'>

Sunday, January 10, 2010

பணமிருக்கிற நேரம் எல்லாம் நல்ல நேரம்

ஒவ்வொரு ஜாதகத்துக்கும் ஒவ்வொரு நேரமுண்டு. அதை எழுத ஒரு நேரம், பார்க்க ஒரு நேரம், பலன் எழுத ஒரு நேரம், அதை அனுப்ப ஒரு நேரம், அனுப்பியதை படிக்க ஒரு நேரம் உண்டு. விஷயம் புரியாதவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் ஜோதிடர் தங்கள் வீட்டுக்கே வரவேண்டும். உடனே பலனை சொல்லிவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். எல்லா தொழிலிலும் தம் தொழில் மீதே நம்பிக்கை இல்லாதவர்கள் இருப்பதை போல் ஜோதிடர்களிலும் சிலர் அப்படி இருக்கிறார்கள்.

ஆனால் என்னை பொருத்தவரை நான் ஜோதிடத்தை நம்புகிறேன். நான் வாணியம்பாடி யுனானி டாக்டரான  டாக்டர்(?)   அக்பர் கவுசர் அல்லன்.  அவர் தமக்க்  உடல் நலம் பாதித்தவுடன் வேலூர் சி.எம்.சியில் போய் அட்மிட் ஆகிவிட்டார்.

எந்த ஜோதிடரானாலும் சரி நீங்கள் கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்ட பிறகு , நீங்கள் அவரை அடிக்கடி ஜோதிட ஆலோசனைக்காக அணுகினால் ஒரு புள்ளியில் " என்னா கிரகம் ! என்னா ஜோசியங்க பணமிருக்கிற நேரம் எல்லாம் நல்ல நேரம் " என்று கூறாவிட்டால்  என் பெயரை மாற்றிக்கொள்கிறேன்.

இதற்கு காரணம் என்னவென்றால் இன்றுள்ள ஜோசியர்களின் ஜோதிட ஞானமெல்லாம் டப்பா பால் மாதிரி ( அதாவது மூல நூலைஅரை குறையாய்  படித்துவிட்டு அரைவேக்காட்டுத்தனமாய் எவனோ எழுதியவற்றை அரைகுறையாய் படித்து பீலா விடுபவர்கள்தான்.

மூல நூலை படித்தவர்களுக்கு கூட அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியுமே தவிர. அவ்வாறு சொல்லப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன அடிப்படை என்ன என்பது தெரியாது. காரணம் பேசிக்கலாய் இவர்களுக்கு ஆர்வமில்லை. ஆர்வமிருந்தாலும் அது தாகமாய் மாறவில்லை.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன ? (கிரக நிலையல்ல அதன் சிம்ப்டம்ஸ், அதனால் வரும் பிரச்சினைகள் என்ன )  என்று  யாரையாவது கூறச்சொல்லுங்கள் பார்ப்போம். இதை கூட யாராவது சொல்லிவிடலாம் . ( நான் ஒருவனே புலி என்று மதிமயங்கும் மூடன் நானல்லன்) அந்த சிம்ப்டம்ஸ் ,பிரச்சினைகள் வர செவ்வாய் என்ன விதமாக வேலை செய்கிறார் என்று சொல்லச்சொல்லுங்கள். அதற்கு உண்மையான பரிகாரம் என்னவென்று சொல்லச்சொலுங்கள் பே பே.

சரி எனக்கு ஜோதிடத்தின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது ? அது தாகமாக எப்படி மாறியது ? நான் எப்படி ஜோதிடம் கற்றேன். மூல நூல்களை முழுமையாக படிக்காமலே அவற்றில் சொல்லப்பட்ட  கிரக பலன் களின் அடிப்படையை, பரிகாரங்களின் உட்பொருளை உணர்ந்தது எப்படி ? மேற்படி பரிகாரங்கள் சில  நேரங்களில் என்ன பல நேரங்களில் பலன் தராது போக காரணம் என்ன என்பதை எப்படி அறிந்தேன். இதற்கு மாற்றாக நவீன பரிகாரங்களை எப்படி வடிவமைத்தேன் ? இந்த விசயங்களையெல்லாம் ஒரு தொடர்பதிவு போட உத்தேசம்.


தங்கள் கருத்தை மறுமொழி வாயிலாக தெரிவிக்க கோருகிறேன்.

2 comments:

Nathanjagk said...

ஜோதிடத்தை நம்புகிறவர், நம்பாதவர்கள் மற்றும் மறுப்பவர்கள் யாவரும் படிக்க​வேண்டியது.

முருகேஷன் உங்கள் எழுத்து எப்பவும் பிடித்த ஒன்று. ​தொடர்ந்து ​செல்லுங்கள். ஆல் தி ​பெஸ்ட்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in