'>

Friday, May 11, 2012

நீதியரசர்கள் -விளம்பரங்கள்

விளம்பரங்கள்ள எத்தனையோ வகை ..ஆனால் ஒரு வகை விளம்பரங்கள் சட்டப்படியே குற்றம் (Magical cure?) முழுமையான தீர்வுக்கான சிகிச்சையே இல்லாத வியாதிகளுக்கு மருந்து இருப்பதாவும் -தங்கள் சிகிச்சையில் முழுப்பலன் கிடைக்கும்னும் விளம்பரம் பண்றது குற்றம் ( ஐபிசில .. எதோ ஒரு செக்சன் படி)

உ.ம் கான்சர்.

ஆனால் பாருங்க அடிப்படையில வழக்கறிஞரான சோ வின் துக்ளக் இதழ்ல இப்படி ஒரு விளமபரம் வந்திருக்கு.

எல்லா விவகாரங்கள்ளயும் புகார் வரட்டும் ,வழக்கு பதிவாகட்டும்னு நீதியரசர்கள் காத்திருக்க தேவையில்லை. பத்திரிக்கை/டிவி செய்தியை அடிப்படையாக கொண்டு அவற்றையே ரிட் மனுவாக ஏற்று விசாரிக்கலாம்.

நீதியரசர் தம் பார்வைக்கு வந்த விவகாரங்களை சுயமாக முன் வந்து விஜாரிக்கலாம் (சுமோட்டோங்கறாய்ங்க). பத்திரிக்கைகளோட இம்சை ஒரு பக்கம்னா டிவிங்களோட இம்சை தனி.

வயாக்ரா ரேஞ்சுல ஒரு ஐட்டம், குண்டடிச்சு போன குட்டிங்க மறுபடி ஸ்ரேயா மாதிரி ஆக ஒரு ஐட்டம், மூட்டு வலின்னு கண்ட கண்ட ஐட்டங்களுக்கு விளம்பரங்கள். ஜோதிடர்கள்,வாஸ்து நிபுணர்களோட அலப்பறை தனி.

நீதியரசர்கள் கூட டிவி பார்ப்பாய்ங்க தானே. அவிகளுக்கு கடுப்பாகாதா? கடுப்பானாலும் ஏன் சொம்மா இருக்கனும். சுமோட்டோவா விஜாரிக்கலாம்ல.

அட இந்த பதிவையே ரிட் மனுவா ஏற்று கூட விஜாரிக்கலாங்ணா..


விளம்பரங்களில் எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லைன்னு வரும். இதுக்கு என்னென்ன அருத்தம் வரும்?

1.இன்னொரு கிளை ஆரம்பிக்கிற அளவுக்கு விலைய கூட்டோ கூட்டுன்னு கூட்டி - தள்ளுபடிங்கற பேர்ல யை குறைச்சு சனத்தை ஏமாத்த ஆரம்பிக்கலை

2.இவனே இன்னொரு பிரபல கம்பெனி பேர்ல சொல்ப மாத்தம் பண்ணி பேரை வச்சிருக்கலாம்.

3. இவன் பெருசா லாபம் எதிர்பார்க்காம கு.பட்ச லாபத்தோட திருப்தி அடையறதால கூட்டம் அம்மி குறுகிய காலத்துலயே பிரபலமாகியிருக்கலாம். இதை பார்த்த வெளியூர் கார பரதேசி எவனாச்சும் இவன் கடை பேரையே வச்சு ஆரம்பிச்சிருக்கலாம்.

4.வங்கி வட்டாரத்துல எப்டி பில்டாப் பண்றதுனு தெரியாம -வங்கிக்கடன் கிடைக்காம இருக்கலாம்.

5.ஓனர் அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளையா இருக்கலாம்- பிரம்மசாரியா இருக்கலாம்/ கண்ணாலமே ஆகியிருந்தாலும் பொஞ்சாதிக்கு கூடப்பிறந்தவுக ஆரும் இல்லாம இருக்கலாம் (கிளைய நிர்வகிக்க)

(விளம்பரங்களில் வரும் வாசகங்களுக்கு பின்னான இது போன்ற செய்திகளை ஆருனா எழுதினா என்னவாம் )

அது சரி இதென்னா திடீர்னு விளம்பரங்கள் மேல/ நீதியரசர்கள் மேல திடீர் ஆர்வம்னு கேப்பிக சொல்றேன்.

நீதியரசர் சந்துரு ஆனந்த விகடன்ல நானும் விகடனும் எழுதியிருக்காரு. விகடனை ஆகாசத்துக்கு ஒசத்தி எளுதி ரிட்டையரான பிறவு வந்தா வேலை கொடுக்கனும்னு ஒரு அப்ளிகேஷன் வேற போட்டிருக்காரு.

விகடன் Vs ஆ.ராசா வழக்கை தான் விஜாரிச்சதா வேற சொல்லியிருக்காரு. ( தன் குறித்த செய்திகளுக்கு விகடனில் தடை கேட்டு ராசா போட்ட வழக்கு)

வழக்கறிஞர்களின் அவலத்தை விகடன் பிரசுரிச்சப்போ -அதை கண்டிச்சு அதுக்கு எதிரா தமிழகம் எங்கும் வழக்குகள் பதிவாக அதில் விகடனுக்காக தான் ஆஜரானதையும் நீதியரசர் சொல்லியிருக்காரு.

தாங்கள் விசாரிக்க வேண்டிய வழக்கின் வாதி -பிரதிவாதிகள் எந்த வகையிலாவது தங்களுக்கு சம்பந்தப்பட்டிருந்தா அந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாத்தறது மரபு.

ஒரு நீதிபதி ( திரு.மோகன் ?) கலைஞரை புகழ்ந்தா மட்டும் தப்பு - இன்னொரு நீதிபதி விகடனை புகழ்ந்தா சரியா?

நான் விகடனுக்கு எதிராக போடும் பதிவுகளை பற்றிய வழக்கு சந்துரு அய்யா முன்னாடி போனா என் கதி என்ன?

எச்சரிக்கை:1
ஊருல கங்கையம்மன் திருவிழா. இதை யொட்டி நம்ம பத்திரிக்கையோட ஸ்பெஷல் ரிலீசாகனும். அந்த வேலையில கொஞ்சம் பிசி.அதான் பதிவை சுருக்கமா முடிச்சுட்டன்.

ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் நாளை முதல் தொடரும்

எச்சரிக்கை:2

கடந்த காலத்துல நாம இதே போன்ற ஒரு கங்கையம்மன் திருவிழா நெருக்கத்துல கங்கையம்மனும் காயத்ரியும் ங்கற தலைப்புல போட்ட பதிவை படிச்சிங்கனா பிராமணீயத்தோட இன்னொரு கோணம் புரியும். அதை படிக்க இங்கே அழுத்துங்க

உடு ஜூட்..

No comments: