'>
Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Tuesday, February 14, 2012

கில்மா கனவுகள் : கன்னி துலாம்


அண்ணே வணக்கம்ணே !
சிஸ்டம் பக்கா. ஜோதிடம் 360 பின்னிங் நடந்துக்கிட்டிருக்கு.அதான் கில்மா கனவுகள் தொடரை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டம்.

அதுக்கு மிந்தி ஒரு புரளி.

தமிழ்மணம் லேட்டஸ்டாக சந்துருவை பலி போட்டிருக்கிறது. பாவம் .. அசல் மேட்டரு இன்னான்னு அன்னாருக்கு புரியலை. தமிழ்மணம் நிர்வாகிகளோட நோக்கம் இப்பம் காசு பணம் தேன். இப்படியெல்லாம் சொத்தை காரணத்தை சொல்லி ( அரை நிர்வாண படங்கள்) தடை பண்ணிட்டா தமிழ் மணம் வழியாக தாங்கள் பெற்றுவந்த ஹிட்ஸ் குறைய ஸ்பான்ஸர் கேட்டகிரியில வருவாய்ங்கன்னு ஒரு கணக்கு.

அவராச்சு அரை நிர்வாணம்.. நாம எழுதின அஜால் குஜால் பதிவுகளையெல்லாம் விழுந்து விழுந்து அக்ரகேட் பண்ணி பிரபாகரன் சாகவில்லைன்னு அஸ்ட் ராலஜிக்கலா ஒரு கணிப்பை எழுதினதுக்கு டர்ராகி தடை பண்ணிட்டாய்ங்க.. ஹூம் அதெல்லாம் ஒரு காலம்.

நம்ம சைட்டும் ப்ளாகும் ஒரு ரேஞ்சுக்கு வந்துட்டதால இந்த இமிசை எல்லாம் கடியாது. ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. சந்துரு அவர்களின் மடல் ஒரு கோணத்துல மன்னிப்பு கடிதம் மாதிரியும் இருக்கு -இன்னொரு கோணத்துல கண்டன கடிதமாவும் இருக்கு. தமிழ் மணத்துல சேர்த்துக்கிட்டா ரெம்ப சந்தோசப்படுவார் போல. அன்னாரின் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்.

கனவுகளுக்கு போயிருவமா?

கன்னி:
இவிகளோட கில்மா கனவுகளை பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவிக கேரக்டரை தெரிஞ்சுக்கனும். இவிக கேரக்டர் என்னவோ அதுக்கு நேர் எதிரிடையா கனவுல பிஹேவ் பண்ணுவாய்ங்க (இதானே லாஜிக்)
கேரக்டர்:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள்.
கனவு:
இவிக கனவுகள்ள கண்டதும் காதல் கான்செப்ட் அதிகம் இருக்கலாம். கனவுல வர்ர காதல்கள் எந்த பிரச்சினையும் இல்லாம சுமுகமா முடியறதா இருக்கலாம்.
இவிக கனவுளுக்கான களம் ஆஸ்பத்திரி, கோர்ட், வங்கின்னு இருக்கலாம். சுக்கிரன் இவிகளுக்கு 2/9 க்கு அதிபதிங்கறதால கனவுகள்ள உறவு பெண்கள் அதிலும் தந்தை வழி உறவுப்பெண்கள் அதிகம் இடம் பிடிக்கலாம்.
இவிக ராசியில சுக்கிரன் நீசம்ங்கறதால எரியற ஸ்டவ் மேல வச்ச பால் பாத்திரத்துல ஒரு ஸ்பூன் பாலை ஊத்தின கணக்கா பொங்கி தீர்த்துருவாய்ங்க போல.
இவிகளுக்கு 4 -7 இடங்களுக்கு குருவே அதிபதிங்கறதால இவிக கனவுகள்ள வர்ர பெண்களுக்கும் - இவிக மம்மிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம். (கடகத்துக்கான இலக்கணம் வேறு : வயசு /உருவத்துல அம்மாத்தனம் இருக்கும் அம்புட்டுதேன்) அந்த பெண்கள் கில்மா டைம்ஸ்ல கூட உபதேச மஞ்சரி கணக்கா பேசியே கொல்வாய்ங்க போல.
குரு இவிகளுக்கு பாவிங்கறதால கல்யாண சீன் வர்ரச்ச ஆரோ ஒருத்தரு வந்து தமிழ் சினிமா கணக்கா
" நிறுத்துங்க" ன்னு ஹை டெசிபல்ஸ்ல சவுண்டு விடலாம்.
துலாம்:
கனவுகாணும் வயசு வர்ர வரை உள்ளூர்ல இருந்தாய்ங்கனா கில்மா கனவுகள்ள முன் பின் சென்றறியாத ஊரெல்லாம் வரலாம். நடுவயசுல வர்ர கனவுகளுக்கு களம் நேட்டிவ் ப்ளேஸ் தான்.
இவிக கில்மா பார்ட்டிய மீட் பண்றச்ச கூட இவருடன் ஒரு நண்பர் இருக்க வாய்ப்பிருக்கு(கனவுல சொன்னேன்)
எதிரிகள் குடும்பத்து பெண்ணுடன் உறவாடுவதாக கனவுகள் வரலாம்.கனவுல (மட்டும்) கொடுத்த வாக்கை அப்படியே காப்பாத்துவாய்ங்க போல.
களத்ர பாவாதிபதியான செவ்வாய்க்கு தன பாவாதிபத்யமும் கிடைக்குது. இதனால கில்மா பார்ட்டிகளுடன் கொடுக்கல் வாங்கல் கூட நடத்துவாய்ங்க. கொடுக்கல் வாங்கல் நடத்தற பார்ட்டிகள் கனவுல வரலாம். ஆனால் கனவுலயும் பணக் கணக்குல தகராறு இடம் பெறலாம்.
சுக்கிரனுக்கு அஷ்டமாதிபத்யமும் இருக்கு. இதனால கனவுல வந்த கன்னி கனவுலயே காலமாயிர்ராப்ல வரலாம் அ இறந்து போன பெண்கள் கனவுல வரலாம்.

"ரசனையை" பொருத்தவரை சப் கான்ஷியஸா ரிஷபத்துக்கும் இவிகளுக்கும் பெருசா வித்யாசமிருக்காது. நடை முறை வாழ்க்கையில கொஞ்சம் துணிச்சல் ,மாற்றத்தை விரும்பும் தன்மை ,மேன்லியா இருக்கனுங்கற துடிப்பு இருக்கலாம்.ஆனால் கனவுல ரெம்பவே ரசிப்பாய்ங்க போல. (பெண்ணை மட்டுமல்ல - உணவு ,கலைகள் இப்படி எதையும்..

அடுத்த பதிவுல விருச்சிகம் ,தனுசு ராசியினரின் கில்மா கனவுகளை பார்ப்போம்.

Saturday, October 15, 2011

விடை கொடு தமிழ்மணமே!

அண்ணே வணக்கம்ணே! நாம வலையுலகத்துக்கு வந்த புதுசுல ஆங்கிலத்துல தான் எழுதிக்கிட்டிருந்தம். அந்திமழை கிராஸ் ஆக டைரக்டா ஆன் லைன்லயே டைப் பண்ணி மொத கவிதையை அனுப்பினோம். இன்னம் சில காலம் அந்திமைழையில எழுதின பிற்காடு கழண்டுகிட்டோம். நம்மை மொத மொதலா ஐடென்டிஃபை பண்ணி ஊக்கப்படுத்தினது கோவி.கண்ணன் தான்.அவருதேன் தமிழ்மணத்தை அறிமுகம் செய்து வச்சாரு.அப்பல்லாம் தமிழ்மனம் , தேன் கூடுன்னு ரெண்டு திரட்டி தேன்.

