'>

Friday, October 15, 2010

எந்திரன் வாலியோட உல்ட்டா

எந்திரா நீ எந்திர்ரான்னுட்டாய்ங்கனு கேள்வி ! மொத நாளு டிக்கெட் விலையை இஷ்டத்துக்கு உசத்தி ஆட்டைய போட்டாலும் மறு நாள் சனம் நெருங்கலியாம். மேனேஜருங்க கேட்டுக்கு வெளிய நின்னு அதிக விலை இல்லிங்க அசல் விலைதான்னு கூப்டு கூப்டு டிக்கெட் கொடுத்ததா டோண்டு ராகவனே சொல்லியிருந்தாரு.

நானும் ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். ஆனால் மிஸ்டர் பாரத்ல டீப்பாய்க்கு காங்கிரஸ் பார்டர் பார்த்ததுலயே விட்டுப்போச்சு. மேலும் எந்திரனுக்கு சுஜாதா கதைன்னவுடனே ஆசை செத்துப்போச்சு. சுஜாதா சினிமாவுக்குனு புதுசா கதை எழுதினதே கிடையாது. அதுவும் ரஜினிக்கின்னா ப்ர்ர்ர்ர்ர்ர். அனிதாவின் காதல்களை சிவாஜிக்கு கதையா எழுதி கதை பண்ண பார்ட்டி அவரு.

சங்கர்ங்கற பிரமிப்பும் நமக்கு கிடையாது. தெலுங்குல அந்த காலத்துலயே ராகவேந்திரராவ் டைரக்சனை எல்லாம் பாத்தவன் நானு ( இவர் யாரு தெரியுமா? வசந்த மாளிகை எடுத்த கே.எஸ்.பிரகாஷ்ராவோட மகன்) நாட் நாட் காலத்துலயே பாட்டு சீன்ல லோட் லோடா சீனி பழம்லாம் கொட்டினவரு.

ஏ.ஆர் ரஹ்மானுங்கறிங்களா வயசு 43 ( நமக்கு) ஸோ நமக்கு எந்திரன்னா உதறல் கதறல் எல்லாம் கிடையாது. ஸோ க்ளீன் ஸ்லேட்டா படம் பார்த்தேன். இப்போ படத்தை பத்தின என் கருத்துக்கள்.

கதை:
எந்திரனோட கதை என்னுதுனு ஆர்னிக்கா நாசர்னு ஒரு எழுத்தாளர் புகார் பண்ணியிருக்காராம். இந்த ஆளு ஒரு காலத்துல சுஜாதாவோட "ஒரே ஒரு துரோகம்" கதைய ஈயடிச்சான் காப்பி அடிச்சு கதை எழுத நான் அதை சுட்டிக்காட்ட எனக்கு லாயர் நோட்டீஸ் எல்லாம் விட்ட பார்ட்டி.

எந்திரனோட கதை எவன் தலைமேல கை வச்சாலும் அவன் பஸ்மம் ஆயிரனும்னு வரம் வாங்கிட்டு வரம் கொடுத்த சிவனார் தலை மேலயே கை வைக்கிறேனு கிளம்பின பஸ்மாசுரன் கதை தான். ஆர்னிகா நாசருக்கெல்லாம் சான்ஸே கிடையாது. சுஜாதா தமிழ் கதையையெல்லாம் உருவ மாட்டாரு (அப்படினு நினைச்சிருந்தேன் -ஆனால் அமுதவன் வேற மாதிரி சொல்ட்டாரு)

இருந்தாலும் என் சம்சயம் என்னடான்னா நாசரும் -சுஜாதாவும் ஒரே இங்கிலீஷ் சினிமாலருந்தோ - புக்லருந்தோ உருவியிருக்கலாம். இது ஒரு சான்ஸ்.

வெஜிட்டபுள் பிரியாணி;
சுருக்கமா சொன்னா சுஜாதா எழுத்துக்களத்துல தான் பயிர் பண்ண காய் கறிகளையெல்லாம் ( பல கதைகளை) போட்டு தயாரிச்ச வெஜிட்டபுள் பிரியாணி எந்திரன்

கதையிலான ஓட்டைகள்:

முதற்கண் வசீகரனுக்கு ரோபோ தயாரிக்கனும்ங்கற எண்ணம் ஏன் வந்தது? வந்தாலும் அதை ராணுவத்துக்குத்தான் கொடுக்கனுங்கற எண்ணம் ஏன் வந்தது? இதுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைச்சிருக்கலாம்.

மொதல்ல வசீகரன் -ஐஸ்வர்யாவை லிங்க் பண்ணி ஐஸ்வர்யாவோட க்ரேண்ட் ஃபேமிலிய ( ராணுவ குடும்பங்கள்) அறிமுகப்படுத்தி அவிக சோகம், சோகத்துக்கான காரணங்களை (மரணங்களை) அவாய்ட் பண்றதுக்காக ராணுவத்துக்கு ரோபோங்கற தாட் வசீகரனுக்கு வராப்ல வச்சிருக்கலாம்.

இதை செய்யாததால ரோபோவை ராணுவத்துக்கு எடுத்துக்க வைக்கிறதுல வசீகரன் காட்டற ஆர்வம் ஒரு சேல்ஸ் ரெப் ரேஞ்சுக்கு விழுந்துருச்சு.

சிட்டி (ரோபோ ரஜினி) தனக்கிடப்படும் ஆணைகளை அதன் ஒரிஜினல் அர்த்தத்துல அமல் படுத்துற அலப்பறை எல்லாம் சினிமாவுக்கு புதுசா இருக்கலாம். அவரோட வாசகர்களுக்கு பழைய குருடி தான். இதையே சாக்கா வச்சு சிட்டி ரிஜெக்ட் ஆறது, ரோபோவுக்கு மனித உணர்வுகளை தர வசீகரன் செய்யற போராட்டம்லாம் சரிதான். ஆனால் சிட்டிக்கு உணர்வு ஏற்படற கட்டத்துல கிராஃபிக்ஸ்ல விளையாடி இருக்க வேணாமோ?

சிட்டிக்கு ஐஸ்வர்யா மேல லவ் வர்ர ட்விஸ்ட் வாலி (?) உபயம். ( ஆனா இதை வாலிக்கு முன்னாடியே சுஜாதா "வான் கண்டேன் திசை கண்டேன்"ல யூஸ் பண்ணிட்டாருனு நினைக்கிறேன். வாலியில அண்ணன் தம்பி இதுல சைன்டிஸ்ட், ரோபோ அதான் வித்யாசம்.

வசீகரன் ரோபோ தயாரிப்பு மும்முரத்துல அப்பப்போ தாடி வளர்த்துக்கிட்ட மாத்திரத்துல பார்வையாளன் இன்வால்வ் ஆயிருவானு எப்படி நினைச்சாய்ங்களோ?

இதைவிட வசீகரன் ஏழை, தாழ்த்தப்பட்டவன். கிராமத்தான், தன் குருவோட (வில்லன்) லேப்லயே சீக்ரெட்டா தயாரிக்கிறாருன்னு வச்சிருந்தா தூளா இருந்திருக்கும்.

அப்போ வசீகரன் போற சலூன் ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுல இருந்திருக்காது. பி,சி சென்டர்ல எல்லாம் சலூன் சீன்ல இன்வால்வ் ஆகியிருப்பாய்ங்க.

திருப்பி திருப்பி வரும் காட்சிகள்:
திருப்பி திருப்பி வரும் காட்சிகள் ரெம்ப கடுப்பேத்துது சிட்டியோட பிரதாபங்கள் சிட்டி சமைக்கிறது,அசிஸ்டண்டுகளை கலாய்க்கிறது, பிரஸ் மீட், பிரஸ் கவரேஜ், சிட்டியை ரிப்பேர் பண்றது.

கேள்வி:
பிரசவத்தை எங்கேனா லைவ் காட்டுவாய்ங்களா? ( தற்கொலை மிரட்டல் விட்ட விவசாயி ஒருத்தரை சுத்தி சுத்தி வந்து கவர் பண்ற - காலைக்கடனுக்கு ஒதுங்கறச்ச கூட - அவலத்தையெல்லாம் படமா காட்டியும் சங்கர் திருந்தலியா?)

பாத் டப்ல குளிக்கிற பெண் டப்ல உள்ள தண்ணியை தீயணைக்க உபயோகிக்க மாட்டாளோ? பாத் டப் ரேஞ்சுல உள்ள பெண்ணுக்கு ஸ்லம் பெண் மாதிரியான உணர்வுகள் இருக்குமா? ( மானம் போச்சுனு தற்கொலை) மேலும் சுய நினைவோட உள்ளவள் சிட்டியை "ஒன் மினட் உன் கோட்டை கொஞ்சம் தரயா"னு கேட்டிருக்கலாமே.

தீவிபத்துல சிக்கின சனம்லாம் ஸ்லம் மாதிரி இருக்கு .ஆனால் ஒரு பெண் மட்டும் பாத் டப்ல குளிக்குது

சிட்டி தீவிபத்துல புகுந்துவர்ர சமயம் ரஜினியோட ஃபேஸை ஏன் உபயோகிக்கலை? டெக்னிக்கல் பிரச்சினையோ? வீடியோ கேம்ஸ் மாதிரி டூ மச்சா அநாவசியத்துக்கு டெக்னாலஜிய உபயோகிக்காம ரஜினி முகத்தையே யூஸ் பண்ணீயிருக்கலாம்.

ரயில்ல நடக்கிற மோதல் கூட வீடியோ கேம்ஸ் மாதிரி டூ மச்சா கீதுபா. பேட்டரி லோ வர்ர சீனை " இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு" ரேஞ்சுல பில்டப் கொடுத்து சனத்தை தியேட்டருக்கு நாயை கூப்ட வச்சிருக்கலாம். (உச் உச்சுனு)

எல்லாம் ஓகே. திராவிட பரம்பரையில வந்த, மொதல்ல பிராமணர்களையும் பிற்காலத்தில் பிராமணீயத்தையும் (மட்டும்) எதிர்த்த திராவிட பரம்பரையில வந்த கலா நிதி மாறனோட தயாரிப்புல வந்துள்ள எந்திரன்ல இறைக்கப்பட்டிருக்கும் பிராமணீய எச்சங்கள் -

பிராமணரல்லாதோரின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு அம்சம் யார் கண்ணுலயும் பட்டதா தெரியலையே..

ஐஸ்வர்யா பரீட்சைக்கு படிக்கிறாய்ங்க. அம்மன் கோவில் திருவிழா நடக்குது. லவுட் ஸ்பீக்கர்ல ஓவர் டெசிபல்ஸ்ல பாட்டு கேட்குது (தமிழ் பாட்டுங்கண்ணா - அதுவும் எல்.ஆர் ஈஸ்வரியம்மா பாடின செல்லாத்தா செல்ல மாரியாத்தா - இன்னமும் தங்களோட வேர்களை மறக்காத சூத்திரங்களோட தேசீய கீதம்)

அம்மா புகார் பண்ணதும் ஐயா போய் ஸ்பீக்கரை ( சட்டசபை ஸ்பீக்கரை இல்லிங்கணா) அடிச்சு தூள் கிளப்பிர்ராரு. தட்டிக்கேட்கிற கோயில் கமிட்டி ஆட்களை பின்னி எடுக்கிறாரு. அம்மங்கோவில் திருவிழா நடத்துறவுக எல்லாம் இந்த கேட்டகிரிதானு சொல்ல விரும்பறாய்ங்க.

மேல் நாட்டு சங்கீதம் ஒலிச்சா அதுக்கு நாசூக்கான ட்ரீட் மெண்ட், செல்லாத்தா செல்ல மாரியாத்தா ஒலிச்சா மட்டும் நாயடியா?

தாளி இதுவாச்சும் தமிழ் பாட்டு புரியுது. அவாளோட யாகம் நடக்கிறாப்லயும், அதுல வேத கோஷங்கள் ஒலிக்கிறாப்லயும் அட்சரம் புரியாம ஐஸ்வரியா தலைய பிச்சிக்கறாப்லயும், அப்ப சிட்டி போய் அலப்பறை பண்றாப்லயும் சீன் வச்சிருக்க முடியாதா?

சூத்திரன் தானே ஊருக்கு இளைச்சவன். சூத்திரங்களுக்கு லெட்டர் டு எடிட்டர் எழுத தெரியாது, அட்லீஸ்ட் கவர்னருக்கு மனு கொடுக்க தெரியாதுங்கறதுதானே இவிக தைரியம்.

திராவிட பரம்பரை எங்கயோ போயிடுச்சுப்பா.. நெல்லாவே வெள........ங்கும்.

இதை விட சுஜாதாவோட என் இனிய இயந்திராவையே (துணிச்சலா) எடுத்திருக்கலா, அதுல நாய். இதுல ரஜினி தட்ஸால். இதுல சைன்டிஸ்ட் நல்லவரு. ரோபோ கெட்டதா மாறுது. அதுல சைன்டிஸ்ட் கெட்டவரு. ரோபோ நல்லது.

குறிப்பு:
படத்துல முதல் பாதி தான் பார்க்க முடிஞ்சது. அதுக்கே இவ்ளோ நீண்ட பதிவு

4 comments:

Anand said...

Really, I'm not sure why this angry about Rajini. Just watch the movie. It's a very very good movie where you can sit and enjoy with your families. Also, worth for the amount what you pay for the movie

SABARI said...

ok neenga sollarathula 70% correct tan...pesama neenga oru padam edunga.... nanga ellam comment elutharom....puthiya muyachigalai varaverkalamae.... rsigargal ellam vimarsagar agitta apuram onnum minjhathu... nandri...

Swami said...

padam parthaa anubhavikkanum, kelvi keeka koodadhu.

deen_uk said...

////சிட்டி தீவிபத்துல புகுந்துவர்ர சமயம் ரஜினியோட ஃபேஸை ஏன் உபயோகிக்கலை? டெக்னிக்கல் பிரச்சினையோ? வீடியோ கேம்ஸ் மாதிரி டூ மச்சா அநாவசியத்துக்கு டெக்னாலஜிய உபயோகிக்காம ரஜினி முகத்தையே யூஸ் பண்ணீயிருக்கலாம்.///
ungaloda intha kelviyai ninaitcha pullarikkuthu boss..! ungalukkaaga venumna,theeyil urugaatha plastic mask kandupidikka solvom!
ithuvarai pathivulagathil vantha enthiran vimarsanangalil best vimarsanam ungalodathu thaanungnaa!!
wow..! no.1 padu kevalamaana vimarsanam..and rajini,sankar mela ulla appatamaana kaalppunarchi therigirathu ungal vimarsanathil..eppadiyo,enthiran peyar thalaippu vaithu extra konjam hits vaangiteenga..nalla idea thaan!!