'>
Showing posts with label செல்வம் பெருக. Show all posts
Showing posts with label செல்வம் பெருக. Show all posts

Thursday, May 10, 2012

கட்டிலுக்கு நேரே


அண்ணே வணக்கம்ணே !
ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ஆரம்பிச்சோம்.இடையில அம்மாவுக்கு ரோசனைகள் சொன்னோம். இங்கே ஒரு சின்ன கண்டுபிடிப்பை பத்தி சொல்லனும்.

இந்த உலகத்தை -நம்ம வாழ்க்கைய நடத்தறது நம்ம எண்ணங்கள் தான் போல. "பூகம்பமா? ஹ.. இங்கயா நெவர்"னுட்டு பெருவாரியான சனம் நினைக்கிற வரை பூகம்பம் வர்ரதில்லை.

"அய்யய்யோ பூகம்பம் இங்கேயும் வருமா"ன்னு கொலாப்ஸ் ஆயிட்டாய்ங்கனா மறுபடி மறுபடி வருது போல . "நம்ம முருகேசன் தானே .. சூரியன் உதிக்காட்டி போனாலும் பதிவு போட்டுருவாரே"னுட்டு நீங்க நினைக்கிற வரை பதிவு போடறதுல எந்த சிக்கலும் வர்ரதில்லை. ஒரு நாள் ப்ரேக் ஆகி தொலைச்சா போதும் அடுத்த நாள் இன்னொரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.

நிற்க..ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சம் கேள்விகள் செமர்த்தியா குவியுது. நமக்குள்ள ஒரு அட்மின் இருந்தாலும் ..ஒரு எல்லை வரைதான்.. அதுக்கப்பாறம் கன்ஃப்யூஷன் வந்தே உடும். நாம என்னவோ குழந்தை பிறப்பு ,பைசா , கல்வி ,வேலை வாய்ப்பு ,கண்ணாலம்னுட்டு ஒரு செனேரியோ வச்சுக்கிட்டு படிப்படியா போகலாம்னு நினைச்சோம். ஆனால் நமக்கு சனம் அனுப்பியிருக்கிற பிரச்சினைகளை பார்த்தா ரெம்ப நாள் தாங்காது போல இருக்கு.

இருந்தாலும் உணர்வு வழி சிந்தனைக்கு இடம் கொடுக்காம அறிவு வழி சிந்தனையோட நம்ம செனேரியோலயே பதிவை தொடர்ரம். ( அவசர ஆலோசனை எதிர்ப்பார்த்து காத்திருப்பவர்கள் மன்னிகவும்)

செல்வச் செழிப்புக்கு நச் பரிகாரங்கள்ள இன்னம் பல விஷயம் சொல்லவேண்டியிருக்கு. அதை முடிச்சுட்டு அடுத்த ஸ்டெப்புக்கு போவம்.

1.உங்க வறுமைக்கு காரணம் ஈகோ, படபடப்பு,சிடு சிடுப்பு, தகுதிக்கு மீறிய தானம் இத்யாதியாக இருந்தால் :

இரவில் 8 க்கெல்லாம் ஒரு குளியல் போட்டுட்டு ( வென்னீர் பெஸ்ட்) சாப்ட்ருங்க .இரவு 9 க்கெல்லாம் கொர் கொர் கேட்கனும். படுக்கைக்கு நேரா சூரிய உதய காட்சி கொண்ட போஸ்டரை வச்சுக்கங்க. அதிகாலை 4.30 லருந்து 6 வரைக்கும் பூர்வாங்க வேலைகளை மட்டும் செய்ங்க. ஃபைல் ரெடி பண்றது. சூட்கேஸ்ல துணி மணி எடுத்து வச்சுக்கறது, ஷெட்யூல் போடறது இத்யாதி.

காலை 6 முதல் மதியம் 12 வரை நியாயம் கேட்க போறது ,பஞ்சாயத்துக்கு போறது, சூப்பர்விஷனுக்கு போறது லாபம் கருதிய சந்திப்புகள் இத்யாதியை அவாய்ட் பண்ணுங்க. இதையெல்லாம் மாலை 6 மணிக்கு மேல செய்ங்க. அப்படி முடியாத பட்சம் ரோஸ் நிற தொப்பி யூஸ் பண்ணுங்க.

காயத்ரி மந்திரத்தை ரிங் டோனா செட் பண்ணிக்கங்க. ரோஸ் நிற ஆடை அணி கலன் அதிகமா யூஸ் பண்ணுங்க (உள்ளாடைகளை இந்த நிறத்துல சூஸ் பண்ணிக்கிறது பெஸ்ட்) பழைய கோபால் பல்பொடி ஞா இருக்குல்ல. அந்த நிறம்.

உங்களை மொகத்துக்கு எதிரா விமர்சிக்கிறவுகளோட சங்காத்தமே வேணா. அம்மா அ அம்மா வயசு அ மதர்லி லுக் கொண்ட பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

வீக் எண்ட்ல ரிமோட் வில்லேஜ் அ ஹில்லி ஏரியால ரிலாக்ஸ் பண்ணிக்கங்க ( குடும்பத்தோட தான் பாஸ்)

2.உங்க வறுமைக்கு காரணம் சஞ்சலம், அன் சர்ட்டெனிட்டி, திடீர் முடிவுகள், இன் ஸ்டெபிலிட்டி இத்யாதியா இருந்தா :

வெள்ளை நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க. வீக்லி ஒன்ஸாச்சும் கடற்கரை ஆற்றங்கரை ஏரிக்கரை இப்படி விசிட் அடிங்க. உச்சி வேளையில முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட்ஸ் வேண்டாம்.பேசாம ஒரு குட்டித்தூக்கம் போடுங்க அ ச்சொம்மா கதை பண்ணிக்கிட்டிருங்க. ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ப்ளானே பண்ணாதிங்க.

பெரிய வேலையா இருந்தாலும் சின்ன சின்னதா ஒடைச்சு ப்ளான் பண்ணுங்க (ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மென்ட்) நீங்க ஃபிசிக்கலா வீக்கு சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்கு. இதை ஞா வச்சுக்கிட்டு ஃபீல்டுக்கு போறவுகளை மோட்டிவேட் பண்ணுங்க. நீங்களே களத்துல குதிச்சுராதிங்க. வளர்பிறை நாட்களில் சந்திரோதய நாட்களுக்கு பிறகு மொட்டை மாடியில மூன் பாத் எடுங்க (?) படுக்கைக்கு நேர சந்திரோதய காட்சி கொண்ட போஸ்டர் வச்சுக்கங்க.

தூக்கம் வர்ர வரைக்கும் குருட்டு யோசனை பண்ணாம டயரி எழுதுங்க - ப்ளான் பண்ணுங்க -படிங்க -குறிப்பெழுதுங்க.

உங்க பிரச்சினைகள் என்னன்னு நீங்களா சொன்னாத்தான் சனத்துக்கு தெரியும். அதே நேரத்துல உங்க முகத்தை பார்த்தே பார்ட்டி எங்கயோ பல்ப் வாங்கியிருக்குன்னு சனம் சொல்லிருவாய்ங்க. அவிக என்ன ஏதுன்னு நோண்டினா வாயை திறக்காதிங்க.வேணம்னா பீலா விடுங்க. ஒரு கெட்ட கனவுப்பா.. வீட்லருந்து வெளிய காலை வைக்கிறேன் எதிர்க்க ..... னுட்டு அளந்து விடுங்க.

3.உங்க வறுமைக்கு காரணம் உங்க முன் கோபம் , எதிரிகள்,ரியல் எஸ்டேட் விவகாரம், சகோதரர்கள் பிரச்சினையா?

உங்க பாடியில ரத்தப்பற்றாக்குறையோ - ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினையோ இருக்கு, சத்தான உணவு -சரியான உடற்பயிற்சி தேவை. அடிக்கடி கட்டி வர்ரது அ ஏற்கெனவே பைல்ஸ் அ மூக்கில் ரத்தம் வடிதல் இத்யாதி பிரச்சினை இருந்தா ஒடனே லைஃப் ஸ்டைல மாத்திருங்க.

வேல் அ சூலம் வச்சு பூஜை பண்ணுங்க. முருகனை அ அம்மனை தியானம் பண்ணுங்க. பேக் கிரவுண்ட்ல வேல் அ சூலம் ஹைலைட்டா இருக்கனும்.

படுக்கைக்கு நேர போர்க்கள காட்சி /உலைக்கள காட்சி /எரிமை வெடிக்கிறது போன்ற போஸ்டர் எதாவது வச்சுக்கங்க. சூரிய அஸ்தமனத்துக்கு பிறவு முக்கிய பேச்சு வார்த்தை / வாக்கு வாதம் இத்யாதி வேணா. ஒடனே நான் வெஜ்ஜுக்கு மாறிருங்க. மத்தவுகளுக்கு ஆஃபர் பண்ணலாம்.

உங்களை விட வயசுல குறைஞ்சவுக அ ரஜினி மாதிரி யூத்தா இருக்கிற கிழவாடிங்க சகவாசம் வேணா. காக்கி நிற உள்ளாடைகள் அணியவும். நம்மை போல தில்லு துரையா இருந்தா /கு.ப வீட்ல இருக்கிறச்சயாச்சும் காக்கி நிற டீ ஷர்ட் அணியவும். ஹெல்த்தை பர்ஃபெக்டா மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு குடும்ப டாக்டரோட சஜஷனோட ரத்த தானம் செய்ங்க. / அனாதை விடுதிக்கு எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் தானம் தரலாம்

ஸ்.. அப்பாடா எப்படியோ விட்ட இடத்துக்கு வந்து சேர்ந்துட்டம். .. பணம் காசு பிரச்சினைகளுக்கான இதர காரணங்களுக்கான பரிகாரங்களை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்..

Monday, May 7, 2012

செல்வம் பெருக " நச் " பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
இஸ்மாயில் சார் தந்த யோசனையின் படி ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் தந்துக்கிட்டிருக்கம். சனங்க தங்கள் பிரச்சினைகளை மெயில் மூலமா சகட்டுமேனிக்கு அனுப்பிக்கிட்டிருக்காய்ங்க.

நாம அவ்வையார் மாதிரி வரிசைப்படுத்தி எழுதத்தான் ப்ளான் பண்ணியிருக்கம். இதான் எதிர்கால உபயோகத்துக்கு நல்லது. பிற்காலத்துல தேடிப் பி(ப)டிக்க வசதியா இருக்கும்.

அதனால மெயில் அனுப்பினவுக கொஞ்சம் பொறுமையா இருந்தா இந்த வரிசைப்படுத்துதல்ல அவிக பிரச்சினைக்கும் தீர்வு வந்துரும்.

நேத்திக்கு பாப்பா மேட்டர் போட்டிருந்தம் . பாப்பாவை நல்லபடியா வளர்க்கனும்னா பைசா வேணமில்லையா .அதனால இன்னைக்கு செல்வம் பெருக " நச் " பரிகாரங்கள்.

1 உடை,அலங்காரம்,அணிகலன்ல எளிமையை கடை பிடிங்க. தினசரி ஒரு அரைமணி நேரமாச்சும் நெத்தி வேர்வை நிலத்துல விழறாப்ல எதையாச்சும் செய்ங்க.

2.தேவையான அளவுக்கு மட்டும் பேசுங்க. (ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்) . தினசரி ஒரு மணி நேரம் கண்ணுக்கும்,வாய்க்கும் துணிய கட்டிக்கிட்டு (ரிப்பன் போதும்) மவுனமா இருங்க.

3.வீட்டை,வாகனத்தை அழகுப்படுத்தாதிங்க. அம்மா இருந்தா அவிகளுக்கு சர்வீஸ் பண்ணுங்க

4.எதுக்கும் முன்ன நிக்காதிங்க. உங்களை நீங்க முன்னிலைப்படுத்திக்காதிங்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க.

5.சின்ன சின்ன நோய் வந்தா உடனே ஆன்டிபயாடிக்ஸுக்கு ஓடாதிங்க. நோயை எஞ்சாய் பண்ணுங்க (அது பெரிய நோய்க்கான முன்னோட்டமா இல்லாத பட்சத்துல) . கடனா கொடுத்த சின்ன சின்ன தொகை,கை மாத்துக்கெல்லாம் கழுத்துல துண்டை போடாதிங்க.

6.உடலுறவுகளுக்கான இடைவெளியை அதிகப்படுத்துங்க. ( இது சாத்தியமாக 7-23 தத்துவம் தெரிஞ்சிருக்கனும் - நம்ம ப்ளாக்ல 7-23ன்னு தேடிப்படிங்க). கட்டில்,ஏசில்லாம் இருந்தாலும் பயன்படுத்தாதிங்க.

7.இஃப் யுவார் ஹேல் அண்ட் ஹெல்த்தி ரத்ததானம் செய்ங்க.

8.அப்பா இருந்தா அவருக்கு சர்வீஸ் பண்ணுங்க

9.இன்னும் ஒரு மணி நேரம் தூங்கனும் போல இருக்கிறச்சயே எந்திரிச்சுருங்க. இன்னும் நாலு பிடி சாப்பிடனும்போல இருக்கிறச்சயே எந்திரிச்சுருங்க.

இன்னைக்கு பதிவு கடுகு போல இருந்தாலும் கடுசா இருக்கும். அட்சரத்துக்கு லட்சம் பொன் தரலாம்.(ஹி ஹி..இந்த ஃபார்முலாவை ஃபாலோ பண்ணி மில்லியனர் ஆயிட்டா)

Monday, April 30, 2012

வறுமைக்கு 10 காரணங்கள்


அண்ணே வணக்கம்ணே !
நம்ம தசாபுக்தியில எதுனா மாற்றம் வந்துருச்சா என்ன தெரியலை. ( நடப்பு : செவ் தசை -சனிபுக்தின்னு ஞா) திடீர்னு வறுமைய பத்தி எழுத ஆரம்பிச்சுட்டம்.

இதுக்கு காரணம் வறுமையானது ஆணோ பெண்ணோ எந்த சூழலிலும் இழக்கக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கிற தன் மானம் -மானத்தை கூட பறிக்க பார்க்கும்ங்கறதுதேன்.

அட மன்சனோட உசுரை விட மானமோ தன்மானமோ பெருசுல்லை. இது நமக்கு புரியுது.புரியாத பார்ட்டிங்க தற்கொலை அது இதுன்னு போயிர்ராய்ங்க.

நம்மை பொருத்தவரை தற்கொலை - கொலை - மரணம்லாம் மனித சக்தியால் திருத்தவே முடியாத தவறு.இதை மன்சனும் செய்யக்கூடாது. அரசாங்கமும் செய்யக்கூடாதுங்கறது நம்ம கொள்கை.

ஆக மன்சனோட உசுருக்கே உலை வைக்கக் கூடிய வறுமை பற்றி நான் படிச்ச பாடங்களை ரிவைஸ் பண்ணிக்கறது + விசயம் தெரியாத உங்களை மாதிரியான பார்ட்டிகளுக்காவ எழுதறது எதுக்குங்கறிங்க..

மன்சன் வாழனும்ணே .. கொஞ்சம் பெட்டரா வாழனும்ணே.. அப்பத்தேன் மனிதம் வாழும்ணே. மனிதம் உள்ளவன் தான் மனிதன் Read More

Monday, November 7, 2011

பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே - இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க. read more

Friday, November 4, 2011

செல்வம் பெருக பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே!
பொருளாதார முடக்கத்துக்கு என்ன காரணம்னு ஒரு பதிவுல சொல்லி - அதுக்கான் தர்கத்தை இன்னொரு பதிவுல விளக்கி உங்களை சீட் நுனிக்கே கொண்டு வந்துட்டன். இன்னைக்கு நிச்சயமா உங்களை ஏமாத்தாம எல்லா பரிகாரங்களையும் அவுத்து விட்டுர்ரன்.

மொதல்ல பொருளாதார முடக்கத்துக்கு என்னெல்லாம் காரணமா இருக்கும்னு ஒரு பட்டியலை தந்தேனே அது புதிய வாசகர்கள் வசதிக்காக இங்கன ரிப்பீட்டு.தொடர்ந்து படிக்க