அண்ணே வணக்கம்ணே !
இனி ஒரு விதி செய்வோம்னுட்டு வாரத்துல 3 நாள் ஜோதிடம் - 3 நாள் நாட்டு நடப்புன்னு சொல்லியிருந்தேன். அதை கொஞ்ச நாளைக்காச்சும் பின்பற்ற ஆசை.
நம்ம கணிப்பு நிஜமாகி ஜூலை 12 க்கு மேல் மத்தியில / இலவச இணைப்பு மாதிரி எங்க ஸ்டேட்ல பை எலக்சன் வந்து அடுத்த சர்க்காராச்சும் பெட்டரான சர்க்காரா வருதான்னு பார்த்துக்கிட்டு இந்த விதியை தொடர்வதும் தொடராததும் பத்தி முடிவு பண்ணலாம்.
நம்ம நாட்டு நடப்பே இந்த அரசியல்வாதிகள் கையிலதான் இருக்கு. இவிகளை நினைச்சா ரெம்ப கவலையா இருக்கு. இவிக அல்லாம் தெரிஞ்சுத்தான் செய்றாய்ங்களா? இல்லை எதுனா குட்டிசைத்தான் இவிகளை ஆட்டி வைக்குதா புரியலை.
இவிக முடிவெடுக்கிறதை தள்ளி போடற விதம் - தப்பி தவறி எடுத்தா இவிக எடுக்கிற முடிவு - அதை செயல் படுத்தும் விதம் எல்லாமே பயங்கர கடுப்பா இருக்கு. ரெம்ப கவலையா இருக்கு.
விமானத்துக்கு போடற ஃப்யூயலுக்கு சப்சிடியாம் -ஆனால் மானில அரசு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கு போடற டீசலுக்கு சப்சிடி கடியாதாம்? விமானத்துல போறவன் மட்டும் தான் இந்தியன். பஸ்ஸுல போறவன்லாம் பாக்கிஸ்தானியனா? Read More
No comments:
Post a Comment