'>

Saturday, December 17, 2011

கேள்வி -பதில் : 2 ஆம் பகுதி


அண்ணே வணக்கம்ணே ! சகபதிவர்கள்/வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இன்றும் தொடர்கின்றன.
கேள்வி: Mani ,muthucitharalgal.blogspot.com, manidakshu@gmail.com
அண்ணே!
என்னணே கேள்வி பதில் பகுதியா? சூப்பர்ணே .நம்ம ரெண்டுபேரோட (சிம்ம)ராசிக்கும் இந்த சனிப்பெயர்ச்சி ஓய்வின்றி சுளுக்க எடுக்குதுணே. வர்ட்டா….


பதில்: தைரிய ஸ்தானமான 3 ல் வந்த சனி " நம்மால் முடியும்" என்ற மனோ தைரியத்தை கொடுக்க -அது நம் முகத்தில் தெரிய சனம் சுளுக்கெடுக்குதுன்னு கூட வச்சுக்கலாமே..

கேள்வி: Sugumarje
sugumarje.com
sugumarje@gmail.com
அய்யா!
என்ன இந்த திடீர் முடிவு? இருப்பினும் தங்கள் எடுத்துக்கொண்ட பணிசிறக்க வாழ்த்துக்கள்.


பதில்: வாங்க சுகுமார்ஜீ திடீர் முடிவுன்னு இல்லை. கொஞ்ச நாளா ஊறிக்கிட்டிருந்த விஷயம். வேலை பளு காரணமா வெளிய வந்துருச்சு. வாழ்த்துக்களுக்கு நன்றி

சுந்தரேசன் (ஜானகிராமன்)
sundaresan@gmail.com
கேள்வி: ஐயா, குரு கிரகம் பெண்கள் ஜாதகத்தில் கற்பை குறிப்பதாக தங்கள் பதிவில் படித்துள்ளேன். அப்படியானால் குறிப்பிட்ட வருடத்தில் மகரத்தில் குரு இருக்க பிறந்த பெண்கள் அனைவரின் கற்புக்கும் களங்கம் ஏற்படுமா? மற்ற கிரகங்கள் பலமிழக்கும் பொழுது குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் குருவுக்கே பாதிப்பு வரும் பொழுது வேறு யார் பார்த்தால் பாதிப்பு குறையும்? தயவுசெய்து பதில் ப்ளீஸ்.

பதில்: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ஒரு பேய்னு ஒரு பழமொழி இருக்கு. ஆனால் இந்த சுந்தரேசன் ஜா.ரா தான்னு நான் கன்ஃபர்ம் பண்ணினதுக்கு அடிப்படை இன்னொரு விதி.. அது இன்னாடான்னா " ஒரு மொள்ளமாரிக்குத்தேன் இன்னொரு மொள்ளமாரியை ஐடென்டிஃபை பண்ற கப்பாசிட்டி இருக்கும்.

ஜா.ராவுக்கு பாவம் நம்ம ப்ரொஃபைல் தேன் கந்தர்சஷ்டி கவசம் மாதிரி. என் அப்பன் பேரு,அம்மா பேரையெல்லாம் உபயோகிச்சா சென்டிமென்ட்ல உ.வ பட்டு ஐடென்டிஃபை பண்ணமாட்டான்னு ஜா.ரா நினைப்பு.

ஆனாலும் இந்த கேள்வியில "செமை லாஜிக் " இருக்கிறதால பதில் தந்தே உடறேன். குரு கற்பை குறிக்கும் கிரகம்னு நான் எங்கயுமே சொன்னதில்லை. தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை, பெரியவுகளுக்கு மருவாதி கொடுக்கிறது இதெல்லாம் தான் குரு காரகம். வேணம்னா இப்படி வச்சுக்கலாம் குருபலம் உள்ளவுக தங்கள் தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை, பெரியவுகளுக்கு மருவாதி கொடுக்கிறது இத்யாதி நிறம்,மணம்,குணம் இத்யாதியால தப்பு செய்ய மாட்டாய்ங்க.

குரு நீசமான காலத்துல பிறந்தவுகல்லாம் கற்பிழந்துருவாய்ங்களான்னா கடியாது. லக்னங்களை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம்.(ஒரு உத்தேசமாத்தேன் -இது ஒன்னும் கல்வெட்டு இல்லிங்கோவ்)

மேஷம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மீனம் -இது க்ரூப் 1
ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலா,மகரம்,கும்பம் -இது க்ரூப் 2

க்ரூப் 1 க்கு குரு பெட்டர் சாய்ஸ். அதனால குரு நீசமானாலும் நற்பலன் குறையுமே தவிர தீய பலன் வந்துராது.

க்ரூப் 2 க்கு குரு பாவி/மாரகன் எட்செட்ராங்கறதால குரு நீசமானாலும் நல்லதுதேன். அதனால குரு நீசகாலத்தில் பிறந்த பெண்களை பற்றியோ - பிறக்கும் பெண் குழந்தைகள் பற்றியோ ஜா.ராவுக்கு கவலை வேண்டாம்.

மேலும் ஒரு பெண்ணின் கற்புக்கு ஆதி நாட்களில் என்னெல்லாம் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கோ அந்த இலக்கணத்தை அடிப்படையா வச்சுப்பார்த்தா இன்னைக்கு ஆரும் பத்தினியில்லை. என் மனைவி -மகள் உட்பட. அதெல்லாம் அவுட் டேட்டட் கிராமர். கற்புக்கு புதுசா இலக்கணம் வகுக்கப்பட்டு பல காலமாச்சுன்னு ஜா.ராவுக்கு ஆருனா சொல்லுங்கப்பா..


கேள்வி: vinoth
mydreamonhome.in ,glomoinc@gmail.com,
தல .. வணக்கம் தல…
எங்க ஊட்டுல எல்லாருகும் பலன் கேட்டச்சு… இனி பிறக்க போறவுங்களுக்கும் சேர்த்து தான். பிறந்ததும் பலனை கன்பார்ம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ஆனா சோதிடம் 360 புத்தகம் வாங்க நான் யாருக்கு சாதகம் கேட்குறது ?

பதில்:
வாங்க வினோத்ஜீ ! "இந்த சலுகை இல்லாமலும் கிடைக்கிறது"ன்னு விளம்பரங்கள்ள பார்த்ததில்லையா என்ன? சாதகம் பார்த்துக்காமலும் புஸ்தவம் வாங்கிக்கலாமே. மேலும் 10 கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆஃபர் பண்ணியிருக்கேன்.

கேள்விகளுக்கு முடிவே கிடையாது. இன்னம் நேரம் இருக்கே. (29 நாள்) அதுக்குள்ளாற ஸ்பார்க் ஆற கேள்விகளை குறிச்சு அனுப்பிருங்க. இல்லாட்டி 1+1 னுட்டு ரெண்டு பிரதி அனுப்பறோம். ஆஃபீஸ்ல ஒன்னு வீட்ல ஒன்னு வச்சுக்கங்க.

கேள்வி: Sankar Gurusamy , ,anubhudhi.blogspot.com ,sankar22k@yahoo.com
இயற்கை பேரிடர்களை முன்பே துல்லியமா கணிக்கும் ஜோதிட முறைகள் இன்றும் இருக்கின்றனவா?? அவ்வாறு இருந்தால் அதை பிரபல படுத்தலாமே?? நிறைய நன்மைகள் ஏற்படுமே?? இதுபற்றி மேலதிக விவரங்கள் தரலாமே??
நன்றி

பதில்:
அய்யா..! பாட்டில்ல இருந்தாதானே கிளாஸ்ல வரும். இந்த மேட்டர்ல நமக்கு தெரிஞ்சதே இத்துணூன்டு. ஆங்காங்கே பிட்டு பிட்டா பொறுக்கி வச்சதை தவிர ஒன்னும் பெருசா இல்லை. உ.ம் நியூட்டன் விதி: கிழமை ஞாயிறு ஆகி,அன்னைக்கு அமாவாசை அ பௌர்ணமியாகி அன்னைக்கே சூரிய/கிரகணம் எதுனா நடந்தா பயங்கர பல்பு.

சனி கடகத்துக்கு வந்தப்போ மட்டும் உள்ளூர்ல கடற்கரையோரம் வாழும் மக்கள் முன் பின் தெரியாத அழிவை எதிர்கொள்ள நேரும்னு பாம்லெட் போட்டு கொடுத்தது ஞா வருது.

குரு ,சனி ,ராகு கேது செவ் எல்லாம் பவர் ஃபுல் ப்ளேனட்ஸ். இவிக எந்த ராசிக்கு வராய்ங்க, அவிக பலாபலம் என்ன? வக்ரமா? சாதாவா? கிரகஸ்தம்பனமா ? சனி செவ் பார்வை இப்படி ஒரு சில அம்சங்களை வச்சு சனத்தை உசார் பண்ணலாம்.

உ.ம் : துலா சனி. நாடார் கடைகளுக்கு (எடைபோட்டு விக்கிறாய்ங்கல்ல -துலாம்னா தராசுன்னு அருத்தம்) ஆப்பு.

குரு வக்ரம் : தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு - வக்ரம் நிவர்த்தியான பொதுக்குனு விழலாம். மேலும் ஒவ்வொரு தேசத்துக்கு ஒவ்வொரு ராசின்னு டிசைட் பண்ணி வச்சிருக்காய்ங்க.அதை வச்சும் முக்கிப்பார்க்கலாம்.

ஸ் ..அப்பப்பா..தொடர் பதிவு போடவேண்டிய மேட்டரை கேள்வி பதில்ல அடக்கறது ரெம்ப கஷ்டம்டா சாமி.

கேள்வி: Sankar Gurusamy ,anubhudhi.blogspot.com/sankar22k@yahoo.com
ஒருவர் தன் முயற்சியால் கிரகங்களின் நிலையை மீறி சில துறைகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை எந்த கிரகங்களின் / பாவங்களின் நிலையை வைத்து தெரிந்து கொள்ளலாம்? முக்கியமாக ஆன்மீகம் மற்றும் தொழில் துறைகளில்.. இந்த துறைகளைப்பற்றி சற்று உதாரணத்துடன் விளக்கினால் நலம். தன் முயற்சியை ஊக்குவிக்கும் கிரகங்கள் / பாவங்கள் பற்றியும் சற்று விளக்கினால் நலம்..

பதில்:

"முயற்சி"ங்கறது படு சாதாரண வார்த்தை. மன்சனுக்கு ஒரு பிரச்சினை வரனும் .அதை அவன் உடல்,மனம்,புத்தி,ஆழ்மன சக்திகளை கொண்டு தீர்த்துக்க ட்ரை பண்ணனும் . அல்லாத்துலயும் அட்டர் ப்ளாஃப் ஆகனும்.அப்பம் ,ஆன்மா விழிக்கும். ஆன்மா விழிச்சுக்கிட்டா ஜாதகம்,கிரகம்லாம் ஃபணால் ஆயிரும்.

ஆனால் நம்ம சனங்களோட முயற்சி எந்த ரேஞ்சுல இருக்குன்னா "ஜெ" கட்டண உயர்வுகளை கொண்டு வந்து ஆப்படிச்சுட்டாய்ங்களா.. அடுத்த தேர்தல்ல பார்த்துப்பம்ங்கற ரேஞ்சுலதான் இருக்கு.

என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை முதல்ல அன்றைய ஆந்திர முதல்வர் -கிங் மேக்கர் சந்திரபாபுவுக்கு 1997 நவம்பர்ல அனுப்பினேன். அங்கருந்து 2003 ,வரைக்கும் ஒரு இழவு ரெஸ்பான்ஸும் கடியாது. நமக்கா சோத்துக்கே கியாரண்டி கிடையாது.

ஆனாலும் எட்டணா மிஞ்சினா கவர் வாங்கிருவன். மொதல்ல விலாசம் எழுதிருவன். அன்னைலருந்து ரெஜிஸ்டர் போஸ்டுக்கு தேவையான ஸ்டாம்புகளை மிஞ்சின காசுக்கெல்லாம் வாங்கி சேர்ப்பேன்.கடேசி ஒரு ரூபா கிடைச்ச தினம் ரெஜிஸ்டர் பண்ணிருவன்.

சனம் "பைத்தார நாயி"ன்னு நம்ம காதுபடவே பேசுவாய்ங்க. வெல் விஷர்ஸ் கூட எல்லாம் சரிப்பா இதை மட்டும் விட்டுரேன்னு அட்வைஸ் பண்ணுவாய்ங்க.

ஆனாலும் 6 வருசம் அடிமேல அடி அடிச்சம். அம்மி நகர்ந்தது . " உங்கள் யோசனைகளை உரிய விதத்தில் உபயோகிச்சுக்கறோம்" னு பதில் கிடைச்சது.

நம்ம "லட்சிய அனலை" தாங்க முடியாம பொஞ்சாதி,பொண்ணுல்லாம் ஒரு வருசம் ஜூன் மாசம் கழண்டுக்கிட்டாய்ங்க .அடுத்த வருசம் பிப்ரவரி மாசம் வரை எனக்கு என் லட்சியம் தேன் முக்கியம்னு இருந்தம். பொஞ்சாதி,பொண்ணெல்லாம் அப்பாறம் வந்து கோர்த்துக்கிட்டாய்ங்க. இதையெல்லாம் தாங்கற கப்பாசிட்டி இருந்தா கிரகம்லாம் சலாம் போட்டு வழி உடும் வாத்யாரே...

2 comments:

Sugumarje said...

அய்யய்யோ நான் கேள்வி கேக்கவே இல்லையே?
இன்னமும் ஜாராவா? :(

Anonymous said...

இயற்கை சீற்றம் குறித்து JOTHIDAR KPN க்கு துல்லியமாக சொல்ல முடியும் தலைவா. நுணுக்கம் கேட்டு தெரிந்து கொள் தலைவா