Thursday, May 3, 2012
காதலில் உயர்ந்தது கள்ளக்காதல்
அண்ணே வணக்கம்ணே !
இன்னாடா இது வறுமைக்கு காரணங்கள்னு எளுதிக்கிட்டிருந்த பார்ட்டி திடீர்னு கள்ளக்காதலுக்கு தாவிருச்சு அதுவும் க.கா தான் உசத்தின்னு தலைப்பை வச்சிருக்குன்னு சின்டை பிய்ச்சுக்காதிங்க.(இது அவாள் பிரயோகம் - எந்த சூத்திரன் குடுமி வச்சிருந்தான்).
(என்) வறுமைக்கான காரணங்கள் மட்டும் தான் இந்த பதிவிலும் தொடரப்போகுது. . டோன்ட் ஒர்ரி. கள்ளக்காதல் மேட்டரு வேணம்னா இங்கே அழுத்துங்க
(என்)வறுமைக்கான காரணங்கள்னா மஸ்தா கீது நைனா. இந்த காரணங்களை எல்லாம் கண்டு பிடிச்சு ரெக்டிஃபை பண்றதுக்கு 14 வருசம் பிடிச்சது. அதுக்கு நமக்கு உதவினது நாம பார்த்த /பழகின வித விதமான சூழல்கள் தான்.
புதுப்புது சூழலுக்குள்ள என்ட்ரி ஆக நமக்கு உதவினது நம்ம வறுமை -பணத்தேவை- சோசியத்தையே முழு நேர தொழிலா மேற்கொள்றதுல ஒரு கில்ட்டி -அதுக்காவ நாம செய்த வித விதமான மாற்று முயற்சிகள். அந்த முயற்சிகளோட பட்டியலையும் நம்ம அனுபவங்களையும் நாம எளுதி ஆருனா ஒயுங்கா படிச்சு ஃபாலோ பண்ணா 9 கிரகமும் பிரதிகூலமா சஞ்சரிக்கிற காலம் வந்தாலும் வறுமையா? நெவர். நான் ர்ரெடி.. நீங்க ரெடியா?
(என்) வறுமைக்கான காரணங்கள் ( 20 முதல் 30)
21.சுயமரியாதைன்னா நாம உழைச்சு சம்பாதிச்சதை அய்யருக்கு கொட்டிக்கொடுத்து அவன் கால்ல விழாம இருக்கிறது மட்டுமல்ல .. எவனும் நம்மை திஷ்டி பூசணிக்கா உடைக்க கூப்பிட நினைக்காத ரேஞ்சுல மெயின்டெய்ன் பண்றதும் சுய மரியாதைதான்.
சுய மரியாதை இல்லாதவுக படிப்படியா வறுமையில சிக்கிர்ராய்ங்க. ( நம்ம மேட்டர்ல வறுமைக்கு காரணம் சு.ம ஓவராயிட்டதுதேன் காரணம்)
சுயமரியாதைங்கறது கண்ணாடி கதவு மாதிரின்னா அது மேல கல்லு படாம காப்பாத்தற இரும்பு வலை காசு பணம்.
அது இல்லாத சமயம் ரோட்டுல போறவன் எவனோ ஒரு கல்லை போட்டுட்டான்னு வைங்க உடனே பிகில் ரவுடி மாதிரி சவுண்டு விடப்படாது. விட்டா ங்கொய்யால இவனுக்கு இங்கன அடிச்சா வலிக்குதுன்னு அங்கனயே அடிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சீக்கிரமே வலைக்கு ஏற்பாடு பண்ணிக்கனும்.
22. நமக்கு எவனாச்சும் ஆப்படிச்சுட்டா ஒடனே அவன் அம்மாவை "தே..யா"ங்கறோம். ஆனால் ஒரு பாலியல் தொழிலாளி கிட்டே கத்துக்க வேண்டிய மேட்டர் எவ்ளோ இருக்கு தெரியுமா? அது நாலணா சரக்கா இருந்தாலும் சரி - ஃபைவ் ஸ்டார் ரேஞ்சா இருந்தாலும் செரி ப்ரீபெய்ட் சர்வீஸுதேன். ஏண்டான்னா காரியம் முடிஞ்ச பிற்காடு மைண்ட் செட் மாறிரும். வீட்டு வாடகையோ ,பொஞ்சாதி மருந்து செலவோ ஞா வந்துரும் . பேமெண்ட் தேசலாயிரும். முக்கியமா ப்ரொஃபெஷ்னல்ஸ்,கன்சல்ட்டன்ட் சர்வீஸஸ்ல உள்ளவுக - ஏன் இன்ன பிற துறையில் உள்ளவுகளும் இந்த ப்ரீபெய்ட் சர்வீஸை மெயின்டெய்ன் பண்ணாததாலயே மொக்கையாயிர்ராய்ங்க.
நம்மை பொருத்தவரை ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி . கொடுக்கிற காசை 3 தாட்டி வேணாம் வச்சுக்கப்பா.. நான் என்ன பெருசா பண்ணிட்டன்னு சொல்லுவம். அதுக்கப்பாறமும் விடாப்பிடியா தந்தாதேன் அது நம்ம காசு.
23.சனங்களோட சைக்காலஜியை தெரிஞ்சுக்காமயே ரோட்டுக்கு வந்துர்ர சனம் நிறைய இருக்கு. அவன் மணி மைண்டடுப்பான்னு சில பேரை பத்தி பொத்தாம்பொதுவா சொல்லிருவாய்ங்க.ஆனால் அந்த மணி மைண்டட்ல ரெண்டு கேட்டகிரி இருக்கு.
அ) எனக்கு ஒன்னால லாபம்னா என்னால ஒனக்கும் லாபம் இருக்கும்ங்கறது ஒரு க்ரூப்
ஆ)என்னால உனக்கு அரைக்காசு லாபம் கூட இருக்காது.ஆனால் ஒன்னால எனக்கு லாபம் இல்லேன்னா நீ எனக்கு தேவையே இல்லை .
மொதல் கேட்டகிரியை ஐடென்டிஃபை செய்து டீலிங் வச்சுக்கிட்டா வறுமை ஓடியே போகும்.
சனங்கள்ள டிப்பென்டன்ட் -இன்டிபென்டன்டுன்னு இன்னம் ரெண்டு கேட்டகிரி. பொஞ்சாதி சம்பாத்தியத்துல வாழறவன், மாமனார் பவிசுல ரவுசு பண்றவன்லாம் டிப்பென்டன்ட். இவனை நம்பி கோதாவுல இறங்கினா கதை கந்தலாயிரும்.
24, வறுமைக்கு பிறரை - மாற்ற முடியாத பிற அம்சங்களை காரணமா கொள்வது . உ.ம் என் வறுமைக்கு காரணம் எங்கப்பா எதுவும் சம்பாதிச்சு வைக்கலை - பொஞ்சாதி சரியில்லை - ஃப்ரெண்ட்ஸ் சரியில்லை
மேற்படி காரணங்கள் உண்மையாவே இருந்தாலும் ஒழியட்டும்.
நாம நமக்கு சொல்லிக்கிட்டது
" Mr.Murugesan ! if every thing is OK and if you reach your goal there will be no one to think of you or talk about you.
The existance thinks that you are capable to resolve all these things to reach your goal. So that the things are like this.
You must be proud for this. If no one talk about you you are dead."
"முருகேசா ! எல்லாம் கரீட்டா கீதுன்னே வை. உன் டார்கெட்டை ரீச் பண்றேன்னே வை. கொய்யால எவனும் ஒன்னை பத்தி ரோசிக்கவும் மாட்டான். பேசவும் மாட்டான்.
ஒன்னால இந்த எல்லா தடையையும் தகர்த்துக்கிட்டு போக முடியும்னு இயற்கை உன் மேல நம்பிக்கை வச்சிருக்கு. அதுக்கு பெருமை படு.
