'>

Wednesday, June 1, 2011

மேக்ரோ ஜோதிடம்

எக்கனாமிக்ஸ்ல மேக்ரோ எக்கனாமிக்ஸ், மைக்ரோ எக்கனாமிக்ஸ்னு இருக்கிறாப்ல ஜோதிடத்துலயும் கொண்டுவரலாம். நாட்ல இன்னைக்கு செலாவணியில உள்ளதெல்லாம் 99.9%  மைக்ரோ ஜோதிடம் தான். ஐ மீன் " என் ஜாதகம் எப்படி இருக்கு ? எனக்கு எப்போ வேலை கிடைக்கும்? எப்போ சேலை கிடைக்கும்? எப்போ குட்டி போடுவன்"ங்கற கேள்விகளோட நின்னுர்ர ஜோதிடம் மைக்ரோ ஜோதிடம்.

இந்தா தாட்டி நல்ல மழை இருக்குமா? அரசாங்கம் ஸ்திரமா இருக்குமா?  இடை தேர்தல் எதுனா வந்துருமா?
( கானிப்பாக்கம்? காளாஸ்திரியா ஞா இல்லை தேவஸ்தானத்து  ஆஸ்தான  பண்டிதர் ஆந்திராவுல கிரண் சர்க்கார் ஸ்திரமா இருக்கும்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காரு - ஆகஸ்டுல இருக்குடி உனக்கு ஆப்பு)
சீனாக்காரன் எதுனா வேலை கொடுத்துருவானா? - பாக் இனிமேயாச்சும்  திருந்துமா? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய ஜோதிடம் மேக்ரோ ஜோதிடம். Read More

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அப்பா முருகேசு ( வணக்கம் சார் )

ஆமா இந்த மேக்ரோ சோதிடத்தாலே நீ இன்னாப்பா சொல்ல வர்றே ?

நாடும் மக்களும் உருப்படற ஐடியாவா இது ?

எனக்கு ஒண்ணும் புரியலே..
புரிஞ்சா சொல்லுங்கப்பா

Chittoor Murugesan said...

வாங்க ஜா.ரா !
நான் இன்டர்ல எக்கனாமிக்ஸ் படிச்சு எழுதினேன். நமக்கு 35 மார்க். அந்த டெர்ம்ல டப்பாசாயிட்ட பார்ட்டிக்கு கோச்சிங் கொடுத்தேன். அவனுக்கு 50 மார்க்.

எங்க தப்பு பண்றேன்னு புரியலை. வ்யசாயிருச்சோ/

மைக்ரோன்னா சிறு அளவில்,

மேக்ரோன்னா பெரிய அளவில்,

ஒவ்வொரு அப்பாவும் கொளந்த சாதகத்தை அய்யர்கிட்டே கொண்டு போயி இவனால எனக்கு பிச்சிக்கிட்டு கொட்டுமா (கூரைங்க) கேட்கிறது மைக்ரோ.

அதே அப்பாவோட சேர்த்து லட்சத்து பதினாறு அப்பாக்கள் அரசு வலை தளத்துல டேட் ஆஃப் பர்த்தை ஃபீட் பண்ணி அந்த குழந்தைக்கு எந்த பார்ட்டெல்லாம் வீக்கு, என்னெல்லாம் நோய் வரலாம். அதுக்கு நான் என்னெல்லாம் ப்ரிகாஷன்ஸ் எடுத்துக்கனும்னு தெரிஞ்சுக்கிட்டு ஃபாலோ பண்றது மேக்ரொ