'>

Sunday, June 26, 2011

பிரபலங்களையும் தாக்கும் சமூக சீரழிவுகள்

காலங்காலமா இருந்த வர்ணாசிரம (அ)தர்மத்தால இந்திய சமூகமே ரெண்டா பிளந்து கிடக்கு. மெஜாரிட்டி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதே  இந்த நிலைக்கான  ஆரம்ப புள்ளி.  ராஜாக்களை  யாகம் அது இதுனு கவர் பண்ணியும், படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களை துபாஷிகள் என்ற நிலையிலும் , பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை தமது விசுவாசம்+ கூர்மையான புத்தியாலும் கவர்ந்து தம் இனத்தை மட்டும் வளப்படுத்திக்கொண்டது ஒரு இனம்.

பிறர் உழைப்பில் -பிறர் சிரிக்க வாழ்ந்த அந்த இனம்  தம்மை செக்யூர்டா வச்சுக்க மத்த இனங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பிச்சு  நீ உயர்ந்தவன்னு ஒரு கூட்டத்தை ரெகக்னைஸ் பண்ணி  எனக்கு நீ எப்படியோ அவிக உனக்கு அப்படின்னு ஒர்க் அவுட் பண்ணி என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணாய்ங்க.

இதன் விளைவாத்தான் ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் தோன்றியது. ரூல்ட் க்ளாஸ் ,ரூலிங் க்ளாஸ் என்று இந்திய சமூகமே இரு கூறாகிவிட்டது. தொழில் மயத்தின் காரணமா மத்தியமர் எனும் ஒரு புது பிரிவும் தோன்றியது.

ஏழை பணக்காரன் வித்யாசம் அதிகரிச்சுக்கிட்டே போக தரம் தாழ்ந்த  அரசியல் ,ஊழல் , தனியார் மயம் ,தாராள மயம் உலகமயம் என்று ஸ்தூலமான காரணங்கள் பல இருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி வர்ணாசிரம தர்மம்தான்.

இன்னைக்கும் பிராமணர்கள் ஆளும் வர்கத்தின் அதிகாரத்தை - அதற்கான எவ்வித ரிஸ்கும் இழப்பும் இன்றி அனுபவிப்பது  நிஜம் தான் ( செகரட்டரி -ஆடிட்டர் -ஃபேமிலி டாக்டர் -ஷேர்ஸ் கன்சல்டன்ட் -சாஃப்ட் வேர் கன்சல்டன்ட் -ட்ரான்ஸ்லேட்டர் -ட்ராஃப்ட் மேன் -ஸ்டெனோ)

ஆனால் பிராமணர்களுடனான கூட்டுறவாலயோ என்ன இழவோ தெரியலை சூத்திரனெல்லாம் பிராமணனை விட க்ளாஸா, நாசூக்கா,  தாங்கள் என்னமோ நெல்லதையே பண்றாப்ல பம்மாத்து காட்டிக்கிட்டு கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இன்னைய தேதிக்கு பிராமணர்களை  சாடுவது எவ்ள முக்கியமோ பிராமணர்களா மாறிட்ட சூத்திரர்களை சாடுவது கூட  அவ்வளவு முக்கியம் தான்.


ஆளும் வர்கம்னா அதுல வெளிப்படையா தெரியற சூத்திரர்களும் - பின்னணியில் -திரைக்கு பின்னே செயல்படற பிராமணர்களும் சேர்த்துத்தான்ங்கறதை  ஞா வச்சுக்கிட்டு தொடர்ந்து படிங்க.

இந்த விசித்திரமான கூட்டணி தங்களை வளப்படுத்தி கொள்ள கடைபிடிக்காத வழியே இல்லை.
ஒரு காலத்துல அய்யர் மாரு எந்தெந்த ஃபீல்டுலல்லாம் மோனொப்பலியா இருந்தாய்ங்களோ அந்த ஃபீல்டுல எல்லாம் சூத்திர பசங்க தூள் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. அது இசையாகட்டும் -சாஃப்ட் வேராகட்டும், சார்ட்டட் அக்கவுண்டன்ஸி ஆகட்டும்.,மீடியா ஆகட்டும்

இன்னைக்கு அவாள் கிட்டேருந்து ஏறக்குறைய பறிக்கப்பட்டுவிட்ட துறைகளில்  ஊழல் வாதிகளா ஃபோக்கஸ் ஆன   சூத்திரர்கள் எல்லாருக்கும் நேர் குருவா இல்லாட்டாலும் குருவுக்கு குருவோ அந்த குருவுக்கு குருவோ ஒரு அய்யராதான் இருப்பாரு.

என்ன அவிக அளவா, நாசூக்கா , ப்ளாண்டா, பிடிபடாம செய்தாய்ங்க (இதுக்கு பயம் கூட ஒரு காரணம்) ஆனால் நம்மாளுங்க காஞ்சமாடு கம்பங்கொல்லையில விழுந்த மாதிரி தூள் பண்ணி மாட்டிக்கிட்டாய்ங்க.

கல்கிக்கும் ராஜாஜிக்கும் உள்ள தொடர்பு காவியம்னு இன்னைக்கும் கல்கி பீத்திக்குது . ஆனால் நக்கீரனுக்கும்  கலைஞருக்குமான தொடர்பு மட்டும் சந்தி சிரிக்குது. இங்கதான் அவாள் நிக்கிறாய்ங்க. நம்மாளுங்க நாறிர்ராய்ங்க.

ஆக இந்த ஆளும் வர்கம் (ஞா இருக்குல்ல இதுல சூத்திராளும் அடக்கம்) ஏழைமக்களை சுரண்ட என்னெல்லாம் செய்தாய்ங்களோ இவிகளால என்னெல்லாம் சமூக சீரழிவுகள் ஏற்பட்டதோ அதெல்லாம் இன்னைக்கு ஆளும் வர்கத்தையும் பாதிக்க துவங்கியிருக்குது. ஆளும் வர்கம் தன்னை வளப்படுத்தி கொள்ள செய்த சதிகள் அரங்கேற்றிய சமூக சீரழிவுகள் பற்றி  சொல்லனும்னா அதுக்கு தனி தொடர்பதிவு போடனும்.

 எளியவனை வலியவன் அடித்தால் வலியவனை தெய்வம் அடிக்கும்னு சொல்வாங்க. அது நெஜமாக துவங்கியிருக்கு.   தன் வினை தன்னைச்சுடும் என்பது போல ஆளும் வர்கத்தால் விதைக்கப்பட்ட  ஊக்குவிக்கப்பட்ட  சமூக சீரழிவுகள்  அந்த ஆளும் வர்கத்தையே தாக்க ஆரம்பித்திருக்கிறது.

முக முத்து கதை ? ( ஆல்க்கஹாலிக்) ப்ரமோத் மகாஜன் கதை ஞா இருக்கா? ( போதை மருந்துக்கு அடிமையான தம்பி டிக்கெட் கொடுத்துட்டாரு)

இந்த வரிசையில லேட்டஸ்டா மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி  ஜெய்பால் ரெட்டியின் தங்கை மகள் கணவனால் கொல்லப்பட்டார்.

அதுவும் எப்படி? பார்ட்டியில் ரெண்டு பேரும் குடிச்சிருக்காய்ங்க -வாக்கு வாதம் நடந்திருக்கு -போதையிலயே டிக்கெட் கொடுத்துட்டாரு ஆத்துக்காரரு.

இன்னைக்கு செய்தி ஒரு எம்பியோட அண்ணன் மகள் தீக்குளித்து தற்கொலை (திருமணமானவர்) இந்த நொடி ஞா வந்தது இவ்ளதான் ஒரு எஸ்.ஐயோட மகன் பழைய பேப்பர் பொறுக்குறான். ஒரு எம்.எல்.ஏவோட மகன் (55)  ஓட்டை சைக்கிள்ல ஊன்று கோலோட சுத்திக்கிட்டிருக்கான்.

"பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா"

தங்களது கோட்டைசுவரனைய காம்பவுண்ட் சுவர்களை தாண்டி தங்கள் குடும்ப பெண்களையே பலி வாங்கத்துவங்கிவிட்ட பிறகும் ஆளும் வர்கம் கண்விழிக்கலின்னா நீங்க உருவாக்கிவிட்ட சீரழிவுகள்  உங்க வீட்டு  பெட் ரூமுக்கெல்லாம் வந்துரும்யா !

அப்பாறம் ஒங்க இஷ்டம்.

1 comment:

radhu said...

பினாத்துவதற்கும் ஒரு அளவு வேண்டும்.