'>

Sunday, January 10, 2010

குருபெயர்ச்சி 2009

டாக்டர் ருத்ரன் அவர்கள் குருபெயர்ச்சி என்று துவங்கி லேசாய் கிண்டலடித்து சூப்பர் பதிவு போட்டிருந்தார். நான் அக்மார்க் ஜோதிடனாக இருந்தால் உடனே வரிந்து கட்டி எதிர்வினை செய்திருக்க வேண்டும். தமிழ் ஓவியா அவர்களும் ஜோதிடத்தை பல முறை கிண்டலடித்து எழுதியிருந்தாலும் நான் எதிர்வினை புரிவதில்லை காரணம் ?

என்னை பொருத்தவரை நான் ஒரு தேடுபவன். ஆம் மனித வாழ்வின் அவலங்களை மாற்றி "எல்லோரும் நலம் வாழ" வழி தேடுபவன். டீன் ஏஜ் முதலே என்னுள் எழுந்த வினாப்புயலுக்கு ஜோதிடம் பதில் சொன்னது.

என் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் "சந்தேக புத்தி கொண்டவன்" எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.

இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .

நானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.

நான் கண்டு கொண்ட ரகசியம் என்னவென்றால்:

ஆன்மீகத்தின் முதல் படி ஜோதிட நம்பிக்கை. ஜோதிட நம்பிக்கை கொண்டு சேர்க்கும் இறுதிப்படி ஆன்மீகம். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" பைபிளில் என்னை கவர்ந்த பல வசனங்களில் ஒன்று. கிரகங்கள் கர்த்தரின் படைப்புகள் தான்.

தான் என்ற எண்ணம், சுய நலம், பேதபாவம், ருசி, அருசி, ரசம், விரசம் கொண்ட மாந்தர் கிரகங்களில் கால்களின் கீழே ஃபுட்பாலை விட கோரமாக உதைக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் அகந்தையற்றோர், பொது நலம் காப்போர், அபேதபாவம் கொண்டோர் விஷயத்தில் அந்த கிரகங்களே சைடு கொடுப்பதை கண்டிருக்கிறேன். ஜாதக பலன் விஷயமே இப்படி என்றால் ராசிபலன் பற்றி என்ன சொல்ல ?

ஜோதிடத்தில் இந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில் உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.

உங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.

டப்பா காரா இருந்தா ? எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காக இந்த கும்ப குருவோட பலனை எழுதலாம்னு ஒரு ஐடியா.

நாளை சந்திப்போம் ! கும்ப குரு பலனுடன் !

( ஒரே மூச்சுல 12ராசிக்கும் போட்டுரலாம் டோண்ட் ஒர்ரி . பீ ஹேப்பி ! ஜூட்)

No comments: