இந்த உலகத்தை பத்தி "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்"னு நெகட்டிவா சொல்ல மாட்டேன். தாளி இந்த உலகம் பேசறதாலயோ ஏசறதாலயோ ஒரு ம..ரும் நடந்துராது. அதே போல நாம வாழ்ந்தாலும் -தாழ்ந்தாலும் இந்த உலகத்துல ஒரு ம..ரு மாற்றமும் நடந்துரப்போறது கடியாது.
நம்முது கார்ப்போரேட் நிறுவனமா இருந்தா - நாம வி.ஐபியா இருந்தா ஏச்சால லேசா பாதிக்கலாம். அதை கூட காசு பணத்தை வச்சு "அஜீஸ்" பண்ணிரலாம். ஸ்பெக்ட்ரம் ஜி பணத்துல நடக்குதுன்னு தாய்க்குலம் கலைஞர் டிவியை பார்க்காம விட்டுட்டாய்ங்களா? உலகம் ரெம்ப பெருசு. இதுக்கு நம்மை கவனிக்கிற அளவுக்கு நேரம் கடியாது. அதனால ஃப்ரீயா உடுமாமேன்னு அடிச்சு சொல்லிரலாம் ! ஆனால் இதுல ஒரு சிக்கல் இருக்கு.
அது இன்னாடான்னா நாம ஒரிஜினல் உலகத்தை கண்டுக்கலின்னாலும் நம்ம நட்பு சொந்தம் பந்தம் இத்யாதியை ஓலகமா நெனைச்சு பதறிர்ரோம்.இங்கன அவனவனுக்கு ஆசனத்துல கும்பாபிஷேக டொனேஷன் கணக்கா ஆயிரத்து நூத்து பதினாறு கொப்புளங்கள் இருக்கு. அது உடைஞ்சு நச்சுத்தண்ணி ஒழுகிக்கிட்டு புண்ணாகி,ரணமாகி அகல உழறானோ இல்லியோ காலை அகட்டி வச்சுத்தான் நடக்கான்.
நம்ம மேட்டர் அவனுக்கு ஜூஜிபி. நம்மை பற்றி பேச நேரமும் கிடையாது. இதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. அவனோட "வேதனை" தாங்க முடியாத ஸ்டேஜுக்கு போனப்ப நம்ம கொப்புளத்தை பற்றி பேச ஆரம்பிச்சுர்ரான்.அவன் பேச்சுக்கு உலகத்துல மதிப்பில்லே.அதனால ஃப்ரீயா உடுமாமே !
அவனோட நோய்க்கு மருந்து கிடைக்காதவரை ஆசனப்புண்ணை அதிர்ஷ்டமச்சம் கணக்கா எஸ்டாப்ளிஷ் பண்ணி புலம்பிக்கிட்டிருப்பான். ஆனா கெட்டவாடை மட்டும் வந்துக்கிட்டே இருக்கும். நீங்க கை குட்டைய மூக்குக்கு வச்சு போயிட்டே இருப்பிங்க.ஆனால் அவன் உங்க குண்டி பின்னாடி கறையிருக்கான்னு பார்த்துக்கிட்டே இருப்பான்.
வேலை வெட்டி இல்லாததாலயும் - லக்னத்துல உச்சமான குரு கொடுக்கிற கருணை உணர்வாலயும் நம்மால மூக்கை பொத்திக்கிட்டு போக முடியலை.
பென்சிலின் ஆயின்ட்மென்ட் கணக்கா உபதேசங்களை அள்ளி விட்டுக்கிட்டிருக்கோம். (இதெல்லாம் நமுக்கும் சேர்த்துத்தேன் வாத்யாரே)
இந்த உலகத்துல எவனையும் -எவளையும் 365 நாளும் - 24 மணி நேரமும் திருப்தி படுத்த முடியாது. திருப்தி படுத்த ட்ரை பண்ணா நாம நாறிருவம்.இங்கன எல்லாருமே மன நோயாளிகள் தான். சதவீதத்துலதான் வித்யாசம்.
ஒரு மன நோயாளி இன்னொரு மன நோயாளியை சொஸ்தப்படுத்த முடியாது. மன்சன் மன நோயாளியாக காரணம் இந்த உலகமே ஒரு மொஃபசல் பஸ் ஸ்டாண்டுங்கறதை மறந்துட்டதுதான்.
இங்கன நாம பண்ற வேலை உத்யோகம் வியாபாரம் எல்லாமே ஒரு வாகனம் தான். வாகனமேறி எங்கே போறதுன்னு இந்த பன்னாடைகளுக்கு ஒரு ஐடியாவே கிடையாது.
பொஞ்சாதிங்கறவ லாரி க்ளீனர் மாதிரி. டயரை தட்டி கல்லு கில்லு இருந்தா எடுத்து விட்டு க்ரீஸ் அடிச்சு சைடு பார்த்து ரைட் சொல்லனும். பயணத்துல சமைக்கலாம். கேம்ப் ஸ்டவ் வச்சு நாலு சப்பாத்தி போட்டு பசிக்கு திங்கலாம். ஏன் கவுத்து கட்டில் போட்டு ரெஸ்டும் எடுக்கலாம்.ஆனால் சனம் லாரிலயே குடும்பம் நடத்திர்ராய்ங்க. லாரி முன்னுக்கு நகரமாட்டேங்குது. பின்னாடி வர்ர லாரில்லாம் முட்டிக்கிட்டு நிக்குது. ட்ராஃபிக் ஜாம்.இதனால தான் பிரச்சினையே வருது.
பிறந்தோம். பிறந்து படிச்சோம்.படிச்சு வேலை வெட்டிக்கு போகனும். போயி .. நாலு காசு சம்பாதிக்கனும். சம்பாதிச்சு செக்ஸுங்கற தவிர்க்க முடியாத பிரச்சினையை சானலைஸ் பண்ண கண்ணாலம் கட்டிக்கனும். கட்டிக்கிட்டு.. தேடனும்.
நான் யாரு.. எங்கருந்து எங்கன வந்தேன். எங்க போகப்போறேன். அதுக்கு நான் எப்டி ப்ரிப்பேர் ஆகனும்னு வழி வகை தேடனும். தேடி கண்டுப்பிடிக்கலின்னாலும் பஸ் ஸ்டாண்ட்ல 60/40 சைட்டுக்கு அலையறதையும்,பேரனுக்கு சொத்து சேர்க்கிறதையும் விட்டுரனும்.
ஞானம் கிடைக்கலின்னாலும் பரவால்லை தேடனும். அப்பத்தேன் உலகத்தோட மன நோய் குணமாகும். இந்த உலகத்தோட மன நோயை கண்டு உணர்ந்து பரிதாபப்படற உன்னத நிலைக்கு நீங்க வந்துட்டா இந்த உலகம் உங்களை மன நோயாளிங்கும்.
நீங்க கரீட்டான ரூட்ல போயிட்டிருக்கிங்க - உங்க மன நோய் குணமாயிருச்சுங்கறதுக்கு இந்த மன நோயாளி பட்டம்தேன் அங்கீகாரம்.
உலகியல் ரீதியா நீங்க எதை சாதிச்சாலும் அது நிரந்தரம் கடியாது. கடாஃபி காரரு பாவம் என்னென்னமோ எம்.ஜி.ஆர் வேலைல்லாம் செய்தாரு.ஆனால் அவரோட முடிவு என்னாச்சு பார்த்திங்கல்ல.
உங்களோட உலகியல் சாதனைகள் ,அச்சீவ் மெண்ட்ஸ் எல்லாமே வாரப்பத்திரிக்கையில வர்ர ஒரு பக்கக்கதை மாதிரி. அடுத்த மாசமே பழைய பேப்பர் கடைக்கு போயிரும். உளவியல் ரீதியா நீங்க அச்சீவ் பண்ற மெச்சூரிட்டிதான் (கவனிக்கவும்..ஞானமில்லை) அடுத்த பிறவில கை கொடுக்கும்.
நான் என் வாழ் நாளின் மொத சோசியரை சந்திச்சது 1989 பிப்ரவரி. ஆஃபீஸ் திறந்து சோசியம் சொல்ல ஆரம்பிச்சது 1990 மார்ச். இந்த இடைப்படட காலத்துல சோசியம் கத்துக்கற அளவுக்கு நான் புத்திசாலியும் இல்லை. அன்னைக்கிருந்த சூழலும் அதுக்கு ஏற்றதில்லை.
அந்த இடைப்பட்ட காலத்துல நான் சோசியம் கத்துக்கிட்டேன்னு சொல்ல தயக்கமா இருக்கு. வேணம்னா ரிவைஸ் பண்ணிக்கிட்டேன்னு சொல்லலாம்.
மெச்சூரிட்டி கதைய அடுத்த பிறவியில பார்த்துக்கலாம்னு நினைச்சா ..40 வயசு வரை படிக்கலாம். 45 வயசு வரை பணம்பணம்னு அலையலாம். அம்பானி கணக்கா ஊடு கட்டலாம் அதுக்கப்பாறம் பப்ளிக் லைப்ரரிக்கு புஸ்தவம் வாங்கின கணக்கா கண்ணாலம் கட்டலாம். ஃபெர்ட்டைல் சென்டர்கள்ள பழியா கிடக்கலாம். மன நோயாளியாவே வாழ்ந்து சாகலாம்.
இல்லைப்பா மரணத்துக்கப்பாறமும் தொடர்ந்து வரக்கூடிய மெச்சூரிட்டி தான் முக்கியம்.அதை இங்கயே இப்பவே பெறனும் - அடுத்த பிறவியிலயாவது ரிவைஸ் பண்ணிக்கிட்டு ப்ரொசீட் ஆயிரனும்னு நினைச்சா பஸ் ஸ்டாண்ட்ல குடும்பம் நடத்தாதிங்க..
No comments:
Post a Comment