'>

Thursday, October 28, 2010

பர.. பர .. சுறு.. சுறு... ஜோதிட கேள்வி பதில்

கார்மேக ராஜா @ திருப்பூர் ராஜா ஒரு நா சாட்ல மாட்டினாரு. விஜயகாந்த் கட்சியோட எதிர்காலத்தை பத்தி நான் எழுதின பதிவுல கோட்டை விட்டதை சுட்டிக்காட்டினாரு. அவர்கிட்டே இருக்குது  ஸ்பார்க் அதனால இங்க செய்துட்டன் பார்க். ஏதாச்சும் கேளுப்பான்னேன்.  நெத்தியடியா கேள்விக்கணைகளை தொடுத்து வுட்டுட்டாரு. இப்ப ஒவ்வொண்ணா பறிச்சு பார்க்கிறேன். அதுக்கு மின்னாடி ச்சொம்மா ஜாலியா ..

//அண்டை மாநிலம் ஆந்திராவில் இருக்கும் மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல, இரண்டு முறை கூகுள் டாக்கில் பேசியதற்கே என்னை சகோதரன் என விளித்து இப்பொழுது தனது வலைப்பதிவிலும் எழுத வாய்ப்புக்கொடுத்துள்ளார் //

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ப்ரதர்.சாட்ல பார்த்தா என்ன? கேட்ல பார்த்தா என்ன?

//முருகேசன் ஜி. அவர் கொடுத்த அனுமதியுடன் எனது ஜோதிடம் சார்ந்த சந்தேகம் மற்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்கிறேன்//

பதிவா இது தூக்கம் வராம போயிருச்சு - எப்படிரா பதில் சொல்லப்போறோம்னு. பதிவு எழுதறது வேற . இப்படி அஃபிஷியலா பதில் சொல்றது வேற

//ஆந்திரா மக்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். இன்று முருகேசன் ஜி பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்கக்கூடது என ஆசைப்படுகிறேன்//

என்னதான் நான் அவாளை திட்டித்தீர்த்தாலும் அவாள் கிட்ட இருக்கிற ஒன்னு ரெண்டு நல்ல பழக்கங்களையெல்லாம் ஹைஜாக் பண்ணிட்டன் .அதுல ஒன்னு ப.மிளாயை விட்டு தொலைச்சது - அவாள்ள பலர் ச்சீச்சீயே தின்ன ஆரம்பிச்சுட்டாய்ங்களாம்.அதனாலதான் கறிவிலையே ஏறிப்போச்சுனு பேச்சு

//ஒரு சில கேள்விகள் எனக்கே ஓவராக தெரிந்தாலும் பலமுறை என் மனதில் தோன்றியதால் இங்கே கேட்டுவிடுகிறேன்.//

நம்ம வலைப்பூவோட பேரே நிர்வாண உண்மைகள். ( ஏதோ காபரே மாதிரி கண்ணாமூச்சி காட்டிக்கிட்டிருக்கோங்கறது வேற விஷயம்) இங்கன எதுவும் ஓவர் கிடையாது ப்ரதர்

//தவறாக தெரிந்தால் குறிப்பிட்ட கேள்வியை நீக்கி விடுங்கள் முருகேசன் சார். தனிப்பட்ட கேள்விகள் எதுவும் இல்லை, சந்தேகங்களுக்கு :) போகலாம்,//

நான் என்ன சென்ஸார் அதிகாரியா ..எல்...........லாத்தயும் பார்த்துருவம் தம்பி..(கேள்விகளை சொன்னேன்)

1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?

செமர்த்தியான கேள்வி. ( எந்த ஜோசியரும் அம்பேலாகிர கூடிய கேள்வி)  இருந்தால்ம் என் ஜாதகத்துல உச்சமா இருக்கிற குருவை நம்பி எனக்குள்ளருந்து நான் நகர்ந்துக்கிட்டு பதில் சொல்ல முயற்சி பண்றேன். மொதல்ல சுக்கிரனை எடுத்துக்குவம். இவர் இன உறுப்பு, சம்போகம் இத்யாதிக்கு காரகர். ஒரு மனிதன் தன் முதல் ஸ்கலிதத்திலிருந்து மேக்சிமம் எத்தனை வருஷத்துக்கு  சம்போகத்துக்கு அடிமைப்பட்டு இருக்க முடியும்?   நம்ம ஜாதகத்துல குரு உச்சம்ங்கறதாலயும் பேசிக்கலாவே ஷார்ப்புங்கறதாலயும் 1984 டு 1986 க்குள்ளயே நமக்குள்ள கேள்விகள் ஆரம்பமாயிருச்சு. ஒரு ஓரமா அதுவும் ஒரு தேவைங்கற ரேஞ்சுல இருந்தது ஜஸ்ட் 1991 வரை தான். ( ஆக 7 வருஷம்) அதுக்கப்பாறம் இந்த தேவையின் தேவை குறைஞ்சுக்கிட்டே வந்துருச்சு. இன்னைக்கு நான் உள்ள மன நிலைக்கு ஒரு ஆல் இண்டியா டூர் ( ப்ரிஃபரபிளி என்.டி.ஆர் மாதிரி ஒரு சைதன்ய ரதம்) மாட்டிக்கிச்சுன்னு வைங்க.மக்களை சந்திக்க ஆரம்பிச்சுட்டேனு வைங்க. யோகா, தியானம்னு மோல்ட் ஆயிட்டேனு வைங்க தாளி சாகிற வரை தேவைக்கே தேவை இருக்காது. இப்படி ஒவ்வொரு கிரகத்துடைய காரகத்தையும் ஆராய்ச்சி பண்ணி ஹச் பண்ணியிருக்கலாம். மேலும் அப்சர்வேஷன் ( இன்னைக்கு சர்வே மாதிரி) மேலும் இன்னொரு தளத்தில் மனித மனம் செயல்படும்போது இந்த டைம் லிமிட் இத்யாதிய தெரிஞ்சுக்கறது பெரிய விஷயமே கிடையாது.

மொத்ததசையும் கூட்டினா 120 வருஷம் வருது. இன்னைக்கு சனம் அத்தனை காலம் பிழைக்குதா இல்லை. அன்னைக்கு அவிக இந்த டைம் லிமிட்டை ஃபிக்ஸ் பண்ண உபயோகிச்ச டெக்னாலஜி இன்னைக்கில்லை. அதனால அவிக சொன்னதையே வச்சு காலத்த ஓட்டிக்கிட்டிருக்கோம்.

என்னைக்கேட்டா இன்னைக்கிருக்கிற யூத்துக்கு (பான்,பீடா, பீடி சிகரட், ஹன்ஸ்,மாவா,குட்கா,லாலா,மசாலா புண்ணியத்துல) பத்துவருஷத்துல தீர்ந்தே போயிரும்னு நினைக்கிறேன்.

No comments: