'>

Monday, May 23, 2011

ஈகோ என்ற வைரஸ்

பிறந்த குழந்தையோட மைண்ட் புத்தம் புதிய ஹார்ட் டிஸ்க். ஓ.எஸ் மட்டும் போட்டிருக்கும். அப்பா,அம்மா,ஆசிரியர்கள் , சமூகம் எல்லாரும்  என்ன பண்ணனும் ஒரு ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் ஒன்னை போட்டு விடனும். ஆனால் கண்ட கண்ட பென் ட்ரைவை செருகி வைரஸா குவிச்சுர்ராய்ங்க. இதனால ஹார்ட் டிஸ்கோட ஃபங்சனிங்கே ஃபணாலாயிருது.

பேச்சுவழக்குல நாம ஈகோங்கற வார்த்தைய அகந்தை -அகங்காரம்ங்கற அர்த்தத்துலயே உபயோகிக்கிறோம். ஆனால் ஈகோங்கற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தன்னை இந்த படைப்புலருந்து வேறுபடுத்தி பார்க்கிறது.இது என்விரான்மென்டோட கோ ஆபரேஷனால  கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி தன்னை இந்த படைப்புக்கு மையமா நினைச்சுக்கிற அளவுக்கு போயிருது.

குழந்தையோட ஒக்காபிலரில நான் ங்கற வார்த்தையே இருக்காது. தன்னை தேர்ட் பர்சன்ல தான் குறிப்பிடும் . (பாப்பாக்கு பாச்சி குது) ஆனால் அப்பா,அம்மா,ஆசிரியர்கள் , சமூகம் எல்லாரும் அந்த பாப்பாவுக்கு நீ பாச்சா நாய்குட்டி ஆயி - கணக்கா வித்யாசத்தை சொல்லித்தராய்ங்க.

அந்த குழந்தை தன்னை இயற்கையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்கிடுது. நம்ம சனம் கொடுக்கிற பூஸ்டுல ( சச்சின் சொல்ற பூஸ்ட் இல்லிங்கண்ணா) ஈகோ டெவலப் ஆயிட்டே போகுது. இயற்கைக்கே தான் தான் மையங்கற கான்செப்ட் மைண்ட்ல வந்துருது. Read More

No comments: