'>

Saturday, February 5, 2011

சபிக்கப்பட்ட வம்சங்கள் - ‍ பொய்க்கும் ஜோதிடம்


நானும் மனிதாபிமானம் மிக்கவன் தான். விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று எண்ணுபவன் தான். ஜோதிடம் கற்றதும், நூதன பரிகாரங்களை கண்டுபிடித்ததும் இதற்காகத்தான். (உண்மையில் இவை என் கண்டுபிடிப்புகள் தானா என்பதில் எனக்கு சம்சயம் உண்டு.

காரணம் சில ஜாதகர்களின் வாழ்வில் தெய்வாதீனமாய் அரங்கேறியவற்றையே சூட்சும புத்தியுடன் கேட்ச் பண்ணி பில்டப் பண்ணதுதான் என்னோட நவீனபரிகாரம்.

ஆனால் அனுபவத்தில் பார்க்கும்போது 99.9 சதவீத ஜாதகர் வாழ்வில் பலிக்கும் ஜோதிடம் மட்டும் அல்ல எனது நவீன பரிகாரமும் சில சபிக்கப்பட்ட வமிச‌ங்கள் வாழ்வில் மட்டும் பொய்த்துப்போவதை மறைக்க விரும்பவில்லை.

1.பெண்களை கொடுமைப்படுத்தும்,பல தார மணம் புரியும்,வமிசங்களில் பிறக்கும் குழந்தைகள் (ஆண் பெண்) யாவுமே செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம்,சுக்கிர தோஷத்துடன் பிறக்கின்றன.

எந்த வமிசத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன்பே இறக்கிறார்களோ?‌சிறுவயதில் விதவைகளாகிறார்களோ, இரண்டாம் மனைவி அ ஆசை நாயகியராய் வாழ்ந்து மடிகின்றனரோ அக்குடும்பத்திலும் மேற்கண்ட தோஷங்களுடனேயே குழந்தைகள் பிறக்கின்றன.

2. கோவில் நிலத்தை,அண்ணன் தம்பி நிலத்தை,புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் குடும்பங்களில் ஊனத்துடன் பிறத்தல், மேங்கோ ரைஸ்ட் சில்ட்ரன் ( மாங்காய் தலையர்கள்) பெரும் விபத்துகளில் சிக்குதல் கூட நடைபெறுகின்றது. முக்கியமாக செவ்வாய்,சனி சேர்க்கையை இந்த குடும்பத்து ஜாதகங்களில் பார்க்கமுடியும்.

3.இந்த குடும்பங்களில் ரொட்டீணாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் :
துர்மரணம்(விபத்து,தற்கொலை),அகால மரணம்(அற்பாயுளில் இறப்பது),இடம் பெறும். கோர்ட்டு வழக்குகள் தொடர்ந்து வரும். திருமணங்கள் தள்ளிப்போகும். ஒருவேளை நடந்தாலும் தம்பதியிரிடையே ஒற்றுமை இருக்காது. சந்தானமிராது. முக்கியமாக ஆண் குழந்தை பிறக்காது.

4 இந்த குடும்பங்களில் ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஒருவருக்கு வாரிசில்லாது போகும். அ ஆண்வாரிசு இல்லாது போகும்.

5.திருமணம் தாமதமாகும், வெட்டுப்பழி குத்துப்பழியுடன் திருமணங்கள் நடக்கும். தம்பதி பிரிவது - விவாகரத்து பெறுவதும் நடக்கலாம்.

இந்த சீக்வென்ஸ்ல உள்ள குடும்பங்களுக்கு சோசியர் என்னதான் கணக்கு பண்ணி கணக்கா பலன் சொன்னாலும் ஒரு நிலை வரை தீயபலன் எல்லாம் தவறிப்போகும். இங்கன கெட்டது நடக்கும்னு சொன்னகாலத்துலயே டாப்ல போவாய்ங்க.

ஆனால் ஒரு நிலைக்கு பிறகு சோசியர் எந்த நல்ல பலனை சொன்னாலும் அது நடக்காது. தவறிப்போகும்.

அவரு என்ன தான் டபுள் ஸ்ட்ராங் பரிகாரங்களை சொன்னாலும் பப்பு வேகாது. இதைப்பற்றி உங்க கருத்தை மறுமொழியில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கார்ட்டூன் உபயம்: சுகுமார்ஜீ

7 comments:

Kalyan said...

நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. எனக்கு தெரிந்து ஒரு குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. அவர்கள் ஜோசியம் பார்த்தார்களா இல்லையா தெரிவவில்லை. ஆனால் நடக்கும் விஷயங்கள் நீங்கள் சொல்வதை உறுதி படுத்துகிறது. அருமையான பதிவு.

Chittoor Murugesan said...

கல்யாண் அவர்களே,
மறு மொழிக்கு நன்றி. இன்னம் எத்தனை பார்ட்டிங்க இதை ஒத்துக்கிடறாய்ங்கனு பார்ப்பம்.

Unknown said...

நம்ம இத்தாலி அம்மா குடும்பத்தை பாருங்க முதல்லே.. நேரு காலத்தில் மனைவி நோயாளி..
இந்த்ரா குறுகிய காலத்தில் விதவை, 2 மருமகளும் இப்போ விதவை, மகன் 37 வயசு இன்னமும் சட்டப்படி(?) திருமணம் நடக்கல...

இதை ஆராய்ந்து சொல்லுங்க..

Maravan said...

சத்தியமான வார்த்தைகள்

Chittoor Murugesan said...

நன்றி மறவன் அவர்களே.

Maravan said...

ஒரு பொம்பள ஆம்பளைய ஏமாதுனா என்ன ஆகும்?

Chittoor Murugesan said...

மறவன்!
பெண் வீக்கர் செக்ஸ். டிப்பென்டென்ட்,அவளுக்கு அதுவா - இதுவானு தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரப்படறதில்லை.

இப்படி ஒரு நிலையில இருக்கிற பெண் ஆணை ஏமாத்தினா அவள் அப்படி செயல்பட ஆரெல்லாம் காரணமோ அவிகளுக்கெல்லாம் தான் ஆப்பு.

ஒரு வேளை அவள் சுதந்திரமான நிலையில இருந்து , ஏமாத்தாம இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் ஏமாத்தியிருந்தா ஆப்பு ஆப்புதேன்