'>

Monday, September 26, 2011

வாழ்க்கை குறித்த சின்ன புரிதல்

ஒஷோவின் உதாரணத்தோட இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடிச்சவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒரு தாட்டி கிராமத்துலருந்து அவரோட சொந்தக்காரரு இவரை பார்க்க வந்தார். ரா தங்க வேண்டியதாயிருச்சு.

எடிசன் தன் உறவுக்காரரை இரவு சாப்பாட்டுக்கு பிறகு மாடி அறைக்கு கூட்டிக்கிட்டு போனாரு. ஸ்விட்ச் போர்டை நோக்கி நாலடி வச்சாரு. ஸ்விட்சை போட்டாரு பல்பு எரிஞ்சது. ஓகே நீங்க படுத்துக்கங்கனு சொன்னாரு .இறங்கி போயிட்டாரு.

உறவுக்காரர் படுக்கையில படுத்துக்கிட்டாரு. ஆனால் தூக்கம் வரலை .அவருக்கு பல்புல்லாம் பார்த்து பழக்கமில்லை. வெளிச்சம் உறுத்துது. தூக்கமே வரலை. கஷ்டப்பட்டு அந்த பல்பை ஊதி ஊதிப் பார்க்கிறாரு அணைக்க முடியலை. அரண்டு போயிட்டாரு. அன்னைய ராத்திரி சிவராத்திரி ஆயிருச்சு.

மறு நாள் எடிசன் வந்தாரு. உறவுக்காரர் புகார் பட்டியல் வாசிக்க அவரு அசால்ட்டா ஸ்விட்ச் போர்டு கிட்டே போய் ஸ்விட்சை அணைச்சாரு . பல்பு அணைஞ்சு போச்சு.

வாழ்க்கைய பற்றிய பார்வையில் நாமும் எடிசனோட உறவுக்காரர் பொசிஷன்ல இருக்கமோன்னு தோனுது.
இங்கே நம்ம வாழ்க்கை ஆரம்பத்துல இத்தனை சிக்கலா இல்லை. இன்னைக்கிருக்கிற சிக்கலையெல்லாம் நாம தேன் உருவாக்கியிருக்கோம்.

காரணம் வாழ்க்கைய பற்றிய புரிதல் இல்லை. இதனோட அவுட் லைன் தெரியாது. இது காட்டும் ஈஸ்ட்மென் கலர் களேபரங்கள்ள மூழ்கி நம்மையும் நம்ம வாழ்க்கையையும் பிரிச்சுக்கூட பார்க்க முடியாத நிலைக்கு வந்துட்டம்.

ஒன்னு லைஃப் ஈஸ் ஷார்ட் எஞ்ஜாய் இட் என்ற மன நிலை . அல்லது இன்னம் கல்ப்பகோடி ஆண்டுகள் வாழப்போறோம்ங்கற மாதிரி ஒரு தாத்ஸாரம்.

ரெண்டுமே தப்பு. பின்னே வாழ்க்கைய எப்படித்தான் புரிஞ்சுக்கறது ? ஆடியோ பதிவுல இதத்தான் ட்ரை பண்ணியிருக்கேன். கேட்டுப்பாருங்க..

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ஸ்ல ( ரெண்டு ஆடியோ ஃபைல்ஸ் இருக்குங்ணோ)ப்ளே பட்டனை அழுத்துங்க.



வாழ்க்கை ஒரு சின்ன புரிதல் : பகுதி2

No comments: