'>

Saturday, May 26, 2012

படுக்கையறை பிரச்சினைகள்: 2


அண்ணே வணக்கம்ணே !
நம்ம ஹிட்ஸ் 1000+ ஆ இருந்தது 800+க்கு வந்துருச்சு. இன்னாடா மேட்டருன்னா ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்ச கணக்கா கூகுல் ஆட்சென்சுக்காவ இருந்த தமிழ்பதிவையெல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணி அனுபவஜோதிடம் டாட் காமை இங்கிலீஷ் தளமாக்கி சீன் போட்டோம். டெம்ப்ரரி அப்ரூவல் என்னமோ கிடைச்சது.ஆனால் மறு நாளே டிஸ் அப்ரூவ் பண்ணிட்டாய்ங்க.

இந்த கூத்துல 200 ஹிட்ஸ் குறைஞ்சு போச்சு. சைட்டு தமிழாயிட்ட மேட்டர் சனத்துக்கு தெரிஞ்சு அவிக திரும்பிவர நாள் பிடிக்கும். இந்த மேட்டர் எப்டி நடந்ததுன்னு ஜோதிட ரீதியா பார்த்தா லக்னத்துக்கு அஞ்சுல ராகு -11 ல கேது. அஞ்சுல ராகு இருந்ததால குறுக்கு வழி மேல கவர்ச்சி. 11 ல கேது இருந்ததால ஞானோதயம்.

ஆனால் ஜூன் 14 ஆம் தேதி பாப்பாவுக்கு கண்ணாலங்கற இந்த சிச்சுவேஷன்ல இது வரபிரசாதம் தான். அஞ்சுல ராகு இருந்தா வாரிசுக்கு ஹார்ம் நடக்கனும். அது இப்படி சின்ன புத்திகுழப்பம் - நிராசையோட போயிருச்சு.

இதனாலத்தேன் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல கில்மா பிரச்சினைகளுக்கு ஒரு நாள் முன் கூட்டியே வந்தோம். இதுக்கு மிந்தியே ஒரு எபிசோட் கொடுத்திருக்கனும். தாவிட்டம். ( ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுர்ராய்ங்கண்ணா)

அது இன்னா மேட்டருன்னா நல்லா போயிக்கினு இருக்கிற லைஃப்ல படக்குன்னு தர்கமே இல்லாம சடன் ட்விஸ்ட் வந்து பிச்சை எடுக்கிறது - இனி முப்பது நாளும் பவுர்ணமிடான்னு நெஞ்சை நிமிர்த்தின சமயம் இடி இறங்கிர்ரது.

முதலிரவு தினம் - பால் தம்ளரோட பொஞ்சாதி வருவான்னு காத்திருக்கிறச்ச மாமியார் வர்ரது ( அடச்சே.. என்ன ஒரு உதாரணம் ) போலீஸுன்னு திருத்திக்கங்க.

உலக சுற்று பயணத்துக்கு புறப்படற சமயம் வாயால வவுத்தால போறது - "என் பேரு படையப்பா -இள வட்ட நடையப்பா - என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா"ன்னு சோலோ பாடற சமயம் உள்ளதெல்லாம் குள்ள நரிப்படைன்னு தெரிய வர்ரது.

பழைய தமிழ் சினிமாவுல கடேசியில சுபம் போடுவாங்களே அந்த மாரி ஒரு சிச்சுவேஷன்ல லாஜிக்கே இல்லாம போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடுன்னு போக வேண்டி வந்துர்ரது

போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு.மறைமுக எதிரிகள், செக்யுலரிசம்னாலே கடுப்பாயிர்ரது - நாட்ல உள்ள பாய்க்கெல்லாம் நாலு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிரனும்னு பேசறது.

என்னதான் ஃபாரின் சோப்பு போட்டு 4 தாட்டி மினரல் வாட்டல குளிச்சாலும் புண்கள் வர்ரது.,வெளிநாடு போற மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாவது

ஃபுட்பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி , அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியா திரிய வேண்டி வர்ரது.மனதில் இனம் புரியாத பீதி, மந்திர ஜெபம், யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம்,வீட்டில் விஷபூச்சிகளின் நடமாட்டம்.

இப்படி ஒரு பிக்சர் உங்க லைஃப்ல இருந்தா நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரங்கள் கீழே:

1.தினசரி 1 மணி நேரம் வாரத்துக்கு ஒரு நாள் காவி உடை கட்டி - வினாயகரை தியானம் பண்ணுங்க

2.மாசம் ஒரு நாள் இரவு கோவில்,சத்திரம் , கோவிலை ஒட்டின லாட்ஜு மாதிரி இடங்கள்ள தங்கிட்டு வாங்க. (போகும் போது எந்த பொருளையும் கொண்டு போகக்கூடாது - ரிட்டர்ன்லயும் எதையும் கொண்டு வரக்கூடாது -பிரசாதம் உட்பட)

3.தர்கா,சர்ச்,குருத்வாரா போங்க ( நீங்க முஸ்லீமா இருந்தா தர்கா போக தேவையில்லை -சீக்கியரா இருந்தா குருத்வாரா தேவையில்லை)

4.டாட்டூ -பச்சை வரைஞ்சுக்க / குத்திக்க வாய்ப்பிருந்தால் பாம்போட வடிவத்தை வரைஞ்சுக்கங்க/ குத்திக்கங்க

5.பெண்கள் பாம்பு வடிவிலான ஸ்டிக்கர் பொட்டை யூஸ் பண்ணலாம்

6. தாழம்பூ ஸ்மெல் வர்ர சென்ட் யூஸ் பண்ணுங்க ( இதை போட்டுக்கிட்டு காடு,கம்மா கரைன்னு போயிராதிங்க)

7.பர்ஸ்,பேக் பாம்பு தோல் நிறத்துல இருந்தா நல்லது.

8.துர்கை ,கணபதியை உங்க லைஃப்ல ஒரு பாகமாக்கிக்கங்க

9.பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.

10.Om Gam Ganapathe swaha - Om Dhum durgaayai swaha னுட்டு ஜபிச்சிக்கிட்டே இருங்க

பவர் கட் நேரம் நெருங்கிருச்சு . கீழே தந்திருக்கிற பரிகாரங்களையும் ஒரு லுக் விடுங்க. ரிப்பிட்டேஷன் இருந்தா அவாய்ட் பண்ணிருங்க.

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

1 comment:

PMsyed said...

பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லையே? ஏன் இப்படி ஒருவேளை எனக்குதான் புரியலையா?