கடவுளையே குதப்புணர்ச்சிக்கு கூப்பிடற பதிவெல்லாம் அமோகமா தமிழ்மணத்துல பப்ளிஷ் ஆயிட்டிருந்த காலம் அது. நாமும் நம்ம பங்குக்கு - வலைப்பூவோட பேருக்கேத்த வகையில கில்மா பதிவுகள் போட்டுக்கிட்டிருந்தம். ஆனா தமிழ்மணம் எதையும் கண்டுக்கிடலை.(சமீப காலமா கட் பேஸ்ட் - ஆபாசம்னு நிறைய பதிவுகளை தடை பண்ணதா கேள்வி.)

ஒரு கட்டத்துல பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்னு ஒரு பதிவு எழுதினம்.அந்த சமயம் கலைஞர் ஆட்சி நடக்குது. தாத்தா சோனியா தயவை எதிர்பார்த்து ஆட்சி நடத்திக்கிட்டிருந்த காலம்.அது. புலிகளுக்கு ஆதரவா ஆரு வாயை திறந்தாலும் - அட நேரம் கெட்டு போயி கொட்டாவி விட வாயை திறந்தாலும் உள்ளே வைக்கிற நிலை.


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எதுனா எச்சரிக்கை வந்ததா அ சுயக்கட்டுப்பாடா அ எதுக்கு லொள்ளுங்கற மென்டாலிட்டியா தெரியாது " நிர்வாண உண்மைகள்" வலைப்பூவை தடை செய்துட்டதா சொல்ட்டாய்ங்க. அந்த சமயம் நம்ம ஏவரேஜ் ஹிட்ஸ் ஜஸ்ட் 420 தேன் ( ஒரு நாளைக்கு)

என்னங்கடா இது வளர்ந்து வர்ர சமயம் ஆப்படிச்சுட்டானுவளேன்னு கடுப்பாயி கடுமையா திட்டி பதிவெல்லாம் போட்டேன். ஆனால் இப்பம் நம்ம ஆவரேஜ் ஹிட்ஸ் ஆயிரம். தமிழ்மணம் மூலமா வர்ரவுக நெம்பர் ரெம்ப குறைவு. காரணம் நெம்பர் ஆஃப் திரட்டிகள். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னன்னா 50+ சதவீதம் விசிட்டர்ஸ் டைரக்டா கூகுல் மூலமா வந்துர்ராய்ங்க

அல்லாம் சரிபா.. இப்பம் எதுக்கு விஜய்காந்த் கணக்கா இந்த புள்ளிவிவரம்லாம்னு கேப்பிக, சொல்றேன். நிர்வாண் உண்மைகளை தடை பண்ணப்பயே நம்ம தங்கச்சி பதிவான அனுபவஜோதிடத்தையும் தடை பண்ணி வச்சுருந்தாய்ங்க. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டுட்டம்.

இடையில ( சில மாதங்களுக்கு மின்னே தான் ) இன்னா நினைச்சாய்ங்களோ அனுபவஜோதிடத்தை மட்டும் சேர்த்துக்கிட்டாய்ங்க. நாம மன்னாப்பு கடிதம் - வருத்த கடிதம்லாம் எதுவும் தரலிங்கண்ணா. சேர்த்துக்க சொல்லி மன்னாடவும் இல்லிங்ணா.

அந்த சமயம் பார்த்து சரண் அனுபவஜோதிடம் டாட்காம் க்ரியேட் பண்ணி கொடுத்துட்டாரா. அதை தமிழ்மணத்துல சேர்க்க ட்ரை பண்ணா " போனாப்போவுதுன்னு ப்ளாகை சேர்த்திருக்கம் . அதே உள்ளடக்கத்தோட இந்த வலை தளத்தை சேர்க்கமுடியாதுங்கற டோன்ல தெரிவிச்சாய்ங்க.

நாம எத்தீனி பஞ்சாயத்தை செட்டில் பண்ணியிருக்கம். நம்ம பஞ்சாயத்தை செட்டில் பண்ணத்தெரியாதா? நாம ஐயா அனுபவஜோதிடம் வலைப்பூவை நீக்கிருங்க. தளத்தை சேர்த்துக்கங்கன்னு மெயில் பண்ணோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

நானும் தமிழ்மணம் மூலமா வர்ர வாசகர்களை ஏன் இழக்கனும்னு அதுல பாதி இதுல பாதின்னு மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்தேன்.

நேத்து இன்னைக்கு அனுபவஜோதிடம் வலைப்பூ மேட்டர்ல ஒரு திருப்பம். ஜோதிடம்தொடர்பான பதிவுகளை எழுதக்கூடாதாம்.

இதே காரணத்தை காட்டி தொடர்ந்து ரெண்டு பதிவுகளை பட்டியல்ல இருந்து நீக்கினதா தெரிவிச்சாய்ங்க. ஜோதிடப்பதிவுகளை தொடர்ந்து எழுதறாப்ல இருந்தா உங்க வலைப்பூ முடக்கப்படும்னும் எழுதியிருந்தாய்ங்க.

அந்த "பெருமையை" அவிகளுக்கு ரெண்டாவது தாட்டி கொடுக்க விருப்பமில்லாம " பாஸ் ! முடக்கிருங்க"ன்னு மெயில் பண்ணிட்டன்.

நம்ம சிக்ஸ்த் சென்ஸ் என்னா சொல்லுதுன்னா நாம வெற்றிகரமா ( ஐ மீன் ஃபைனான்ஷியலாவும்) வெற்றி நடை போடறதால "எதுனா" செய்வோம்னு எதிர்பார்த்தாப்ல இருக்கு .( ஐ மீன் கட்டண சேவை/ நன் கொடை)

கடவுள் புண்ணியத்துல கட்டண சேவைய நாடும் நிலை நமக்கில்லை. நன் கொடை தரலாம்தான். ஆனால் நம்ம நிபந்தனை தெரியும்ல . நம்மோட டாப் டென் ப்ரியாரிட்டில மட்டும் பதிவுகளை திரட்டறாப்ல இருந்தா தாராளமா தரலாம்.

இவிக அவாளை வாழ வைக்க கோவில்,குளம், தீர்த்தயாத்திரை பதிவுகளையும், சனங்க நமைச்சலுக்கு சொறிஞ்சுக்க , அடுப்பங்கரை, சினிமா பதிவுகளையும் திரட்டி செய்யும் சேவையில பங்கு கொள்ள நமக்கு விருப்பமில்லிங்ணா. அதான் நன்கொடை ஏதும் தர்ரதாயில்லை.

மொத்தத்துல திரட்டிகள் உலகத்து " புதுவெள்ளம் " தமிழ்மணத்தை தடுமாற வச்சிருக்குன்னு நினைக்கிறேன். (பொருளாதார ரீதியா) காலத்துக்கேத்தாப்ல அப்டேட் பண்ணிக்கனும். அதான் வெற்றிக்கு வழி. அதுலயும் பொருளாதார ரீதியிலான வெற்றிக்கு வழி. அதை விட்டுட்டு தமிழ்மணம் ஏதோ சங்கப்பலகைங்கற ஃபீலிங்ல லொள்ளுபண்ணா உள்ளதும் போச்சுரா நொள்ளக்கண்ணானு ஆயிரும். அப்பாறம் அவிக இஸ்டம்.


தமிழ் மணத்துல நம்ம ப்ளாக் லிஸ்ட் ஆனப்ப நம்ம ரேங்க் 1098 இப்பம் 72 . நம்ம வளர்ச்சியை பொறுக்க முடியாத அவாள் க்ரூப் தம் இனத்துக்கே உரிய மொட்டை பெட்டிஷன் புத்தியை காட்டியிருக்கலாம்.

அவிகளுக்கு ஒரே சொல் "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை"

"கேண்டோமை ஒளிச்சு வச்சு முதலிரவை நிறுத்தமுடியாது"