'>

Tuesday, October 11, 2011

ஓ பக்கங்களும் ஞானியின் உளறல்களும்


அண்ணே வணக்கம்ணே!

நேத்திக்கு கலைஞரய்யா போதும் விட்டுருங்கனு ஒரு ஐட்டம் போட்டேன். ஆக்சுவலா ரெட்டை வெடி வெடிச்சிருக்கனும். கல்கியில் ஞானி சாரோட உளறல்களை பத்தியும் நேத்தே எழுதியாச்சு. ஆனாலும்
இடையில இ.பி காரவுக புண்ணியம் கட்டிக்கிட்டா பதிவே போடமுடியாம போயிரப்போவுதுன்னு உசாராகி தாத்தா மேட்டரை மட்டும் அடிச்சு உட்டுட்டன். நல்லவேளை ஆரும் உனுக்கு இன்னா ரைட் கீதுன்னு கேட்கலை.

அந்த தகிரியத்துல இன்னைக்கு மேட்டர்.இந்த ஞானி ஐயா மோடி அரசிடம் "கைச்செலவுக்கு" பணம் வாங்கிக்கிட்டு சிறப்பிதழ் வெளியிட்ட கல்கியில ஓ பக்கங்களை எழுதிக்கிட்டு வர்ராரு. இதுக்கு மிந்தி விகடன்ல,குமுதத்துல எழுதினாரு.இப்பம் கல்கி

( ஓ பக்கம் இத்தீனி பத்திரிக்கைகளுக்கு மாறிவந்ததே அவரோட நேர்மைக்கு ஒரு ஆதாரம் - ஞானி ஐயா.. இந்த பதிவுக்கு கல்கியின் அடுத்த ஓ பக்கத்துல பதில் சொல்ல ட்ரை பண்ணாதிங்க. எடிட் பண்ணிருவாய்ங்க. சித்தூர் முருகேசனை எல்லாம் கல்கி காம்பவுண்ட் பக்கம் கூட விடமாட்டாய்ங்க - அப்பாறம் தன்மானம் அது இதுன்னு ஓ பக்கம் இன்னொரு தாட்டி பத்திரிக்கை மாற வேண்டி வந்துரப்போகுது.. ஃப்ரீயா உடுங்க)


ஞானி சாரு அந்த" இனத்தை சேர்ந்தவருன்னாலும் ஐயாவோட எழுத்துல ஒரு வித நேர்மை இருக்கும். துணிவிருக்கும். அவர் எழுதின பல விஷயங்கள்ள நமக்கு ஒத்தக்கருத்து உண்டு. ஆனாலும் லேட்டஸ்டா சின்னதா ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தையே எழுத முயற்சி பண்ணி - சகட்டுமேனிகு ரோசனைகள் முன் வச்சிருக்காரு. இன்னாடா ஒரு ஆறுதல்னா கல்கி சிறப்பிதழ் வெளியிட்ட மோடி கூட இதையெல்லாம் சீந்தமாட்டாரு.

அரசியல் தூய்மை , நிர்வாக /தேர்தல் சீர்திருத்தம் இது பற்றியெல்லாம் யோசிக்கிறவுக தாம் விரும்பியோ விரும்பாமயோ தங்களுக்கு/ தங்களை போன்றவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க ரூட்டை க்ளியர் பண்ணிக்கிறாப்லயே ரோசிக்கிறாய்ங்க. ( நான் உட்பட). இது ஞானி சாரோட ஓ பக்கத்தை படிச்ச பிற்காடுதான் நமக்கே ஸ்பார்க் ஆச்சு.

நதிகளின் இணைப்பே நோக்கமாய் நாம ப்ரப்போஸ் பண்ணிக்கிட்டிருக்கிற ஆ.இ.2000 திட்டத்திலான ஜனாதிபதி ஜன நாயகம்/ நேரிடை ஜன நாயகம் / பிரதமரை மக்களே தேர்ந்தெடுத்தல் கான்செப்டை எடுத்துக்கங்க.

சீனாமூனாவாகிய நமக்கு பிறரை அஜீஸ் பண்ணிக்கினு போற கப்பாசிட்டி குறைவு (அதுவும் நீண்ட காலத்துக்கு) நமக்கு ஒரு 4 பாசை தெரியும்.

கொஞ்ச காலத்துக்கு ஏதோ ஒரு கட்சியை அஜீஸ் பண்ணிக்கினு பிரதமர் வேட்பாளராயிட்டா போதும் செயிச்சுரலாம் கேட்க ஆளிருக்காதுங்க்றது நம்ம எண்ணமா இருந்திருக்கலாம்.

ஞானி சாரை பொறுத்தவரை அவரு சோடா புட்டி கண்ணாடி - ஒரு சோடா பாட்டில் பறந்தா முழங்கால் எல்லாம் பஞ்சு - பைசாவும் பெருசா புரள்றதில்லை. இதையெல்லாம் சப் கான்ஷியஸா ரோசிச்சு கல்கியில தேர்தல் சீர்திருத்தங்களை ப்ரப்போஸ் பண்ணியிருக்காரு.

அவரோட நோக்கம் / சப் கான்ஷியல் தாட்ஸ் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவரோட ப்ரப்போசல்ஸ் எந்த அளவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பார்ப்போம்.

தேர்தல் செலவை அரசே ஏத்துக்கனும்ங்கறாரு. ஓகே. ஆனால் எல்லா கட்சிகளுக்கு அரசு சமமா செலவழிக்கனும்ங்கறாரு . இதான் நாட் ஓகே..

தமிழகத்துல பா.ஜ.க நிலை என்னனு அல்லாருக்கும் தெரியும். அவிக சொந்தமா செலவழிச்சு கூட்டம் போட்டா மார்கழி பஜனை மாதிரி சுண்டல் வினியோகம் இல்லாம முடிஞ்சுரும்.

அட தமிழ் நாடு பிராமணர் சங்கம் அரசியல் கட்சியா மாறினா அவிகளுக்கும் சமமா செலவழிக்கனுமாங்கறதுதான் நம்ம கேள்வி.

தனித்தெலுங்கானா போராட்டம் நாட் நாட்லருந்து நடக்குது. லேட்டஸ்டா 30/31 ஆவது நாள்னு நினைக்கிறேன். ஆனால் தெலுங்கானா பிராமணர்களுக்கு நேத்துதேன் ஞானோதயம் ஆகியிருக்கு. கொய்யால நாம ஜோதியில சங்கமம் ஆகலின்னா செக்ரட்ரியேட்ல ( மற்ற மானில) கார்வார் பண்ணமுடியாம போயிரும்னு நினைச்சு நேத்து கோவில்களை பூட்டி ஊர்வலம் விட்டிருக்காய்ங்க.

மூக்கர் நல்லவரோ கெட்டவரோ .. அவருடைய எண்ணம் நல்லதோ கெட்டதோ இத்தீனி வருசம் தெலுங்கானா கேட்டு முட்டி மோதினாரு.

ஞானி சாரு ப்ரப்போசல் படி தெலுங்கானா ஐயருங்க கட்சி வச்சுக்கிட்டா அதுக்கும் அரசாங்கம் தேர்தல் செலவுக்கு சமமான சில்லறைய ஒதுக்கனும். எங்கத்தி நியாயம் ப்ரதர்?

ஞானி சாரை பொருத்தவரை இதையெல்லாம் மனசுல வச்சு - பா.ஜ.க /பிராமணர் சங்கம்லாம் பயன் பெறனும்னு இந்த கான்செப்டை எழுதினாருன்னு சொல்லமாட்டேன். ஏன்னா அவரு கெட்டுப்போன ஐயரு.

ஐயரு கெட்டா நாட்டுக்கு லாபம். சூத்திரன் வாழ்ந்தா நாட்டுக்கு லாபம்.ஒரே நிபந்தனை டாக்டர் /ஆடிட்டர்னு பார்ப்பன கூட்டம் அவனை முற்றுக்கையிடக்கூடாது.

( இந்த விஷயத்துல நம்ம ஸ்டாண்ட் என்னடான்னா கடந்த தேர்தல்ல கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விகிதப்படி செலவழிக்கனும் -ஞானி சொல்ற பிரச்சார சாதனங்களில் பிரச்சாரத்துக்கான நேர ஒதுக்கீடு கூட இந்த அடிப்படையில தான் நடக்கனும் - இல்லாட்டி நம்ம கார்த்திக் பேச்சை கூட அரைமணி கேட்கிறதா ஆயிரும் )

அடுத்து அரசு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு செலவழிக்கிற தொகைய முதல் நிவாரண நிதி மாதிரி அரசு மக்களிடமிருந்து வசூலிக்கலாம்ங்கறாரு ஞானி

( மக்களுக்குன்னு எதையும் ரோசிக்கமாட்டேன். செய்யமாட்டேன்னு ஆட்சி அதிகாரத்துல குந்தியிருக்கிறவுகளை விட மக்களுக்காகவே ரோசிப்பேன் -மக்கள் நலமே நோக்கம்னு கிழிச்சுக்கற பார்ட்டிகளாலதேன் சனத்துக்கு ஆப்பு - தி தி தே வளர்ச்சிக்கு சொந்த டிவி வச்சுக்கங்கப்பான்னு சஜஸ்ட் பண்ணினோம். நாறப்பயலுவ கோடிக்கணக்கா கொள்ளையடிச்சுட்டானுவ. பெருமாள் தினசரி நம்ம கனவுல வந்து டிஸ்டர்ப் பண்றாரு)

அடுத்து ஞானி சாரோட இன்னொரு ப்ரப்போசல் இன்னாடான்னா எம்.எல்.ஏ ,எம்.பி எல்லாம் சட்டமியற்றி பரீட்சை பேப்பர் கணக்கா திருத்திக்கிட்டு கண்காணிச்சுக்கிட்டிருந்தா போதும். மத்தவேலையையெல்லாம் கவுன்சிலர்களே பார்த்துரனும். வேலை குறைஞ்சு போறதால எம்.எல்.ஏ எண்னிக்கை நூறுக்கு குறைக்கனும். இவிகள்ளயே சிலரை எம்.பி ஆக்கி தில்லிக்கு அனுப்பிரலாம்னு குழப்பியடிச்சிருக்காரு.

பாவம் .. ஞானி சாரு இதுவரை எத்தினியோ வி.ஐ.பிங்களை கிளிச்சிருப்பாரு. கார்ப்பரேட்டர்களை பத்தி ஏதும் எழுதலைன்னு நினைக்கிறேன். மதுரையில அழகிரி லெவல்ல நடந்ததா சொல்லப்படற அட்டூழியங்களை விட விட கார்ப்பரேட்டர்கள் லெவல்ல நடந்த செட்டில்மெண்டுகள் தான் அதிகம்..

ஒரு கார்ப்பரேட்டர் கெட்டவரா இருந்தா போதும் அரசாங்கம்/அரசு நிறுவனங்களோட பார்வை கூட தன் வார்டு மேல விழாம மேனேஜ் பண்ண முடியும். எம்.எல்.ஏ வை விமர்சிச்சா அவரு ஆருக்கோ சொல்லித்தான் எதுனா செய்யனும். கார்ப்பரேட்டரை கிளிச்சா அவரே ஃபீல்டுல வந்து கிளிச்சுருவாரு அதே செகண்ட்ல கர்பமாக்கிருவாரு. ஞானி சாரு ரோசிக்கனும்.

விகிதாசார பிரதி நிதித்வம் குறித்து அ.ஜோ சைட்ல கூட நிறைய விவாதிச்சிருக்கோம். ( கட்சிகள் தாம் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் எம்.எல்.ஏ எம்.பிக்களை பெற வழி செய்யும் முறை)

இதே வி.பி முறையை ஞானி சாரும் தூக்கிப்பிடிச்சிருக்காரு. ஆனால் பயங்கர சொதப்பல். ஐயா இன்னா சொல்றாருன்னா தேர்தலில் கட்சிகள் பெற்ற ஒட்டு மொத்த வாக்கு சதவீத அடிப்படையில சட்டமன்றம்/பாராளுமன்றத்துல இடங்கள் ஒதுக்கப்படுமாம். அந்த இடங்களுக்கு கட்சிகள் உறுப்பினர்களை நியமனம் பண்ணுமாம்.

நம்ம ப்ரப்போசல் இனனாடான்னா தேர்தலுக்கு மிந்தியே கட்சிகள் வேட்பாளர்களை ப்ரியார்ட்டி அடிப்படையில அறிவிச்சிருவாய்ங்க. கட்சி பெற்ற வாக்குகளின் அடிபப்டையில் ஒரே சீட் அலாட் ஆனா பட்டியல்ல மொதல்ல உள்ள ஆசாமி எம்.எல்.ஏ ஆயிருவாரு. ரெண்டு சீட் அலாட் ஆனால் பட்டியல்ல உள்ள ரெண்டாவது ஆசாமி எம்.எல்.ஏ.

ஆராச்சும் எம்.எல்.ஏ அகாலமா செத்தா கட்சியோட ப்ரியாரிட்டி /முன்னுரிமை பட்டியல்ல அடுத்து உள்ள வேட்பாளரை எம்.எல்.ஏ ஆக்கிரலாம்.விரயமா இடைத்தேர்தல் எல்லாம் நஹி.

ஞானி சாரு சொல்ற விஷயம் மட்டும் அமலாகிட்டா திமுகவுல ஆதித்யா ( கனிமொழி மகன்) வரை எம்.எல்.ஏ ஆன பிற்பாடுதேன் அன்பழகனே எம்.எல்.ஏ ஆகமுடியும்.

ஞானி சாரோட இந்த யோசனைகளுக்கான கங்கோத்ரி அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் . அதை கிழிக்க ஆரம்பிச்ச ஞானி ஊழலை ஒழிக்க இது மட்டும் போதாது இன்னம் இன்னா இன்னாவோ பண்ணனும்னு ஒரு பெரிய பட்டியலை போட ஆரம்பிச்சாரு. அந்த பட்டியல்தான் இப்படி விடிஞ்சது.

மாற்று முறைகளை ப்ரப்போஸ் பண்றவுகளுக்கெல்லாம் சப்கான்ஷியஸா அதிகாரத்துக்கான தங்களோட ரூட்டை க்ளியர் பண்ணிக்கனும்ங்கற எண்ணம் இருக்கும்னு இடையில சொல்லியிருந்தேன். இதான் ஹிடன் அஜெண்டா.

ஹசாரோவோட ஹிடன் அஜெண்டா என்ன தெரியுமா? அவருக்கு வயசாயிருச்சு. தில்லைய தாண்டி ஓட்டு வாங்க முடியாது ( தில்லியிலயே சந்தேகம்தேன் ) ஆனாலும் நாட்டை ஆளனும். அதுக்கு ஜன் லோக் பால் ஒரு வழி. பேர்லல் கவர்ன்மென்டு நடத்தலாம்.

இறைவா! இந்த நாட்டை சீர்திருத்தக்காரர்களிடமிருந்து காப்பாற்று. அரசியல்வாதிகளை நாங்களே பார்த்துக்கறம்.

போனஸ்: நம்ம வினோத்ஜீ உருவாக்கின அனுபவஜோதிடம் கூகுள் குழுமம் ஹார்லிக்ஸ் சாப்பிடாமயே புஷ்டியாகிட்டு வருது . இதுவரை சேர்ந்துள்ள உறுப்பினர்கள் 15. இதுவரை போஸ்ட் ஆன விஷயங்கள் 17 .

புதுவரவு:
சூப்பர் கில்மாவுக்கு தேவையான கிரகஸ்திதி (விரைவில்)

நீங்களும் இங்கே அழுத்தி மெம்பராயிருங்க. இல்லாட்டி கில்மா நஹி..

No comments: