'>
Showing posts with label டார்வின். Show all posts
Showing posts with label டார்வின். Show all posts

Wednesday, October 19, 2011

எங்க இனத்தையே கேவலப்படுத்திட்டியே..

அண்ணே வணக்கம்ணே!

சனம் விஷுவல் மீடியாவுக்கு தாவிக்கிட்டிருக்கிறதால ப்ரிண்ட் மீடியாவும் விஷுவலாக ட்ரை பண்ணுதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். குங்குமம் கூட இதுக்கு விதிவிலக்கில்லை.ஒரு காலத்துல சாவி ஆசிரியரா இருந்தப்ப குங்குமத்தோட ரேஞ்சே வேற .ஹும்.. அது அந்த காலம்.

இன்னைக்கு பத்துப்பக்கங்களை வெறுமனே ஜோக்ஸை போட்டு நிரப்பறான். அதை எல்லாம் படிக்கிறச்ச நமக்கும் சிலது தோணும். அப்படி தோனின ஜோக் ஒன்னை சொல்லி இன்றைய பதிவை ஆரம்பிக்கிறேன்.

தொண்டன் 1: நம்ம தலீவரு ஆனாலும் ரொம்ப மோசம்பா

தொண்டன்:2: எப்படி சொல்றே?

தொண்டன்:1 வறுமை கோட்டை அழிக்க எரேசர் (ரப்பர் ) சப்ளை பண்ண காண்ட்ராக்ட் எடுத்து கோடி கோடியா சுருட்டுயிருக்காரு

ப்ரிண்ட் மீடியாகாரவுகளுக்கு நான் சொல்றது என்னனா விஷுவல் மீடியா காரன் "வெறுமனே பார்க்கிறவனை" பார்த்துக்கட்டும். நீங்க கொஞ்சம் போல ரோசிக்கிறவனை டார்கெட் பண்ணுங்கப்பு.

சரி பதிவுக்கு போயிரலாம்.

ரேஷன் கார்டுல பேரில்லைன்னாலும், ஆதார் கார்டுல பேரை சேர்க்கலின்னாலும் ஸ்வீட்டியும் எங்க வீட்ல ஒரு மெம்பருதேன்.(பாமரேனியன்- பெண் நாய் - இப்பம் 3 வயசு -குட்டின்னு சொல்லலாமானு சம்சயம் ).

பெத்த பொண்ணு,பொஞ்சாதியோட ஒப்பிட்டா லொள்ளு கம்மிதேன். மன்சாளை விட நம்ம பிரச்சினை என்னன்னு புரிஞ்சு வச்சிருக்கிற ஜீவன். நாம ஜோதிடபலன் களை மொபைல்ல ரிக்கார்ட் பண்றச்ச மூச்சு காட்டாம இருக்கும்னா பார்த்துக்கங்க.

நள்ளிரவு ( விடியல்னு சொன்னா கரீட்டா இருக்கும்) வரை கம்ப்யூட்டர்ல வேலை செய்துக்கிட்டிருக்கிறச்ச கட்ன பொஞ்சாதி கணக்கா காலை தூக்கி சேர் கை மேல வச்சு கொஞ்சிக்கிட்டிருக்கும். "படுத்துக்கப்பா.. ஒடம்பு என்னத்துக்காகும்" ங்கற மாதிரி

நம்ம வீட்டு பால்கனிய ஒட்டின சன் ஷேடுக்கு குரங்கு கூட்டம் விசிட் அடிக்கிற நேரம் தவிர மத்த எல்லா நேரத்துலயும் நம்ம பேச்சுக்கு கட்டுப்படும். குரங்கு கூட்டம் விசிட் அடிச்சுட்டா தாளி.. ஏழுமலையானே சங்கு சக்கரத்தோட வந்து நிறுத்துன்னாலும் நிறுத்தாது. மண்டை தெறிக்க குலைச்சுக்கிட்டே இருக்கும்.ஆனால் வால் பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருக்கும். அது என்ன சைக்காலஜியோ தெரியாது.

ஒரு நாளு மாடி போர்ஷன்ஸ்ல ஆருமில்லை. கு.கூ விசிட் அடிச்சுருச்சு. குறுக்கால க்ரில் இருக்கிறதால என்னதான் நடக்குது பார்த்துரலாம்னு ஸ்வீட்டியை கழட்டிவிட்டேன்.

இன்னா ஆச்சுன்னு கேப்பிக. சொல்றேன். அந்த பக்கம் செமை புஷ்டியான கர்பிணியான பெண் குரங்கு+ கண்டன ஊர்வல தொண்டர்கள் கணக்கா குரங்கு கூட்டம்.. இந்த பக்கம் ஸ்வீட்டி. இதனோட குலைப்பு குலைப்பு மாதிரியே தெரியலை. நாம எப்படி நீட்டி முழக்கி பேசுவமோ அப்படியிருந்தது. என்னதான் பேசியிருக்கும்னு ரோசிக்கிறேன். ஊஹூம் ஸ்பார்க் ஆகலை.

நாய் புராணம் போதும் மேட்டருக்கு வாங்கறிங்க. வந்துர்ரன். வந்துர்ரன். ஸ்வீட்டி குரங்கு கிட்டே பேச்சுவார்த்தை நடத்தின மாதிரி நாமும் நடத்த வேண்டி வ்ந்துருச்சுங்கண்ணா.

ஒரு குரங்கின் சுயசரிதைன்னு ஓரு பதிவை போட்டது ஞா இருக்கலாம். நான் என்னமோ அது தமிழ் சிறுகதை வரலாற்றுல மைல் கல்லாயிரப்போகுதுங்கற ஃபீலிங்ல அந்த சிறுகதைய வீராவேசமா அடிச்சு போட்டேன். ஆனாஆரும் கண்டுக்கிடலை.

நாம எழுதற எதையும் எழுதின தினம் ஆரும் படிக்கிறதில்லைங்ணா. ஆனால் தடுக்கி தடுக்கி என்னைக்கோ ஒரு நா படிச்சுர்ராய்ங்க. இன்னைக்கு நாம பீத்திக்கிற ஹிட்ஸ் எல்லாம் பழைய பதிவுகளை அன்னன்னைக்கு பீராய்ஞ்சு படிச்சவுகளோட் எண்ணிக்கைதேன். ஓல்ட் ஈஸ் கோல்டுன்னு நினைக்கிறாய்ங்களோ அ நம்ம பதிவுகள் எல்லாம் வைன் கணக்கா பழசாக பழசாகத்தேன் போதையேத்துதோ என்னமோ தெரியலை.

நிற்க . நல்லவேளையாக . குரங்கின் சுயசரிதை செனேரியோல டஜன் கணக்கா சிறுகதைகள் அடிச்சுரலாம் போல மனசுல ஒரு உற்சாக நீரூற்று பீறிட்டாலும் வயசு (45) கொடுத்த "நரித்தனத்தால" ஒரு கதையோட அடக்கிவாசிச்சுட்டன். பிழைச்சேன்.

கதை போட்டதென்னவோ போட்டாச்சு. ஆனால் மறு நாள் விடியல்ல ஒரு கனா . குரங்கு கூட்டமே என்னை அட்டாக் பண்ணுது.

இன்னாங்கடா இது நாம ஆஞ்சனேயரோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்லதானே இருக்கோம். தப்பு தண்டாவுக்கு போயி பல காலம் ஆகுது. தலீவருக்கு இன்னா கோவம்னு ரெம்பவே குழப்பிக்கிட்டேன். அப்பாலதான் ரீசன் ஸ்பார்க் ஆச்சு.

அதனால ஒரு குரங்கின் சுயசரிதைங்கற சிறுகதையில வந்த மதி என்ற குரங்கிடம் மேட்டரை பேசி தீர்த்துக்கத்தேன் இந்த பதிவு.

இனி மதி Vs முருகேசன் :

முருகேசன்:

வாங்க மதி.. உங்களை நம்ம கதையில கேரக்டராக்கினது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.

மதி:

போய்யா பொங்கி.. அது ஒன்னும் உன் கதையில்லை. ஏற்கெனவே பல காலமா செலாவணியில இருக்கிற கதைதானே

முருகேசன்:

பின்னே என்ன கோவம்?

மதி:

நீ ஒரிஜினல் கதைய அப்படியே சொல்லிட்டு போ -வேணம்னா நீதி -சீத பேதின்னு பீலா விட்டுட்டு போ அதை விட்டுட்டு சனங்களோட பிஹேவியரை எல்லாம் எனக்கு ஒட்ட வச்சு எழுதியிருக்கே..

முருகேசன்:

மதின்னா புத்தினு ஒரு அருத்தம் இருக்கு. மன்சங்க புத்தி குரங்கு மாதிரின்னு சொல்வாய்ங்க. அதனாலதேன் . அந்த கேரக்டருக்கு மதின்னு பேரை வச்சேன். மேலும் மதின்னா நிலவுன்னும் ஒரு அருத்தம் இருக்கு. சந்திரன் தான் மனோகாரகன். நம்ம கதையில மதிங்கறது குரங்கா சித்தரிக்கப்பட்டாலும் அது உளுவுளா காட்டிக்குத்தேன். அது ஒரு அன் எம்ப்ளாய்ட் யூத்துங்கறது அல்லாருக்கும் புரியும்ங்க

மதி:

என்னா..து உங்க மனசு - புத்திக்கு நாங்க ஒரு குறியீடுன்னு சொல்றயா?

முருகேசன்:

அய்யோ மறுபடி வில்லங்கமாவே பேசறிங்க.. இது கூட நான் புதுசா சொன்னது கிடையாது.ஏற்கெனவே ஞானிங்கல்லாம் சொல்லிவச்சிருக்காய்ங்கப்பா


மதி:

அது சரி வெள்ளி தம்ளர் திருடறாப்லல்லாம் எளுதியிருக்கே

முருகேசன்:

ஷோளிங்கர் மலை ஏறியிருக்கன். அப்பன் ஏமாந்தவுக கிட்டேருந்து கண்டதையும் சனங்க கிட்டேருந்து உங்காளுங்க பிடுங்கிக்கிட்டு போறதை பார்த்திருக்கேன். சில திருடங்க உங்களை பழக்கி திருட்டுத்தொழிலுக்கு கூட உபயோக்கிறாய்ங்கனு கேள்வி.

மதி:
முண்டம் முண்டம்.. எங்கயாச்சும் நாங்க எங்களுக்காவ திருடினதை பார்த்திருக்கியா? திங்கற பொருளை தவிர..

முருகேசன்:

சாரிப்பா இதுவும் வாபஸ்..

மதி:

ஆமாம் பீர் எல்லாம் குடிக்கிறாப்ல எழுதியிருக்கே..

முருகேசன்:

இதுவும் ஞானிகள் சொன்னதுதாம்பா. மனுஷனோட மனசு எப்படியா கொத்ததுன்னு சொல்ல குரங்குக்கு பைத்தியம் பிடிச்சு -அதுக்கு மேல கள் குடிச்சு - அதுக்கு மேல தேள் கொட்டினது கணக்கா அலைபாயும்னு சொல்லியிருக்காய்ங்க

மதி:
கிளிஞ்சது போ.. குரங்கு தண்ணி போட்டதை பார்த்திருக்கியா?

முருகேசன்:
ராம நாராயணன் சினிமாவுல போட்டிருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் சின்ன மேட்டருங்க . இதுக்கெல்லாம் கூட அப்ஜெக்சன் பண்ணா எமெர்ஜன்சி பீரியட்ல நியூஸ் எழுதினது போல பதிவு சப்பையாயிரும்பா.

மதி:
சரி எங்கயோ சில குரங்காட்டி குடிகாரனா இருந்து தண்ணிக்கு பதில் தண்ணீய வச்சா எங்காளுங்க குடிச்சாய்ங்கனே வச்சுக்க ..உங்களை மாதிரி அரசாங்கத்தையே டாஸ்மாக் நடத்த விடலியே

முருகேசன்:
வலிக்குது..

மதி:
ஒனக்கு மட்டும் வலிக்கும் எங்களுக்கு வலிக்காதா? சரிய்யா எல்லாமே எக்ஸ்க்யூஸ் பண்ணிர்ரன். அதெப்படி நீ நான் ஒரு கில்மா பார்ட்டிய தேடி -அதுவும் காசுக்கு வரவளை தேடி காசு கொடுக்கிறாப்ல எழுதலாம்.

முருகேசன்:

குற்றால குறவஞ்சின்னு ஒரு மேட்டர் ஞா வருதுப்பா. அதுல "மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" னு ஒரு லைன் வருது

மதி:

என்ன நீ புரியாத பாசைல திட்டறாப்ல இருக்கு

முருகேசன்:
அய்யய்யோ இல்லிங்க.. பெண் குரங்குகள் உதிர்க்கிற பழங்களுக்காக ஆண் குரங்குகள் கெஞ்சும்னு அருத்தம்.. எல்லாம் கணக்கு பண்ணத்தேன் - பட்லியை கவர் பண்ண இதுவும் ஒரு வழி. கெஞ்சல்,கொஞ்சல்ல வேலை நடக்கலின்னா காசால வேலை நடக்கும்னா அதையும் கொடுக்கத்தானே செய்விங்க..

மதி:

தூத்தேறி .. மன்ச புத்திய காட்டிட்டியே.. எங்க இனத்தையே கேவலப்படுத்திட்டியே..

முருகேசன்:

ஹலோ ரெம்ப அலட்டிக்காதப்பா. எங்களுக்குள்ள எதுனா கேவலமான புத்தியிருந்தா அது உங்க கிட்ட இருந்துதான் வந்திருக்கனும். டார்வின் எவால்யூஷன் தியரி தெரியும்ல.. எங்க அரசியல்வாதிங்க கட்சி விட்டு கட்சி தாவ உங்க கிட்டேருந்து வந்த ஜீன்ஸ் தான் காரணம்னு நான் சொல்வேன். நீ இன்னா சொல்லமுடியும்.

மதி:

இருந்த காட்டையெல்லாம் அழிச்சு கழனியாக்கினிங்க. அந்த கழனிங்களையெல்லாம் அழிச்சு வீட்டுமனைகளாக்கிட்டிங்க. மலைகளை எல்லாம் குவாரின்னு குதறிப்போட்டுட்டிங்க. அங்கன எங்களுக்கு சோறு தண்ணி கிடைக்காம ஊருக்குள்ள வந்து அல்லாட வேண்டியதாயிருச்சு.. இதுல எங்களை கேவலப்படுத்தி எழுதினதில்லாம - வக்கணையா வாதடவேற செய்யறே.. மவனே அடுத்த பிறவியில அரசியல்வாதியா பிறந்து உன் ப்ளாகை தடை செய்யாம விடமாட்டேன்..

முருகேசன்:

சார் சார்..

மதி:
போடாங்கொய்யால..

Saturday, October 8, 2011

யோனி பொருத்தமும் - டார்வின் சித்தாந்தமும்


யோனி என்றதும் ஆண்களின் மனதில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். காரணம் இவன் அதன் வழியாகத்தான் உள் செலுத்தப்பட்டான். காரணம் இவன் அதன் வழியே உள் சென்றுதான் வளர்ந்தான். காரணம் அதன் வழியேதான் வெளி வந்தான். இந்த உலகத்துலயே அவனுக்கு பாதுகாப்பான இடம் கருப்பைதான். அதற்கான வழிதான் யோனி. அவனது அடிமனபிம்பங்கள் மீண்டும் கருப்பைக்கு விரட்ட அதற்கான முயற்சிக்கு பாதையும் அந்த யோனிதான். எனவே தான் யோனி என்றதும் ஆண் மனதில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

பெண்ணை பொருத்தவரை யோனி என்றதும் அவள் மனதில் எதுவோ சுருங்குகிறது. இதற்கு காரணம் அவளது அடிமனப்பிம்பங்கள் இந்த மேல் சேவனிஸ்ட் சமுதாயத்தால் கலைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் யோனியும், கருப்பையும் அவளுக்குள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இன்செக்யூரிட்டி உணர்வை தருகின்றன என்றாலும் அவள் பாதுகாப்பை தேடும் ஆணுக்கு பாதுகாப்பு தரும் வல்லமையை பெற்றிருக்கிறாள். ஆனால் அந்த வல்லமையை இந்த சமுதாயம் அவளுக்கான சாபக்கேடாக போதித்து வந்திருக்கிறது.

ஒரே வயது சிறுவர் ,சிறுமிகள் அம்மா அப்பா விளையாட்டு விளையாடும்போது அப்பா ரோலை ப்ளே பண்ற பையன் அண்டர் ப்ளே பண்றதையும் - அம்மா ரோலை ப்ளே பண்ற சிறுமி அந்த பாத்திரத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.

காரணம் சிறுவன் வளர்ந்து குழந்தை ஒன்றை பெற்ற பின்பே தந்தையாகிறான். ஆனால் சிறுமி பை பர்த் அம்மாவாகவே பிறக்கிறாள்.

மீண்டும் அப்பா அம்மா விளையாட்டுக்கே வருவோம். குழந்தை ரோலை ப்ளே பண்ணும் சிறுவனை அவள் தன் மடியில் வைத்து "ஜோ ஜோ" என்று தூங்கப்பண்ணும்போது அவள் முகத்தில் ஜகத்ஜனனியின் ஒளிக்கீற்றை காணமுடியும்.

ஒரு சிறுவன் தன் இன உறுப்பை அவமான சின்னமாக கருதுவதில்லை. ஆனால் சிறுமி அப்படி கருதும்படி பணிக்கப்படுகிறாள். சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கும் மேகலை அணிவித்து அவளில் வெட்கத்தை விதைக்கிறது சமூகம்.

சரி பதிவை இலக்கண தமிழ்ல ஆரம்பிச்சதால ரெம்ப அடர்த்தியாயிருச்சு நம்ம ஸ்டைலுக்கே வந்துருவம்.

யோனி என்பது பொதுச்சொல். ஐ மீன் பெண்ணுறுப்பை மட்டும் சுட்டும் சொல்லல்ல. யோனி என்ற வார்த்தைக்கு இன உறுப்பு என்பதே பொருள். ஆண் யோனி ,பெண் யோனி என்ற வார்த்தைகளை கவனிக்கவும்.

திருமணப்பொருத்தத்தில் யோனிப்பொருத்தம்னுட்டு ஒரு பொருத்தம் இருக்கு. சகட்டு மேனிக்கு மிருகங்களை குறிப்பிட்டிருக்காய்ங்க. குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு குறிப்பிட்ட மிருக யோனின்னு சொல்லப்பட்டிருக்கு.

இது இன உறுப்பின் ஸ்தூல வடிவத்தை சொல்லுதான்னு கேப்பிக. இல்லைன்னு ஒரேயடியா மறுக்க முடியலை. ஆனால் குறிப்பிட்ட மிருகத்தின் குண நலனை அதிலும் செக்ஸ் பழக்க வழக்கங்களை அந்த நட்சத்திரக்காரர் பெற்றிருப்பார்ங்கறதை மட்டும் ஒத்துக்கிட வேண்டியது தான். ஏன்னா நம்ம முன்னோர்கள் அந்தளவுக்கு சூட்சும புத்தி உள்ளவுக. அந்தளவுக்கு அப்சர்வேஷன் உள்ளவுக.

உ.ம் : முதலிரவுக்கு கண்ணால பொண்ணு வெள்ளைப்புடவையையே ஏன் கட்டனும்னு வச்சாய்ங்கனு ரோசிங்க - பதில் தெரிஞ்சவுக கமெண்ட்ல சொல்லலாம்.

சமீபத்துல ஒரு வாரப்பத்திரிக்கையில பிரபல ஜோதிடர் ஒருவர் இது தொடர்பாக தொடர் கட்டுரையே அடிச்சு விட்டிருக்காரு. நம்ம நிர்வாண உண்மைகள்ள ஆதிகாலத்துலயே இதை டச் பண்ணியிருக்கம். ஆனால் ஆரும் பெருசா கண்டுக்கிடலைங்கறதை இங்கன குறிப்பிட்டே ஆகனும்.

மனிதனில் மிருக குணமான்னு கேப்பிக. சொல்றேன். இங்கனதான் டார்வினோட பரிணாம சித்தாந்தம் வருது. ஆனால் டார்வினுக்கு மிந்தியே நம்ம மாணிக்க வாசகர் "புல்லாகி,பூண்டாகி,புழுவாகி"ன்னு பாடி வச்சிருக்கிறதையும் கவனிச்சே ஆகனும்.

முதல் உயிர் தோன்றியது கடலில்னு உயிரியல் சொல்லுது. அது அமீபாவா இருக்க அதிக வாய்ப்பிருக்கு. ஒரு செல் கொழுத்து - தன்னை தானே பிரதியெடுத்து ரெண்டா பிரிஞ்சதன் மூலமாதான் இனப்பெருக்கம் நடந்திருக்கு.

மேற்படி பிரதியெடுத்தலில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே புதிய உயிர்கள் வந்திருக்கு. உ.ம் அமீபாலருந்து மீன் (மச்சாவதாரம்) - ஆமை (கூர்மாவதாரம்) இப்படி பல உயிர்கள் . நமக்கு மிந்தி குரங்கு.குரங்குலருந்து நாம.

இது மட்டும் உண்மையா இருந்தா இந்த பூவிலகில் இருந்த,இருக்கிற எல்லா உயிர்களோட குண நலன் களும் , உடலுறவு பழக்க வழக்கங்களும் மனித ஜீன்களில் இருக்க வாய்ப்பிருக்கா இல்லையா?

( பிரதியெடுத்தலில் ஏற்பட்ட தவறுகள் காரணமா ஒரு சில உயிர்களின் டீட்டெய்ல் மிஸ் ஆகியிருக்கலாம். இல்லேங்கலை)

மிருகங்களில் குரங்கினத்தில் இருந்துதான் சுய இன்பப்பழக்கம் வந்திருக்கனும்னு சொல்றாய்ங்க. இதை மறுக்க முடியுமா?

உடலுறவின் போது இன உறுப்பை முகர்வது,சுவைப்பது இதெல்லாம் கூட தொன்ம நினைவுகளின் எச்சம்னு நான் சொல்றேன். மறுக்க முடியுமா? அட பின்னிருந்து புணரும் முறையில பெண்ணுக்கு "அந்த" பகுதியில் இறுக்கம் ஏற்படுது. ரத்த ஓட்டம் தடுக்கப்படுது. அவள் உச்சம் பெறுவது தடுக்கப்படுகிறதுன்னு தெரிஞ்சும் அந்த முறையை பலர் விரும்ப காரணம் தொன்ம நினைவுகள் தான்னு நான் சொல்றேன் மறுக்க முடியுமா?

இந்த ரீதியில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தரப்பட்டுள்ள மிருக யோனியை பொருத்து அவர்களின் குண நலன் மற்றும் உடலுறவு பழக்கங்கள் இருக்க வாய்ப்பிருக்கா இல்லையா?

எச்சரிக்கை:

வெறுமனே நட்சத்திரத்தை மட்டும் வச்சுக்கிட்டு பொருத்தம் பார்க்கிறது - நட்சத்திரத்தை மட்டும் வச்சுக்கிட்டு குண நலனை கெஸ் பண்றதெல்லாம் தப்போ தப்பு. ஜாதகம் தான் ஃபைனல். ஜாதகம் இதற்கு முரணா இருந்தா எல்லா கணிப்பும் ஃபணால்ங்கறதை ஞா வச்சுக்கங்க.