'>

Sunday, April 29, 2012

ஏழ்மை -வறுமை-இல்லாமை


அண்ணே வணக்கம்ணே !
ஏழ்மை -வறுமை-இல்லாமைங்கற பதிவை பார்த்துட்டு மூனும் ஒன்னுதானடா மூதேவின்னு கடுப்பாயிருப்பிங்க. ஆனால் தமிழ் வளமான மொழி. மேற்படி 3 வார்த்தைக்கும் இடையில் உள்ள வித்யாசத்தையே 3 பதிவா எழுதலாம். ஆனால் நம்ம நோக்கம் தமிழ் மொழியின் இலக்கிய வளம் குறித்த ஆராய்ச்சி இல்லை.

கடந்த 12 நாட்களாக எப்படியோ 12 ராசிகளுக்குமான புத்தாண்டுபலனை அடிச்சு முடிச்சுட்டம். என்னதான் சோதிடம் விஞ்ஞான பூர்வமானது -அனுபவத்துல ஒர்க் அவுட் ஆகுது – நாம சைன்டிஃபிக்காதானே சொல்றோம் -பதிவுகளால பல பேர் பயனடைஞ்சதா சொல்றாய்ங்களே அது இதுன்னு அஜீஸ் பண்ணிக்கிட்டாலும் வெறுமனே சோதிடப்பதிவா போட்டுட்டு போறதுக்கும் -வெறுமனே ஆன்லைன் ஜோதிடத்தொழிலை மட்டும் கவனிக்கிறதுக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு.

ஜன்ம குரு நம்மை இப்படி ஏகத்துக்கும் “நெல்ல” மாதிரி ரோசிக்க வச்சுர்ராரு போல. இந்த வறுமையை ஒழிப்போம்ங்கறது (கரீபி ஹட்டாவ்) காங்கிரஸோட ஸ்லோகன்.ஏழ்மையை ஒழிக்கிறாய்ங்களோ இல்லையோ ஏழைகளை ஒழிச்சுக்கிட்டே வர்ராய்ங்க.வாழ்க.

வறுமைல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. பணம் என்ன பெரிய பணம் , மனம் இருக்கனும். விரிந்த மனம் உள்ளவனே பணக்காரன் அது இதுன்னு ஜல்லியடிச்சுரலாம். ஆனால் ப்ராக்டிக்காலிட்டின்னு ஒன்னிருக்கே. உலகமெங்கும் முருகேசன்கள் மட்டுமே அ முருகேசன் போல ரோசிக்கிறவுக மட்டுமே இருந்தா இதெல்லாம் சரி. உலகத்துல இன்ன பிற கேரக்டர்ஸும் இருக்காய்ங்களே. அவிகளையும் ஃபேஸ் பண்ணவேண்டியதா இருக்கே.Read More

No comments: