அண்ணே வணக்கம்ணே .. நேத்து பவர் கட்டோட டக் அஃப் வார் செய்து ஒரு பதிவு போட்டம். மேட்டரு இன்னாடான்னா ஜாதகம் இல்லாமயே நமக்கு வர்ர/வந்த பிரச்சினைகளை வச்சு மேற்படி பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கறதுதேன்.
உங்க பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கினவுங்க இங்கே கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்ய ஆரம்பிங்க. நோயை விட சில நேரம் ட்ரீட்மென்டே பயங்கர லொள்ளு பண்ணிரும். அதனால பரிகாரங்களை ஸ்டார்ட் பண்றதுக்கு மிந்தி எப்போ -எப்பூடி ஸ்டார்ட் பண்றதுங்கற டிப்ஸை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிற ப்ளேயரோட ப்ளே பட்டனை அழுத்தி முழுசா கேட்டுருங்க. சகட்டுமேனிக்கு செய்து சீன் ரிவர்ஸ் ஆயிட்டா நாம பொறுப்பு கடியாதுங்கோ
Read More
Showing posts with label உயிருக்கு உலை. Show all posts
Showing posts with label உயிருக்கு உலை. Show all posts
Monday, November 14, 2011
Monday, March 7, 2011
உயிரையும் பறிக்கும் சந்திராஷ்டமம்

உங்க ராசிக்கு சந்திரன் எட்டுல சஞ்சரிக்கிற ரெண்டே கால் நாளைத்தான் சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க. சந்திரன் எட்டில் (அஷ்டமம்) இருத்தலே சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம்னா எல்லாருக்குமே உள்ளூற டர்ருதேன். ஒரு சிலருக்கு பல்பு வாங்கிய அனுபவமும் இருக்கலாம்.
என்ன ஏதுன்னு தெரியாட்டாலும் "அட விடுப்பா இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்"னு கழண்டுக்கறவுக நெம்பர் சாஸ்தியாயிருச்சு.
அவிக பயப்படறதுலயும் லாஜிக் இருக்கு. சந்திரன் மனோகாரகன். இவர் நல்ல இடத்துல இருந்தா கையில கால் காசு இல்லின்னாலு மனசுல ஒரு மிதப்பு இருக்கும். இவரே அஷ்டமத்துக்கு போயிட்டா ?
சூசைட் டெண்டன்சி உள்ளவன் தற்கொலையே கூட பண்ணிக்கிடலாம். தண்ணீர் டாங்கர்ல அடிபட்டு சாகலாம். ( சந்திரன் -ஜல காரகன்) . ஏற்கெனவே நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவுகளுக்கு இந்த தினங்கள்ள மேல கீழே ஆயிரலாம்.
அட ஒரு போர் போட்டு தண்ணி வரலின்னா வட்டம் தானே. குழாயடி சண்டையில எத்தனை பேருக்கு மண்டை உடைஞ்சிருக்கு -கொலை நடந்திருக்கு.
இப்படியா கொத்த சந்திரன் 8 லருந்தா மட்டும் தான் ஆபத்தா? ஆறுல இருக்கலாமா? ( சந்திரன் ஆறுல இருக்கறச்ச தமிழ் சினிமா ஹீரோ மாதிரி மனசாட்சி கிட்டேல்லாம் பேசவேண்டி வந்துரும் )
12ல இருந்தா பரவால்லையா? 7ல இருந்தா பரவால்லியா? பத்துல இருந்தா பரவால்லியா?
சந்திரனோட முக்கிய காரகங்கள் :இன்ஸ்டெபிலிட்டி, அன் செர்ட்டினிட்டி, எதிர்பாரா தன்மை, நகர்வு, தண்ணீர், மனம் ,நுரையீரல்,சிறு நீரகம். சந்திரன் மரணத்தை காட்டும் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் போது இவை பாதிக்கப்பட்டால் என்ன கதி?
பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க
Subscribe to:
Posts (Atom)