தாளி எவனும் ஒன்னை பத்தி பேசலைன்னு வை நீ செத்தவனுக்கு சமம்"
25.வாய்ப்பே இல்லாதப்ப அலைஞ்சு பறை சாத்தறது.வாய்ப்பு வரும்போது அ.. இதென்னா.. என் தகுதிக்கு இதெல்லாம் ஜூஜிபின்னு அலட்சியமா டாக்கிள் பண்றது. இது தப்பு. நீங்க ஒரு இன்டலெக்சுவல்னு வைங்க. சாதாரண கள்ளக்காதல் எதிரொலி செய்தியை கூட சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி எளுதனும்.எளுதியிருக்கன்.
26.மிஸ் யூஸ் ஆஃப் ரிசோர்ஸஸ் .. (வேலூர் போயி தினத்தந்தியில சம்பளம் வாங்கிக்கிட்டு பஸ் ஏறி சித்தூர் வர்ரதுக்குள்ள 200 ரூபாய்க்கு மேகசின்ஸே வாங்கிருவன். ( அதுக்கு மிந்தி காஞ்சி கிடந்ததால ஒரு வெறி.. அடுத்தடுத்த மாசங்கள்ள கண்ட்ரோலுக்கு வந்துட்டம்னு வைங்க) . பிசி ஷெட்யூல்ல அந்த மேகசின்ஸை புரட்டிப்பார்க்க கூட நேரம் இருக்காது. அதை அப்படியே லெண்டிங் லைப்ரரிக்கோ -சலூனுக்கோ கொடுத்துருவன்.
27. இன்னைக்கு போலவே என்னிக்கும் நடக்கும்னு ரெவின்யூ எக்ஸ்பென்டிச்சர்ஸை சாஸ்தி பண்ணிக்கிட்டே போறது. ச்சொம்மா வந்த காசு வந்தப்போ ஒரு காரை பேசிக்கினு திருப்பதி போய்வரலாம்.அது வேற கதை. எப்படியும் மாசா மாசம் போறோம். நமக்கே நமக்குன்னு ஒரு காரை வாங்கிட்டா என்னனு ரோசிக்ககூடாது.
28.ஒரு ப்ராஜக்டை எடுக்கறப்பவே இது ஊத்திக்கிட்டா என்ன பண்றதுன்னு ரோசிச்சு ப்ளான் பண்ணனும். (புஸ்தவம் போடனும்னு நினைச்சப்ப விக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு ரோசிச்சு தேன் முன் பதிவு திட்டம் வச்சோம். சேஃப்..)
29.பப்ளிக் ஒப்பீனியனுக்கு மருவாதி கொடுக்கனும். ஒருத்தனை ஊரே நாதாறிங்குதா? அவனுக்குள்ள கொஞ்சமாச்சும் நாதாரித்தனம் இருக்கும். அதை மறந்துட்டு அவனோட அலைஞ்சா பொளப்பு நாறிரும்.
30.சொல்றவன் ஆயிரம் சொல்லுவான். அதுல நம்ம பொசிஷனுக்கு ஒத்துவர்ரத மட்டும் ஃபாலோ பண்ணிக்கனும். வைகறைத்துயிலெழுன்னு சொல்லியிருக்காய்ங்க. நாம "இருட்ல"இருந்தப்ப பத்துமணிக்கு மிந்தி எந்திரிச்சதே இல்லை. ஏண்டான்னா டீ,சிகரட்டு,நியூஸ் பேப்பர் செலவே இருபதை தாண்டிரும். மேலும் க்ளாக் வைஸ் லைஃப்ல உள்ளவன், பந்தா பார்ட்டியெல்லாம் ரோட்டுக்கு வந்திருப்பான். "ஏம்பா ச்சொம்மா தானே இருக்கே .. நம்ம வீட்ல ஒரு போர்ஷ்ன் காலியா இருக்கு.ஆருனா இருந்தா சொல்லேம்பான்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment