'>

Friday, December 9, 2011

வேசியாவதே வெற்றிக்கு வழி !


அண்ணே வணக்கம்ணே !

இன்னாங்கடா இது அனுபவஜோதிடத்துல கிரகமும் கடவுளும்னு ஒரு மினி தொடர்தானே போய்க்கிட்டிருந்தது. இன்னைக்கு புதனை பற்றி வரும்னு பார்த்தா வேசியாவதே வெற்றிக்குவழிங்கறாய்ங்கன் பயந்துக்காதிங்க.

கத்துக்கனுங்கற துடிப்புதான் முக்கியம். நமக்கு கத்துக்கற துடிப்பிருந்தா கலைஞர் கிட்டேருந்து கடும் உழைப்பை கத்துக்கிடலாம், ஜெ கிட்டருந்து செமை தில்லை கத்துக்கிடலாம்,ரஜினி கிட்டேருந்து கூட வேகத்தை கத்துக்கிடலாம் (சினிமாவுல மட்டும்தேன்).

வேசிக்கிட்டேருந்து கத்துக்கிடவும் நிறைய மேட்டர் கீது நைனா. ஒரு சாதகர் திருடனோடு தங்கி இருந்தப்போ " இன்னைக்கும் ஒன்னும் கிடைக்கலை.ஆனால் நாளைக்கு நிச்சயம் எதுனா கிடைக்கும்"ங்கற நம்பிக்கைய பெற்றாராம்.

தாராளமயம், தனியார் மயம், உலக மயம்லாம் அமலான பிற்காடு அல்லாரோட பொயப்பும் வேசி பிழைப்பாத்தான் போச்சு. அதுசரி வேசிக்கும் புதனுக்கு இன்னா லிங்குன்னு கேப்பிக. சொல்றேன். புதனோட பல்வேறு காரகங்களில் வேசியும் ஒன்னு.

புதன்னா பேசிக்கல் காரகம் கலெக்டிங் இன்ஃபர்மேஷன் , மேனேஜிங் இன்ஃபர்மேஷன், ப்ராசசிங் இன்ஃபர்மேஷன், கம்யூனிக்கேட்டிங் தி இன்ஃபர்மேஷன் தான். இதுல ஒரு நிலையில நிலை தடுமாறினாலும் பல்புதேன்.

"லாயர் மாதிரி பட் பட்டுன்னு அடிக்கிறிங்க.இவருக்கு பதில் நீங்க லாயர் ஆகியிருக்கலாம்" இது கம்யூனிகேஷன்.

"ஒரு குண்டு ராட்சஸி வெளிய போயிருக்குன்னு சொன்னிங்களே அது இவங்கதானா?" - இது மிஸ் கம்யூனிகேஷன்.

வேசிக்கு சமூகத்தின் எல்லா தளங்களோடவும் டீல் இருக்கும். லாட்ஜ் ஓனர்,மேனேஜர்,ரூம் பாய்,புரோக்கர், எஸ்.ஐ, ஏ.எஸ்.ஐ, ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள், ஹோம் கார்ட்லருந்து ஸ்டேசனை பெருக்கி தண்ணி வைக்கிற விசாரணை கைதியின் அம்மா வரை எல்லாரோடயும் டீல் இருக்கும். இருக்கனும்.அப்பத்தேன் "தொழில்" நெல்லா நடக்கும்.

ரெய்டு நடக்குமா ,எஸ்.ஐ எப்படிங்கறதுலருந்து -அறுத்து போட்டுட்டு போற சாடிஸ்ட் எவனா ஜில்லாவுல இறங்கியிருக்கானாங்கறது வரை மேட்டர் கையில இருக்கனும்.அப்பத்தேன் தொழில் சுமாரா நடக்கும்.

புதன் நல்லா இருந்தா இதெல்லாம் ஜுஜுபி. இல்லைன்னா நாஸ்திதேன். ஒரு வேசி தன் தொழிலுக்கான கால நேரத்தை சூஸ் பண்றாள், ஆஃபீஸை கரீட்டா சூஸ் பண்றாள், சரிய்யான சென்டரை செலக்ட் பண்ணிக்கிட்டு மார்க்கெட்டிங் பண்றா - டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை நேரத்துக்கு ஏத்தாப்ல மாத்திக்கிறா - அகாலமா வர்ர கஸ்டமரை - அலங்கோலமா வர்ர கஸ்டமரை கூட டாக்கிள் பண்றாள் .

அவளுக்கும் ஒரு மனசிருக்கு -அவளுக்குள்ளயும் வேதனைகள் இருக்கு -அவளுக்கும் வெள்ளை வெட்டைன்னு ஏக பிரச்சினைகள் இருக்கு -ஆனால் எல்லாத்தையும் கவர் பண்ணிக்கிட்டு கஸ்டமரை என்டர்டெய்ன் பண்றாள் - தானும் என்டர்டெய்ன் ஆனதா நடிக்கிறாள்.

இதையெல்லாம் இந்த போட்டிகள் உலகத்துல நாம ஃபாலோ பண்ணலின்னா கஸ்டமர்,கொலிக்,ஹவுஸ் ஓனர்,கோ டெனென்ட்,டெனென்ட், ஏஜெண்ட் இப்படி நம்மோடு தொடர்புள்ள ஆரையுமே ஃபேஸ் பண்ண முடியாது . உத்யோகம் காலி,வியாபாரம் திவால்,தொழில் முட்டை.

ஏஜெண்ட்,புரோக்கர் ,நிருபர், ரெப், ஜோதிடர்,,மருத்துவர்,ஆடிட்டர்,கன்சல்ட்டன்ட் இவிகல்லாம் புதகாரகத்வத்துல வர்ர பார்ட்டிங்க. இவிகளுக்குள்ள -இவிக தொழில் நேர்த்தியில ஒரு "வேசித்தனம்" ஒளிஞ்சிருக்கும். ஐ மீன் அந்த நேரத்துக்கு உங்களுக்கே சொந்தம்னு ஒரு ஃபீலிங்கை வரவைப்பாய்ங்க.ஆனால் அவிக மைண்ட்ல உங்களுக்குன்னு இடமோ -மடமோ நிச்சயம் இருக்காது. வேசியும் இதைத்தான் பண்றாள். அதனாலதான் புத காரகத்வங்கள்ள வேசியையும் வச்சிருக்காய்ங்க.

சரி .. புத கிரகம் ஜாதகத்துல தேசலா நின்னிருந்தா - அதுக்கு பரிகாரமா ஆரை வணங்கனும்னு கேப்பிக சொல்றேன். கிருஷ்ணர்.இவர் ஒரு ஜங்க்சன் பாய்ண்ட். மகா பாரதம் மெகா சீரியல் கணக்கா தறிக்கெட்டு ஓடினாலும் -ஆயிரக்கணக்கான கேரக்டர்ஸ் இருந்தாலும் இதை ஒருங்கிணைக்கிறவர் கிருஷ்ணா தான்.

புதன் என்றால் ஒருங்கிணைத்தல். நெட் ஒர்க், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் ( நியாயமான -சட்டப்படியான) இதுக்கெல்லாம் புதன் தான் காரகம்.கிருஷ்ணரோட முடிவான லட்சியம் கௌரவர்களை ஒழிச்சுக்கட்டிர்ரது.இதுக்காவ கிருஷ்ணா பண்ண வேலைகளை உடைச்சு சொன்னா வேசித்தனம்னு தான் சொல்லனும்.( புத காரகம்) இதுல தூது கூட போறாரு (புத காரகம்).

புதன் சரியில்லின்னா சர்ம ரோகம் வரும். கிருஷ்ணருக்கு உகந்தது துளசி. இது சரும நோய்களை தீர்க்க வல்லது.புதன் பச்சை நிறத்துக்குரியவர். துளசியும் பச்சைதான்.

புதன் அலிகிரகம். கோகுலத்துல தங்களோட மனைவி மார் எல்லாம் கிருஷ்ணரோட கூத்தடிச்சிக்கிட்டிருந்தா அவிக புருசன் மார் எல்லாம் பெருசா ரெபல் ஆகலை. அதுக்கு காரணம் என்னடான்னா நம்மாளுகிட்டே அசலான மேட்டர் கிடையாது. ஊர்காரவுகளோட பசு மாடுகளை மேய்ச்சுட்டு அவிகவிக வீட்டுக்கு கொண்டு சேர்த்தாப்ல - கோபிகைகளையும் நெல்லா டைம் பாஸ் பண்ணி வீடு சேர்த்தாரு. ஒருத்தி கூட கர்பம் ஆகலை.

மேலும் ஒவ்வொரு கோபிகையும் கிருஷ்ணன் தனக்கே சொந்தம்னு நினைக்கிறாப்ல அவிகளையெல்லாம் கிருஷ்ணா டாக்கிள் பண்ணாரு ( ஜோதிடர்,ஆடிட்டர் கணக்கா)

இப்படி புதனுக்கும் கிருஷ்ணருக்கு நிறைய லிங்க் இருக்கு அதனால புதன் கிழமை - அல்லது புதனுக்குரிய நட்சத்திரங்கள்ள துளசி மாலையோட கிருஷ்ணரை போய் பார்த்துட்டு வாங்க. கிருஷ்ணரை ரோல் மாடலா வச்சிக்கிட்டு லைஃபை லீட் பண்ணுங்க. (வேசி கணக்கா) வெற்றி நிச்சயம்.

No comments: