'>

Tuesday, June 14, 2011

இன்று 110 நிமிட சந்திர கிரகணம் : திகீர் விளைவுகள் « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே,
ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற தோழிகளுக்கு ஆரம்பத்துல வெவ்வேறு தேதிகள்ள பீரியட்ஸ் இருந்தாலும். படிப்படியா தேதிகள் நெருங்கி வந்து ஒரு கட்டத்தில்  ஒரே நாளில் மாதவிலக்கு வர ஆரம்பிக்குமாம்.

அப்படியாக  நம்ம அனுபவஜோதிடம் குரூப்பு சனத்துக்கிடையில் இப்படி ஒரு ஒத்திசைவு ஏற்பட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைக்கிறேன்.

நேத்து இரவு 8.30 க்கு சந்திர கிரகணத்தை பத்தி ஒரு பதிவு போடலாம்னு ஆரம்பிச்சு எடுப்பு -தொடுப்பு -தொகையறா வரைக்கும் வந்தன்.

பல்லவிக்கு வரும்போது மின்சார கண்ணன் நொள்ளை கண்ணன் ஆகிட்டாரு. தூத்தேறிக்கனு விட்டுட்டன்.
பார்த்தா நம்ம சுகுமார்ஜியும் கிரகணத்தை தொட்டு காட்ட முயற்சி பண்ணியிருக்காரு.


ஸ்.. அப்பாடா வில்லங்க தலைப்புக்கு ரீசனிங் கொடுத்தாச்சு. பதிவுக்கு போயிரலாமா?


சந்திர கிரகணங்கறது ஒரு சாதாரண நிகழ்ச்சி. சூரியனோட ஒளியை வாங்கி பிரதிபலிக்கும்  சந்திரனுக்கும் - அந்த ஓளியை வழங்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வர்ரதால சந்திரனுக்கு சூரிய ஒளி கிடைக்காம போயிருது. இதனால சந்திரன் கண்ணுக்கு தெரியாம போயிர்ராரு.இது  ஒரு பவர்கட் மாதிரி தான் தட்ஸால்ங்கறது பகுத்தறிவு வாதிகளோட வாதம்.

ங்கொய்யால எல்லாமே விசமாயிரும். விசமாயிட்டதை திங்கனும்னா அதுல தர்ப்பைய போட்டு வச்சு திங்கனும். கர்பிணி வெளிய வரப்படாது. கிரகணம் விட்டதும் வீடுவாசல் எல்லாம் கழுவி குளிச்சு முழுகனும் - இது பண்டிதர்களோட எச்சரிக்கை.

புத்தர் சொன்னாப்ல உண்மை என்னவோ இது ரெண்டுக்கும் நடுவுல இருக்கு. ( ரெண்டு பக்கமும் செருப்படிதாண்டி மாப்ளே)

மொதல்ல சந்திர கிரகணத்தோட டைமிங்கை பார்த்துருவம்.Read More

No comments: