத்தில சின்னதா பொட்டு கீற்றா விபூதி.
அவளைப்பார்க்க தேர்தல் பிரச்சாரம் முடிச்சுட்டு நாளை மறு நாள் நடக்கப்போற தேர்தலை பத்தி யோசிச்சிட்டிருக்கிற தலைவி மாதிரி இருந்தது . முகத்துல ஒரு அமைதி அதே நேரம் ஒரு வித அன் செர்ட்டினிட்டி.
தலை மாட்ல நின்னு மெதுவா நெத்தில கைய வச்சேன். கண்ணை மட்டும் உசத்தி பார்த்துட்டு என் கைய மெல்ல இறக்கி கன்னத்துல வச்சிக்கிட்டா. நான் டீப்பாயை இழுத்து போட்டுக்கிட்டு பக்கத்துல உட்கார்ந்தேன்.
இடையில ஸ்லிம் ஆகனும்னு அவள் பண்ண அலப்பறையெல்லாம் ஞா வந்தது.
"மாயா! மொத்தத்துல நீ நினைச்சதை சாதிச்சிட்டே"
"மேசிவ் ஹார்ட் அட்டாக்கையா?"
"அதும்பாட்டுக்கு வந்துது போச்சு. நான் அதை சொல்லல்லே .. நீ இப்போ என்னா மாதிரி ஸ்லிம்மா க்யூட்டா இருக்கே தெரியுமா? உனக்கு 42 வயசுன்னா எவனும் நம்ப மாட்டான்"
"எனக்கு மட்டும் ஏன் வரனும்? "
"கிழிஞ்சது போ.. பிரச்சினை வந்த பிறவு ஒவ்வொரு பன்னாடையும் இதைத்தான் கேட்குது. இதயம் உள்ள யாருக்கு வேணா வரும்.. ஓகேவா"
"இல்லப்பா. நீ ஒரு காலத்துல ஜோதிஷத்தை(ராவணன் சார் மன்னிக்கனும் -சப்ஜெக்டை ஃபார்ம் பண்ணவுகளுக்குத்தான் பேர் வைக்கிற அதிகாரம் - மூல நூல் எல்லாம் சமஸ்கிருதத்துலதான் இருக்கு. அந்த பேட்டைல ஜோதிஷம்னு தான் சொல்றாய்ங்க - ஆனா நான் டெவல்ப் பண்ண சப்ஜெக்டுக்கு ஜோதிடம்னுதான் பேர் வச்சிருக்கேன்) எல்லாம் கரைச்சு குடிச்சிருக்கே இல்லியா எனக்கு ஏன் இது வந்தது சொல்லேன்"
"உனக்கு மேசிவ் ஹார்ட் அட்டாக் ஏன் வந்ததுன்னு மட்டுமில்லை . .மனித குல பிரச்சினைகள் எல்லாத்துக்கும் என்ன காரணம் அதை எப்படி அவாய்ட் பண்ணலாம்னு அஸ்ட்ராலஜிக்கலா எக்ஸ்ப்ள்யின் பண்றேன். ஆனால் இன்னைக்கில்ல நாளையிலருந்து ..உடு ஜூட்..மொதல்ல நான் குளிக்கனும்"
No comments:
Post a Comment