'>

Saturday, March 10, 2012

ஆண்மை இழப்பு : பரிகாரம் 5

அண்ணே வணக்கம் ! டைப்படிச்சவன் கீபோர்டை கெடுத்தான் .க்ளிக் பண்ணவன் மவுசை கெடுத்தாங்கறாப்ல எம்மாம் நெல்ல ஜாதகத்துல பிறந்தாலும் நாறிப்போறவுக இருக்காய்ங்க. அதுலயும் இந்த கண்ணாலம் – கில்மா மேட்டர்ல நிறையவே நாறிப்போறாய்ங்க.

இந்த செனேரியோல லக்னாதிபதி எங்கே இருந்தாலும் ஆண்மை இழப்பு – கண்ணாலத்தடைக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதையடுத்து பரிகாரங்கள் சொல்லிட்டு இருக்கேன். நேத்திக்கு லக்னாதிபதி 1 டு 5 பாவங்கள்ள இருந்தா என்ன பரிகாரம்னு சொல்லியிருந்தேன். இன்னைக்கு லக்னாதிபதி ஆறுல இருந்தா என்ன..ஏதுன்னு பார்ப்போம்..

குறள்னு சொன்னதுமே அறம் ,பொருள்,இன்பம் ஞா வரும். அண்ணான்னதுமே கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஞா வரும்.

ஆறாம் பாவம்னதும் ஞா வரவேண்டியது சத்ரு,ரோகம்,ருணம். லக்னாதிபதின்னா தெரியும். ஜாதகர். ஜாதகரை காட்டும் லக்னாதிபதி சத்ரு,ரோகம்,ருணங்களை காட்டும் 6 ஆமிடத்துல நின்னா என்ன ஆகும்?

மேற்படி சத்ரு,ரோகம்,ருணங்கள் ஜாதகரின் வாழவில் இருந்து பிரிக்க முடியாத அம்சங்களாயிரும்."பகைவர்க்கருள்வாய் நெஞ்சே"ன்னு சொன்னது பகை நம் ஸ்தூல வாழ்வை கெடுக்கிறது கெடுக்காதது அப்பாறம் கதை. பேசிக்கலா நம்ம மன் ஓட்டத்தை -ரத்த ஓட்டத்தை -பாடில நடக்கிற மெட்டஃபாலிசத்தையே மாத்திரும்.

அதனாலதேன் பகைவனுக்கருள்வாய் நெஞ்சேன்னு அந்த சப்ஜெக்டையே கழட்டி விட்டுட்டாய்ங்க. ஜா.ரா என்னை எதிரியா நினைக்கிறாருன்னா அது அவரோட பிரச்சினை. நான் ஜா.ராவை எதிரியா நினைச்சுட்டா அது என் பிரச்சினை ஆயிருது.

கடனை பத்தி சொல்லனுமா? கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னுட்டு கம்பரே சொல்லிப்புட்டாரு.

நோய் மேட்டர்ல வர்ரதுக்கு அது வர்ரதுக்கு மிந்தியே அலார்ட் ஆயிக்கிறது பெட்டர். லக்னாதிபதி 6 ல கீறாருன்னு தெரிஞ்ச அதே கணத்துலருந்து இதனோட சீரியஸ்னெஸ்ஸை புரிஞ்சிக்கிட்டு ஒரு 6 மாசம் லைஃப் ஸ்டைல மாத்திக்கிட்டா போதும். எல்லாமே பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.

இந்த கிரக நிலை உங்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் 3

1.நீங்க நோயாளியாகனும்
2.கடனாளி ஆகனும்
3.வழக்கு வில்லங்கம்னு அல்லாடனும்

இந்த 3 ல எது பெட்டர்னு பார்த்து ச்சூஸ் பண்ணிக்கிர வேண்டியதுதேன். எந்த தொழில்ல உங்க க்ளையன்ட்ஸ் நோயாளி,கடனாளி அ விவகாரமுள்ளவுகளா இருப்பாய்ங்களோ அப்படியா கொத்த தொழிலை ச்சூஸ் பண்ணிக்கனும்.

ஒவ்வொரு நாளையும் கடன்ல ஆரம்பிக்கனும் ( இல்லாட்டி கடன்ல முடியுங்ணா) பட்டிமன்றங்களுக்கு போங்க.முடிஞ்சா கலந்துக்கங்க.

அதுவும் கஷ்டம்னா தினசரி ரெண்டு வெள்ளை பேப்பர் எடுத்துக்கிட்டு ஒரே விஷயத்துக்கு அனுகூலமா ஒரு பக்கம் பிரதிகூலமா ஒரு பக்கம் எழுதி ஃபைல்ல போட்டுக்கிட்டே வாங்க. உ.ம் பால்யமணம் நல்லது /பால்ய மணம் கெட்டது

ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க. வீம்புக்கு கெட்ட பழக்கங்களை தொடராதிங்க
( பான்,பீடா,பீடி,சிகரட்,வெத்தா தின்னு தூங்கறது ,ஸ்ட்ரெஸ் )

மொக்கை:
அது சரி .. ஊர் உலகத்துல கண்ணால மேட்டர்ல கசாப் ஆறவுக மேல உனக்கென்னப்பா அக்கறைன்னு கேப்பிக சொல்றேன்.

க்ளோபலைசேஷன் காரணமா ஒரு சிங்கிள் பர்சன் நெல்லாருக்கனும்னா கூட டோட்டல் உலக மக்கள் நெல்லாருக்கனும்.

ஜான்.எஃப்.கெனடி சொன்னாராம். இந்த உலகத்துல வறுமைங்கறது ஏதோ ஒரு மூலையில் சிறிய அளவே இருந்தாலும் அது உலகம் பூரா பரவ ரெம்ப நாளாகாது.

வறுமையே இம்மாம் சீக்கிரம் பரவுதுன்னா மனித மனங்களிலான அதிருப்தி - அசாந்தி -சமூகத்துல எவ்ள சீக்கிரம் பரவும்னு ரோசிச்சு பாருங்ணா.

மனிதனை மனிதனா உலாவ அனுமதிக்கிறதே பொஞ்சாதி புள்ளைக்குட்டிங்கற மேட்டருங்கதான். இதுலயும் தாளி ஆப்பாயிட்டா அவன் வெடிகுண்டை விட ஆபத்தானவன்.

அதானலதேன் இந்த மேட்டரை நை நைன்னு எளுதிக்கிட்டிருக்கேன். நாளைக்கு 7 ஆம் பாவத்தை பார்ப்போம்.

No comments: