சம்பவம் :1
வாணியம்பாடியில இருக்கிறச்ச நம்ம ரூமுக்கு ஒரு "ஜின்"னை ( தேவதை) அனுப்பி வச்ச பார்ட்டிக்கு ரெட்டை குழந்தை பிறந்தது. ரெண்டும் பெண் குட்டிதேன். லக்னம் சிம்மம். அவர் பெரிய " வேலை" க்காரரு . நமக்கு தான் தார தம்யமே கிடையாதே. ஆரு கேட்டாலும் -கேட்காட்டாலும் ஸ்பார்க் ஆனதை எடுத்து விட்டுக்கிட்டே இருப்பமே.
என்.டி.ஆர் பலான வருசம் -பலான மாசம் -பலான தேதி டிக்கெட் போட்டுருவாருன்னு முன் கூட்டி கணிச்சு தன் பத்திரிக்கையில எழுதின பார்ட்டி சக்கரம் சொல்றேன் போட்டுக்க . உ..ம் போட்டியா இதான் என் ஜாதக சக்கரம் ச்சொம்மா சொல்லு ..எதுனா சொல்லுன்னதும் அவையடக்கத்துக்கு ரெண்டு வசனம் விட்டுட்டு கஜகர்ணம் கோகர்ணம்லாம் போட்டு காட்டின கிராக்கி நாம.
அதனால " ரெண்டு குழந்தையில எந்த குழந்தைக்கு தலையில முடி குறைச்சலா இருக்கோ அதுக்கொன்னும் பிரச்சினை வராது. அடுத்த குழந்தைய மாத்திரம் கேர்ஃபுல்லா பார்த்துக்கனும்"னு சொன்னோம். அவரும் அசால்ட்டா விட்டுட்டாரு.
ரெட்டை ரிலீஸாகி வாரமா பத்து நாளா கியாபகம் இல்லே. தலை நிறைய முடிவச்சிருந்த குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஆரம்பமாயிருச்சு. அவர் என்னென்னவோ ஜீ பூம்பா வேலையெல்லாம் காட்டியும் ஒன்னும் பேரலை. டிக்கெட் போட்டுருச்சு.
அடுத்த வாரமே அடுத்த குழந்தைக்கும் வ.போ ஆரம்பம்.ஆசாமி பீதியாயி - ரூமை தேடி வந்துட்டாரு. நாம டச் பண்ணாத சப்ஜெக்டே கிடையாதே. ( ஆனால் எல்லாம் அரைகுறைன்னு ஆருப்பாது போட்டு கொடுக்கிறது)
மேட்டரு தன்னுதுன்ன உடனே மன்சனுக்கு எல்லாமே உதற ஆரம்பிச்சுருது.
அவர் மறந்து போன ஒன்னு ரெண்டு மூணு மேட்டரை கியாபகப்படுத்தினோம். உ.ம் அஷ்ட திக் பந்தனம். எல்லாத்தையும் செய்ய வச்சோம். - ஏழுமலையானுக்கே லட்டு கொடுத்த கணக்கா ஒரு செம்புல மஞ்ச தண்ணி கலக்கி தரச்சொல்லி நம்ம பங்குக்கு சில மந்திரங்களை ஜெபிச்சு அவிக வீடு + வீட்டை சுற்றிய காலி இடத்துல தெளிச்சம்.
பாப்பா தன்னை காதலோட அழைச்ச மரணத்துக்கு " வர மாத்தன் போ"ன்னுருச்சு. இந்த சம்பவத்துக்கு ஜோதிட ரீதியான காரண காரியங்களை ஆருனா விளக்கிருவாய்ங்கங்கற நம்பிக்கையில படம் வரைந்து பாகங்களை குறிக்கலை. ( என்ன பாண்டி..தூள் பண்ணுங்க)
சம்பவம்:2
"இடம், பொருள், ஏவல், குலம், கோத்திரம் அறிந்து ஜோதிட பலன்களை சொல்"றதெல்லாம் அந்த காலத்துக்கு வேணம்னா சரியா இருந்திருக்கலாம். இப்பம் தலித்தா இருந்தா ரிசர்வேஷன் - நான் தலித்தா இருந்தா சாஃப்ட் வேர்னு போயிர்ராய்ங்க. யோகம் யோகம் தேன்.
அட நாட் நாட்லயே எங்க தாத்தா தெருத்தெருவா கிஷ்ணால் வித்த பார்ட்டி. எங்க பாட்டி இட்லி சுட்டு அதை எங்கப்பன் கையில கொடுத்து தோபி காட் சலவை தொழிலாளிகளுக்கு வித்துட்டு வரச்சொல்லித்தான் வாழ்க்கைய ஓட்டினாய்ங்களாம். ஆனால் எங்கப்பன் என்னவோ மாவட்ட அரசு இயந்திரத்துக்கே சம்பளம் போடற சீட்ல உட்கார்ந்தாரு.
சோதிடத்துல கடுப்படிக்கிற மேட்டர் இன்னாடான்னா சூப்பர் சூப்பர் கிரகஸ்திதியை எல்லாம் குறிப்பிடுவாய்ங்க. அப்பாறம் அரசர் குலத்தில் பிறந்தால் அரசனாவான். இதர குலத்தில் பிறந்தால் அரசனுக்கு சமமான செல்வம்,செல்வாக்கை பெறுவான்னு முடிச்சுருவாய்ங்க . இதை பத்தி நம்ம மணியண்ணன் என்ன சொல்றாருன்னு வெய்ட் அண்ட் சீ. கிரகம் தர்ர யோகத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் சத்தியமா புரியலை.
இதைத்தேன் நம்ம மணி அண்ணனும் கோட் பண்ணியிருக்காரு. நான் என்ன சொல்றேன்னா நிகழ்காலத்தை சுத்தமா மறந்துருங்க. ஜாதகம் என்ன சொல்லுதோ அந்த எதிர்காலத்தை அப்படியே எடுத்து விடுங்க.
இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்த்து சொல்றது ஜோஸ்யமில்லை.ஹேஷ்யம். சந்திரபாபு மூத்திரம் வைட் பெட் ரோலா எரியறச்ச போட்டு உடைச்சோம். குண்டி கீழ வெடிக்க போகுது - தலையே தூக்க முடியாதுன்னு இதான் ஜோஸ்யம்.
கூட்டு உண்டா இல்லையான்னு ஜெ - வி.காந்துக்கே தெரியாது. அடிச்சு சொன்னோம் அம்மா இறங்கி வந்து கூட்டு வைப்பாய்ங்கன்னுட்டு.
சம்பவம்: 3
நாம ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சப்ப நமக்கு 22 வயசு. ஆனா "நிறைய பார்த்துட்டதால" நமக்குள்ள ஒரு ஃபாதர்லி நேச்சர் வந்திருச்சு. ஹிடன் அஜெண்டா எதுவுமில்லாம 40 வயசு ஆண்டிக்கு கூட கவுன்சிலிங் கொடுக்கிற ரேஞ்சுல மெச்சூரிட்டி வந்துருச்சு.
இருந்தாலும் இந்த ருது ஜாதக மேட்டர்ல தர்ம சங்கடமாவே இருக்கும். வந்தவுக சொல்ற நேரம் கரீட்டா இல்லையாங்கறதுக்கு ஒரு சில கேள்வியெல்லாம் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுத்தேன் சொல்லனும். இல்லாட்டி நேரம் தப்பா போயி பலனெல்லாம் நொண்டியடிக்க ஆரம்பிச்சுரும். அந்த கேள்விகள்ள முக்கியமான கேள்வி "பாப்பா அப்போ ..... நிற ஆடை ஏதாவது போட்டிருந்துச்சா" இது லக்னத்துல உள்ள கிரகங்கள்/லக்னாதிபதியை பொருத்து கேட்கிற கேள்வி.
ஒரு தாட்டி "எல்லாம்" முடிஞ்சு அம்மா பொண்ணு ரெண்டு பேரா வந்திருந்தாய்ங்க. அம்மா நாம கேட்ட கலர் இல்லவே இல்லைன்னுட்டாய்ங்க. கூட வந்த பொண்ணு அம்மா காதுல ஏதோ சொல்லுச்சு. அம்மா உடனே தன்னோட ஸ்டேட்மெண்டை மாத்திக்கிட்டாய்ங்க.
ஒவ்வொரு ராசிப்பெண்ணும் எந்த இடத்துல வயசுக்கு வரும்னு ஒரு விதி இருக்கு . அதையும் டாலி பண்ணிக்கிட்டா ஓரளவுக்கு நேரத்தை சரி பார்த்துரலாம்.
தலைப்பை பார்த்து பதிவுக்கு வந்த பார்ட்டிகளுக்காக அந்த விதி இங்கே:
மேஷம்,சிம்மம்: வீட்டுக்கு பின் புறம், வெளியிடத்தில்
ரிஷபம் : தோட்டத்தில்
துலாம்,கன்னி : விசேஷ காலத்தில்
விருச்சிகம் ,மிதுனம்: உதய காலத்தில்
தனுசு ,கும்பம் : நித்திரையில்
கடகம்,மகரம்,மீனம் : சந்தோஷமான சமயத்தில்
மணி அண்ணன் ருது ஜாதகத்தை ஊதி தள்ளிட்டாரு. ஆனால் நம்ம அனுபவத்தை பொருத்தவரை ருது ஜாதகம் எசகு பிசகா இருந்தா அதோட எஃபெக்ட் ஒரு ரெண்டரை வருசம் வரை " கொடூரமா" இருக்கும்ங்கறதுதேன். ஜனன ஜாதகப்படி அந்த கால கட்டத்துல வர்ர தசா புக்திகளும் கோ இன்சைட் ஆகும்ங்கறதுதான் விசித்திரம்..
சம்பவம்:4
எட்டுன்னதும் கெட்டது குடின்னிர்ராய்ங்க. நமக்கு அஷ்டம சனி நடந்தப்பதேன் 3 வருச "உஞ்ச விருத்தி"க்கு பிறவு லட்சத்து ரெண்டாயிரம் வந்தது.
நம்ம வீட்டம்மா தனுசு லக்னம் .லக்னாதிபதி எட்டுல உச்சம். 1997 நவம்பர் 10 ஆம் தேதி கேஷ் டவுன். 1998 பிப்ரவரி 23 ஆம் தேதி அரிசிக்கு காசில்லை.
பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம்னா அது ராகு/கேதுவால வந்ததா , செவ்வாயால வந்ததானு பார்க்கனும். செவ்வாயால வந்திருந்தா போலீஸ்,மிலிட்டரி மாப்பிள்ளைய பிடிக்கலாம். ராகு/கேதுவால வந்திருந்தா வெளி நாட்டு மாப்பிள்ளைய பிடிக்கலாம்.இதுக்கெல்லாம் காரண காரியம் இருக்கு. ( ஆருவேணா சொல்லலாங்ணா)
அட எப்படி வேணா வந்திருக்கட்டும். இதனால் ஆத்துக்காரரு டிக்கெட் வாங்கிருவாராங்கறதை உடைச்சே தீரனும். அவரோட ஆயுள் ஸ்தானமும் டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தா நிச்சயமா டிக்கெட்டுதேன். ஒரு வேளை தீர்காயுஷ் ஜாதகமா இருந்தா?
மணி அண்ணன் சொன்னாப்ல பிரிவு ஏற்படலாம் - அவர் மேல வீண் பழி விழலாம் -சிறை செல்லலாம் - ஐ.பி போடலாம் - விபத்து ஏற்படலாம் -தலைமறைவா இருக்க வேண்டி வரலாம்.மரணத்துக்கு சமமான வறுமை பிடுங்கி எடுக்கலாம். ஆக வது வரர் இருவருடைய ஜாதகமும் வேலை செய்யும்.
(ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேங்கற நம்ம பதிவை மணி அண்ணன் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சு கமெண்ட் போட்டிருந்தாரு. அவரளவுக்கு பாய்ண்ட் டு பாய்ண்ட் பதில் சொல்ற தில் இல்லாததால இப்படி சம்பவகோர்வையா சொல்லியாச்சு. -ஆரூடம் -பரிகாரங்கள் இத்யாதிக்கு ஏற்கெனவே கமெண்ட்லயே பதில் சொல்லிட்டதா ஞா . இப்படி கழட்டி விடறதுக்கு மணி அண்ணே சாரி.தப்பு என் பேர்ல இல்லை .பவர் கட் ஒரு பக்கம் - நேரமில்லாமை ஒரு பக்கம்.இதை டைப் பண்றச்ச நேரம் விடியl மணி : 03.05 AM)
No comments:
Post a Comment