காதலில் வெற்றிக்கு முதல் வழி சரியான ராசிக்காரரை காதலிப்பதுதான். சரியான ராசி என்றால் உங்கள் ராசிக்கு வசியமாகும் ராசி என்று பொருள்.
யாருக்கு/யார் வசியம்:
மேஷத்துக்கு சிம்ம,விருச்சிக ராசியினர் வசியம். எனவே மேஷ ராசியினர் சிம்மம் அல்லது விருச்சிக ராசிக்காரரை காதலிக்கலாம். இதே போல் ரிஷப ராசியினர் கடகம் அல்லது துலா ராசியினரையும்,மிதுனராசிக்காரர் க்ன்னி ராசிக்காரரையும்,கடக ராசிக்காரர் விருச்சிக ,தனுசு ராசிக்காரரையும்,சிம்ம ராசிக்காரர், துலா அல்லது மகர ராசிக்காரரையும் காதலிக்கலாம். இதே போல் கன்னிக்கு மீன,மிதுனம் வசியம், துலாத்துக்கு மகரம்,கன்னி வசியம். விருச்சிகத்துக்கு கடகம்,தனுசுக்கு மீனம்,மகரத்துக்கு கும்பம்,கும்பத்துக்கு மீனம், மீனத்துக்கு மகரம் வசியம்.
எச்சரிக்கை:
இது திருமணத்திற்கு பார்க்கும் 10 பொருத்தங்களில் ஒன்றுதான் என்பதை நினைவில் வைக்கவும்
மேலும் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது கவிஞர் வாக்கு. எனவே உங்கள் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும். இதே போல் தங்கள் காதலர் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும்.
மேலும் உங்கள் ராசிக்கு குருபலம் உள்ளதா பார்த்துக் கொள்ள வேண்டும். குருபலம் இருந்தால் தான் உங்கள் கவர்ச்சி பெருகும், வசிய ராசிக்காரரானாலும் உங்களுக்கு குருபலம் இருந்தால் தான் உங்களை நாடுவார்.
ஜாதகமே இல்லாது தங்களுக்கோ, தங்கள் காதலருக்கோ செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை அறிய வழியிருக்கிறது.( எப்டி எப்டினு கேட்பிக சொல்றேன் நிதானமா) தோஷம் இருந்தால் இருவருக்கும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இருவருக்கும் இருக்கக்கூடாது. ஒருவருக்கு இருந்து,அடுத்தவருக்கு இல்லையென்றால் பிரிவு நிச்சயம்.
மேலும் காதலில் வெற்றிக்கு சுக்கிர பலம் முக்கியம். ஜாதகத்தையே பார்க்காது உங்கள் ஜாதகத்தில் சுக்கிர பலம் உள்ளதா இல்லையா என்பதை அறியவும் வழியுண்டு.
அடுத்த படியாக தங்கள் காதலை சொல்லும் நேரம் முக்கியமானது. உங்கள்/அடுத்தவர் ராசிக்கு சந்திராஷ்டம காலத்தில் காதலை சொல்லாதீர்கள். சுக்கிரன் 7,10ல் இருக்கும்போதும் கூடாது. குரு பலம் இல்லாத போது காதலை சொன்னால் தோல்வி நிச்சயம்.
யாரை காதலிக்க கூடாது:
தங்கள் ராசிக்கு 6,8,12 ஆவது ராசிக்காரரை காதலித்தால் கடன்,விரோதம்,நோய்,பிராண கண்டம்,விபத்து,வீண்விரயம் உறுதி.( ஆனால் சில ராசிகளுக்கு எட்டாம் ராசியே வசியமாகவும் வரும் - இருந்தாலும் லொள்ளுதான். உ.ம் ரிஷபம் வெர்ஸஸ் துலா
No comments:
Post a Comment