'>

Saturday, June 4, 2011

ஆவி படுத்திய பாடு

அண்ணே வணக்கம்ணே , நாட்ல என்னென்னமோ நடக்கு முருகேசு பாட்டுக்கு ஆவி புடிச்சிக்குனு கிடக்காருனு நினைச்சுராதிங்க. ராஜபக்ஷே அல்லா தமிழனையும் போட்டு தள்ளிட்டா – எல்லா தமிழச்சியையும் கர்பப்படுத்திட்டா ஆனந்தமா வாழ்ந்துரலாம்னு தேன் அப்படியா கொத்த அக்குறும்பை பண்ணாரு. ஆனால் நிலைமை என்னாச்சு?

அழகிரி தா.கி மேட்டர்ல கலைஞரு அடக்கி வாசிச்சுட்டாரு. ஆனா இப்பம்?ரீ ரிக்கார்டிங் ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் செத்தாய்ங்க. குடும்பம் ஒற்றுமையானதும் அவிக கேஸை டீல்ல விட்டுட்டாரு மாறன். இன்னைக்கு வழக்கு, விசாரணைன்னு ஒரு பெரிய மாரத்தான் ரேஸ் காத்திருக்கு.
அட.. எங்க ஊர்ல சந்திரபாபு கதைய பாருங்களேன்.ஜகன் பண்ண லொள்ளு தாங்க முடியாம நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்தாரு.உதவி சபா நாயகர் பதவி ஏற்பு வைபவம் முடிஞ்சதும் ஓட்டல்ல காசில்லாம சாப்டவன் கணக்கா மெல்ல நழுவிட்டாரு. பாபு பாவம் கவர்னர் கிட்டக்க ஓடி புகார் தராரு. கவர்னரு த்ரெட் பார்ட்டி. பயங்கர நக்கல் புடிச்ச கிழவாடி. ஒரு தாட்டி அன் லைசென்ஸ்ட் மதுக்கடைகள் பத்தி புகார் கொடுக்கப்போனா உங்கள்ள லாலா போடறவுக எல்லாம் கை தூக்குங்கன்னு கேட்ட மன்சன். ஆனால் நிலைமை மறுபடி அங்கன போயி தேவுடுகாக்கவேண்டியதாயிருச்சு. ஜகன் என்னடான்னா “பட்டா நீ கிரண் கிட்டே பேசி வச்சுக்கிட்டு நாடகமாடறே”ன்னு கிழிக்கிறாப்ல.
என்.டி.ஆரை முதுகுல குத்தி அவரு அதே வேதனையில மாரடைப்புல சாக காரணமா இருந்தப்ப பாபு என்ன நினைச்சுருப்பாரு. தாளி ” நான் தான் மீதியெல்லாம் டூப்பு”ன்னு நினைச்சிருப்பாரு. நடந்ததா> ஊஹூம். நாயடி. அவரோட 9 வருச ஆட்சியை சனம் 90 வருசம் போனாலும் மறக்கற மாதிரி இல்லே.
இதெல்லாம் ஆவிகள் படுத்தும் பாடுதேன். மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.Read more

No comments: