'>

Saturday, October 16, 2010

"ஜெ" தலைமையில் கூட்டணி ஆட்சி

அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவோடயே கிரகங்களின் பயோடேட்டா னு ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்க‌


ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல இந்த பதிவை போடறேன். அந்த பிரதாபங்களையெல்லாம் இன்னொரு தாட்டி இங்கன ரிப்பீட் பண்ணா கண்ணக்கட்டும்.(அந்த பழங்கதையையெல்லாம் படிக்க ரெம்ப ஆர்வமா இருக்கிற பார்ட்டிங்க மட்டும் கீழ்காணும் சுட்டிகளை தங்கள் பிரவுசரில் காப்பி பேஸ்ட் செய்து படிங்க‌.

http://kavithai07.blogspot.com/2007/09/1.html
http://kavithai07.blogspot.com/2007/09/2.html
http://kavithai07.blogspot.com/2007/09/3.html

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு. நடப்பு 2009/3/9 முதல் 2011-ஃபிப்ரவரி 3 வரை ராகுதசையில சூரிய புக்தி. ராகு 11ல இருந்து லாட்டரி தனமா நன்மை தர நினைச்சாலும், அவரோட செகண்ட் ஹாஃபான கேது 5ல இருக்கிறதால அவமானங்களையும் தருவாரு. தசா நாதன்,புக்தி நாதனுக்கு இடையில பகை இருக்கிறதாலயும் ராகுதசையில சூரிய புக்தி நல்ல பலனை தராது.

இன்னம் சொல்லப்போனா சூரிய+ராகு விரோதத்தால பல்,எலும்பு,முதுகெலும்பு,
இதயம் தொடர்பான பிரச்சினைகளை கூட தரலாம். ஆனால் ஆயுள்பங்கம் எதுவுமில்லை. ஆயுஷ் காரகனான சனி ஆயுள் ஸ்தானாதிபத்யம் பெற்று ரெண்டுல நின்னு ஆயுள் ஸ்தானத்தையே பார்க்கிறார். இவருக்கு செவ் பார்வையும் கிடையாது


2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியா இருக்கிறதால வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. கோசாரத்துல சனி மாறின 2009 ,செப் 9 லருந்து கணக்கு போட்டா 2010,செப்,2க்கு ஒரு வருஷம், டிசம்பர் 2க்கு 3 மாசம் ஆக சனியோட டோட்டல் பீரியடான ரெண்டரையில ஒண்ணேகால் வருஷம் முடிஞ்சு செகண்ட் ஹாஃப் ஸ்டார்ட் ஆகுது.அம்மாவோட வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி ப்ளாக்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். (ஆன்லைன்) நாம சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( ஜஸ்ட் ரூ.250/-)

3 comments:

Anonymous said...

தேர்தல் தேதி அறிவிச்சதும் இன்னும் விரிவான பலன்களை எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

அந்த தேதியை வைத்து சில கணக்குகளை போட சுலபமாக இருக்கும் அல்லவா அதற்க்காக சொன்னேன்..தி.மு.க வின அடுத்த தலைவர் யார் என்ற தலைப்பில் ஜாதக கணிப்பு போடுங்க ஹிட்ஸ் அள்ளும்...நண்பரே ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும்..அதை படிக்க ஆவலாகவும் இருக்கேன்

vv9994013539@gmail.com said...

sir your job unbelievable how to manage more blogs. really you are intelligent. life is so beautiful.