Saturday, February 26, 2011
ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்
அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.
சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.
ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.
அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.
அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.
2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.
சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)
செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.
அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.
ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.
இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது. சனி 6 மாசம் முந்தி அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி. அப்போ அவர் 3 ஆவது ராசில -தன் உச்ச ராசியான துலாவுல இருக்கிறாப்ல பலன் தரனும்.
மே 16 ஆம் தேதி ராகு கேது 4,10 க்கு வந்துர்ராய்ங்க . இவிக 3 மாசம் முன்னாடி வேலை செய்யனும்னு விதி. ( பிப்ரவரி 16 முதலே). மே 8 ஆம்தேதி குரு 8லருந்து 9க்கு வந்துர்ராரு
அதே நேரம் சனி ரெண்டுல இருக்கிறதால கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.
புக்தி நாதனான சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.
2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.
அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)
Labels:
election,
jayalalitha,
kalaingar,
prediction,
கணிப்பு,
கலைஞர்,
தேர்தல்,
ஜெ
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இப்ப தாங்க, நீங்க சரியா பேசறீங்க
நானும் ஜோசியக்காரந்தான். கேளுங்க நம்ம ரிசல்ட்ட.
ஜெயாவுக்கு இதுதான் கடைசி தேர்தல். அதிமுக அஸ்தமனம். தேமுதிக கோவணம்.மதிமுக அவமானம். கம்யூனிஸ்ட் பேக் டூ பெவிலியன்.
VJRஅவர்களே,
தங்கள் கணிப்பை - கருத்தை வலியுறுத்தி ஒரு பதிவே போடலாமே.
தாங்கள் விரும்பினால் எனது வலைதளத்திலேயே பிரசுரிக்கிறேன். அல்லது பதிவுக்கான தொடுப்பை தந்தாலும் போதும்
நாமெல்லாம் வெறும் ஜோதிடர்கள் பலனை "சொல்ல"த்தான் முடியும். ஆனால் பலனை தர்ரது கடவுள் தானே.
பொறுத்திருந்து பார்ப்போம்.
தனிமனித ஜாதகத்தைக் கூட்டணி அரசியலுக்கு எப்படிப் பொருத்திப் பார்க்க முடியும்?
குருவாயூருக்கு யானை கொடுத்த பின்பும் ஜெயலலிதா தோற்றுத்தானே போனார்? வணிகப் புத்திக்கு தெய்வத்தைப் பற்றிய புரிதலும் இல்லாமற் போகிறது.
கருணாநிதி அவர்களின் ஜாதகம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்களின் ஜாதகங்களை விட உயர்வானது என்று, நீங்கள் ஜோதிடரானால், உங்களுக்குப் புரியவைக்க வேண்டியது இல்லை. என்றாலும் அது காரணமாகத்தான் 1986 பஞ்சாயத்துத் தேர்தலில் கருணாநிதி எம்.ஜி.ஆரை வென்றார்; அதன் பின்விளைவான அதிர்ச்சியினால்தான் எம்.ஜி.ஆர். செத்தார்; நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்துவந்த சட்டசபைத் தேர்தலில் அவமானப் பட்டிருப்பார் என்றெல்லாம் பேச மாட்டேன்.
தனிமனித ஜாதகத்துக்கும் கூட்டணி ஜாதகத்துக்கும் உள்ள நுணுக்கம் அறிந்து பலன்கூற ஜோதிஷத்தில் வழியில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
வரும் தேர்தலோடு, ஜெயலலிதா சீலையைக் காணோம் அங்கியைக் காணோம் என்று ஓடினாலும் நாம் ஜோஷியப் பலன் சொல்வதை நிறுத்தப் போவதும் இல்லை, அப்படித்தானே?
எனக்கு ஜோதிடத்திற்கும் ஒத்துவராது. அதுகெடக்கட்டும் இப்ப கருனாநிதி மண்ண கவ்வப்போறது உண்மையின் தெரிஞ்சுக்கிட்டு அதை நீங்க ஜோதிட பலண்னு சொல்லனும் இன்னும் பத்து ஓட்டு கருனாநிதிக்கு கிடைக்காம போகனும்.
இங்கு தேவை அதிகார மாற்றம் அதை யார் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது என்பதை யோசிப்பது அதற்கு ஏற்ப செயல்படுவதுதான் சரியாக இருக்கும் .அதை செய்ய தகுதி உள்ள கூட்டணி அதிமுக மட்டுமே
Post a Comment