'>

Wednesday, November 23, 2011

ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க..

அண்ணே வணக்கம்ணே!

அந்த காலத்துல தமிழ்வாணன் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்னு போட்டுக்கிடுவாரு. நமக்கு அந்த ரேஞ்சு இல்லின்னாலும் ஜோதிடம் தவிர கு.பட்சம் 1,116 மேட்டர்ல அடிப்பட்டு உதைப்பட்டு கதை பாடியிருக்கோம். நமக்கும் நாலு மேட்டர் தெரியும்.

இன்னைக்கு வலையுலகத்துல விலை போற சரக்கு சோசியந்தான்ங்கறதால் அதை விட்டுர மனசில்லாம கட்டியழறோமே தவிர சூப்பர் மேட்டர்லாம் கீது தலை!

பதிவோட தலைப்பை பார்த்து வந்தவுக ஏமாந்துராம இருக்க அயனான பாய்ண்ட்ஸ் சிலதை கொடுத்துட்டு சோசியத்தை தாண்டி சில மேட்டரையும் இந்த பதிவுல தரத்தான் போறேன். பதிவுக்கு போயிரலாம்..

ஜாதகத்தை பார்த்து பலன் சொல்றதுல எத்தனையோ டெக்னிக் இருக்கு.அதுல ஒரு டெக்னிக் ஒவ்வொரு பாவத்தையும் லக்னமாக கொண்டு பார்க்கிறது. இதை சகட்டுமேனிக்கு எல்லா பாவத்துக்கும் பார்க்காம எந்த மேட்டரை பத்தி எக்ஸ்ட் ரா டீட்டெயிலு தேவையோ அந்த பாவத்தை மட்டும் லக்னமாக்கி பார்த்தா போதும்.

உ.ம் :ரஜினி சார் ஜாதகத்துல ஆயுள் பாவம் எப்படின்னு தெரியனும்னா ஆயுள் பாவத்தை லக்னமாக்கிக்கிட்டு அனலைஸ் பண்ணனும். சாதாரணமா துவாதச பாவங்களை அனலைஸ் பண்றது லாங் ஷாட்டுன்னா இது க்ளோசப் ஷாட்.

ஒரு பார்ட்டிக்கு கண்ணால மேட்டர்ல சிக்கல் இருக்குன்னா 7 ஆம் பாவத்தை லக்னமாக்கி பார்த்து அனலைஸ் பண்ணா எதிர்கால மனைவியோட செல் நெம்பரை கூட கேட்ச் பண்ணிரலாம்.

ஒரு ஜாதகத்துல எந்த மேட்டரை பத்தி டீட்டெய்லா தெரியனுமோ அந்த மேட்டருக்கு காரக கிரகம் எதுன்னு பார்க்கனும். உ.ம் குழந்தைங்க மேட்டருன்னா குரு. அந்த கிரகம் நின்ற பாவத்தை லக்னமாக்கி அது முதற்கொண்டு 6,8,12 ராசிகளை பார்த்தா அந்த மேட்டர்ல உள்ள தங்கு தடை என்னன்னு புரியும்.

உதாரணமாக சுக்ரன் நின்ற பாவத்தை லக்னமாக்கி பார்த்தா ட்ரிபுள் எக்ஸ் சமாசாரங்க கூட அன் லாக் ஆயிரும்.


பிரச்சினை எதுவோ தீர்வும் அதுவே

முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இதை பெண்களோட மார்பகத்துக்கு ஒப்பிட்டு எழுதாத கவிஞரே கிடையாது. அளவுக்கு மிஞ்சினா மெஜாரிட்டியும் நஞ்சுதேன். தாத்தாவுக்கு மெஜாரிட்டி இல்லாததால எதையும் உசத்தாமயே ( விலைய சொன்னேங்க) ஜமாளிச்சுட்டு போய் சேர்ந்துட்டாரு (வீட்டை சொன்னேங்க) ஆனால் அம்மா மெஜாரிட்டி கொடுத்த வசதியில நொங்கு எடுத்துட்டாய்ங்க. ஆங் எங்க விட்டோம்? மாங்கனி..யெஸ்..

சகட்டுமேனிக்கு மாம்பழம் தின்னு தொலைச்சுட்டா மந்தம் தட்டி - பசியே செத்துப்போயிருமாம். அதுக்கு என்னடா மருந்துன்னா மாங்கொட்டைய சுட்டு திங்கனுமாம். பாருங்க பிரச்சினை எதுவோ /எதனால வந்ததோ அதுவே தீர்வுமா இருக்கு.

கில்மாவை கூட எடுத்துக்கங்க. அதை ஜெயிக்கனும்னா ஒரே வழி அதை அனுபவக்கிறதுதேன். ( கொஞ்சம் விழிப்பு - கொஞ்சம் ஜாலாக்கு)

மரண பயத்துக்கு தீர்வு என்ன? மரணமே ..

தனிமைக்கு ஒப்பான உறவில்லை:

தனிமைன்னா என்ன? உறவுகளற்ற நிலை. ஆனால் அந்த தனிமை தான் மிகச்சரியான உறவு. மத்த உறவுகளை மரணமோ - பகைமையோ பிரிச்சுரும். பிரிஞ்சுபோகப்போற உறவுல்லாம் ஒரு உறவா?

என்னைக்கோ ஒரு நாள் பிரிஞ்சு போகப்போற உறவுகளை விட தனிமை பெட்டர் சாய்ஸ் இல்லியா? மற்ற உறவுகளில் போலித்தனம் -சுய நலம்லாம் கலந்து இருக்கும். நாம உண்மையா உறவாட முடியாது. ஆனால் தனிமை?

அதனாலத்தான் சொல்றேன் தனிமைக்கு ஒப்பான உறவில்லை:

அறியாமைக்கு மிஞ்சின ஞானமில்லை

மேலோட்டமா பார்க்கும் போது அறியாமை -ஞானம்ங்கற ரெண்டும் திமுக அதிமுக மாதிரி காண்ட் ராக்டரியோட தரிசனம் கொடுக்கும். கொஞ்சம் சூட்சுமமா பார்த்தா அரை குறை அறிவை விட்டு ஒழிச்சு அக்மார்க் அறியாமைக்கு -அதுவும் ஒரு குழந்தை கணக்கான அறியாமைக்கு திரும்பிப் போறதுதேன் உண்மையான ஞானம்.

அதனாலதான் சொல்றேன் அறியாமைக்கு மிஞ்சின ஞானமில்லை

No comments: