'>

Tuesday, February 1, 2011

பிரபல பதிவர் முருகேசன் கருகி சாவு


பிரபல பதிவர் முருகேசன் கருகி சாவு
டிஜிட்டல் பேனர் வைக்கும்போது
உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது
சித்தூர்(பிப்.3)

ஆந்திர மானிலம்,சித்தூரை சேர்ந்தவர் முருகேசன். இவர் சித்தூர் பஜார் தெருவில் உள்ள தம் அலுவலக முகப்பில் டிஜிட்டல் பேனர் வைக்கும் போது பேனரின் இரும்பு சட்டம் உயர் அழுத்த மின் கம்பியில் உராய்ந்தது. மின்சாரம் தாக்கியது. பரிதாபமாக கருகி செத்தார். தகவல் அறிந்த டூ டவுன் போலீஸார் சம்பவ ஸ்தலத்துக்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிணப்பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

முருகேசன் வலையுலகத்தில் பிரபல பதிவராகவும் இருந்தார். 2009 மே முதலான 20 மாதகாலத்தில் 3 லட்சம் ஹிட்சை நெருங்கிகொண்டிருந்த நிலையில் திடீர் என்று இறந்ததை அடுத்து பதிவுலகத்தினர் அஞ்சலி தெரிவித்து பதிவுகள் போட்டுவருகின்றனர்

இப்படி நாளை ஏதேனும் ஒரு தெலுங்கு தினசரியிலாவது செய்தி வெளியாகியிருக்கும்.ஆனால் பிராமணாள் தபஸ் போதலியோ, என் பக்கம் தர்மம் இருந்ததோ பை மிஸ்டேக் தர்மம் இருக்கிற பக்கம் நான் இருந்தேனோ கையில தினசரியில வர்ர தலைப்பிலான கொட்டை எழுத்து ப்ராக்கெட் மாதிரி ஒரு ஆழமான தீப்புண்ணும் ,மணிக்கட்டுக்கு பின் புறம் அந்த காலத்து கல்பனா கேக் சைஸ்ல ஒரு தீப்புண்ணுமா தப்பிச்சேன். இதை நான் இங்கன சொல்றது ஏதோ உங்க அனுதாபத்தை வாங்க இல்லை.


என் எழுத்துக்களுக்கு மூலம் என்னோட அப்சர்வேஷன் தேன். என்னோட அனலிட்டிக்கல் கெப்பாசிட்டிதேன். குடுமி அய்யருங்க விடற ஊருக்கு உபதேசத்தை கூட என் அனுபவங்கற உரைகல்ல உரசித்தேன் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்துருச்சு. இதை நான் என் ஸ்டைல்ல அனலைஸ் பண்றேன். முடிஞ்சா நீங்களும் சம்பவங்களை அனலைஸ் பண்ண கத்துக்கிடுங்க.


எந்த காலத்துலயும் நாம பிணத்துக்கு அலைஞ்சதில்லை. மசாலா இருந்தா போதும் ரசஞ்சோறு கூட கப கபனு இறங்கிரும். இடையில பாடி பில்டிங் மோஜுல கொஞ்ச நாள் மாட்டுக்கறி தின்னதுண்டு. ஆனால் அதுக்கு பிரதிபலனா பசுவை அகாரணமா வெட்டற மாதிரி என்னை சனம் வெட்டினாய்ங்க. அதை விட்டுத்தொலைச்சாச்சு.

சமீபத்துல ராப்போதுல கஞ்சி குடிச்சா என்னனு ஒரு நல்ல எண்ணம் வந்தது. நல்லது சிங்கிளா வருமா கூடவே ஒரு கெட்டதையும் கூட்டிட்டு தான் வரும்.அதான் லைஃபு.சோத்தைதான் கட் பண்ணிட்டமே வெஞ்சனமா ரெண்டு பீஸ் சிக்கன் பக்கோடா கட்சிக்கினா இன்னாங்கற கெட்ட எண்ணம் வந்தது.
இடது உள்ளங்கையில கரீட்ட சுக்ர மேட்ல ப்ராக்கெட் தனமா ஏற்பட்ட தீப்புண்ணை பார்த்தா சிக்கன் பக்கோடா பீஸ் மாதிரியே இருக்குதுங்கண்ணா.

ஆமா நம்ம ஜாதகத்துல செவ் 4ல தானே இருக்காரு. அப்பாறம் இந்த ரேஞ்சுல எப்டி இந்த சீன் நடந்ததுன்னு ரோசிச்சேன். கூட இருந்தது என் மகள். அவளுக்கு ஜாதகத்துல எட்டுல செவ். கோசாரம் எப்படினு பார்த்தா செவ் மகரத்துல உச்சம். பிப்ரவரி 15 ஆம் தேதி கும்பத்துக்கு வரப்போறாரு. இது அவளோட மீனராசிக்க்கு லாப/விரய ஸ்தானங்களாகுது. அவளோட லக்னத்துக்கு 6 /7ஆம் ராசியாகுது.

சரி செவ்வாய் ராசி மாறி வர்ரதுக்கு ஒருவாரம் முன்னாடி எஃபெக்ட் கொடுக்கலாம்.அப்ப பிப்ரவரி 8ஆம் தேதிக்கு மேலதானே எஃபெக்ட் கொடுத்திருக்கனும்.

செவ் தற்போதுள்ள மகரமும் , பிப்ரவரி 15 க்கு மாறப்போற கும்பமும் என்னோட கடகலக்னத்துக்கு 7/8 + சிம்மராசிக்கு 6/7 ஆவது ராசிகளாகுது. ஆக கெட்ட நேரம்னா பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல - முன் கூட்டி பலன் தர்ராப்ல இருந்தா 8ஆம்தேதிக்கு மேலதானே வேலை செய்திருக்கனும்?

இதென்ன 2ஆம் தேதியே செவ் பல்பு கொடுத்துட்டாரு? அஞ்சு நாள் அட்வான்ஸாயிருச்சு.. பஞ்சாங்க கணக்கு தப்பா?

2009,செப் 9 துலா ராசிக்கு சனி பிடிக்கப்போறாருன்னா செப் 2 ஆம்தேதியே ஒய்.எஸ்.ஆர் போய் சேர்ந்துட்டாரு. அவருது துலா ராசி..

பஞ்சாங்கம்,ஜோசியம்லாம் கடவுள் கையில கீற அஜெண்டாவை காப்பியடிக்கிறாப்லதான். கொஞ்சம் முன்ன பின்னேதான் இருக்கும்போல..

மூணு மாசத்துக்கு முந்தி மேற்படி ஆஃபீஸ் முடிவானதுமே பந்தாவா பேனர் போட்டாச்சு. ஆஃபீஸ் பால்கனி க்ரில்லுல பில்டிங் ஓனருக்கு க்ளாஸ் மெட்டான ஒரு ஃப்ரிட்ஜ் ரிப்பேர் கடைக்காரரு தன்னோட டிஜிட்டல் பேனரை வச்சிருந்தாரு.

என் மகள் அப்பா.. மொதல்ல அதை கழட்டி வீசாட்டுப்பான்னு கொம்பு சீவினா நானு அட விடுப்பா பாவம் எவ்ள காலமா வச்சிருக்காய்ங்களோ அதும்பாட்டுக்கு இருந்து போவட்டும் . நாம உள்பக்கமா சுவத்தோட சுவரா தொங்க விட்டுரலாம்னேன்.

ஆனால் தொங்க விட்ட பிறவு பார்த்தா அது இருக்கிற மாதிரியே தெரியலை. தாளி ஒரு ட்யூப் லைட், ரெண்டு மூணு சீரியல் செட்டுதான் வேஸ்டு. பவர் வேஸ்டு. மூணு நாள் முந்திதான் நாம வீட்டோட இருந்துக்கிட்டு ஆன் லைன் க்ளையண்ட்ஸையே பார்த்துக்கிட்டிருந்தா ஊர்ல பொழப்பு நாறிரும்.

ப்ளாகை யாராச்சும் தடை பண்ணிட்டா வம்பாயிரும். புருசனை விட்டு அரசனை பிடிச்சு அரசன் கை விட்ட கதையா போயிரப்போவுதுன்னு தயக்கதோடயே நான் வேணாம்ன வேலைக்கு தலையாட்டினேன்.

பாவம் என் பொண்ணும் ஐரன்ல ஃப்ரேம் எல்லாம் ரெடி பண்ணி ,பேனரை கழட்டிக்கிட்டு போய் ஒட்டி ஆட்டோல கொண்டுவந்து பால்கனில கூட ஏத்திட்டா. அந்த நேரம் பார்த்து பாவம் குழந்தை தனியா அல்லாடப்போவுதுன்னு பார்க்க போனேன். பல்பு வாங்கிட்டேன்.

மேலும் அமாவாசை காலை 6.28க்கு துவக்கம்.இதுல மொதல் ஆறு மணி நேரம் கடேசி 6 மணி நேரம் நல்லதில்லைனு ஒரு ரூல். இந்த சீன் நடந்தது 7.45 . நட்சத்திரம் உத்ராடம் .அதிபதி சூரியன். நம்ம நட்சத்திரத்துக்கு 3 ஆவது நட்சத்திரம். சூரியன் இப்ப மகரத்துல இருக்காரு.

செவ் தனியா இருந்தவரை சமாளிச்சாச்சு. அவரோட சூரியன் வந்து சேர தெலுங்கு பதிவுலகில் அனல் வீச ஆரம்பிச்சது. மொத்தத்துல தெலுங்கு பிராமணாள் ரெம்ப பவித்ரமா இருக்காபல் இருக்கு. அவிக வயித்தெரிச்சல் எதாச்சும் வேலை செய்துருச்சா? டிசம்பர் 6 ஆம் தேதி குரு கும்பம் டு மீனம் வந்தாரு. இது ராசிக்கு எட்டு,லக்னத்துக்கு ஒன்பது.

ரெண்டு நாளைக்கு மிந்திதான் ஆன்லைன் நண்பர் ஒருத்தர் ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல வெப் சைட் வச்சித்தரேன்னாரு. நான் உங்க உழைப்ப வேணா தாங்க. நீங்க பே பண்ணவேண்டியது எதுனா இருந்தா நான் பே பண்றேன்னேன். ரூ.500 டொமைனுக்காக நான் கமிட் ஆனேன்.

இதுவல்லாது கடந்த 3 நாட்களா ஒரு ஜாதகம் அஷ்டமஸ்தானம் ஹவுஸ் ஃபுல்.அதுக்குத்தேன் மாஞ்சு மாஞ்சு பலன் அடிச்சிட்டிருந்தேன் .அந்த ஜாதக எஃபெக்ட் இப்படி வேலை செய்ததா?

ரெண்டு மாசத்துக்கு முந்தி ராம் சரண் சினிமாவுக்கு இதே மாதிரி பேனர் கட்டறச்ச நரிக்குறவ இளைஞன் ஒருத்தனும் ரசிகர்கள் 3 பேரும் கருகி செத்தாய்ங்க. அதனோட தீவிரம் உறைச்சாலும் "இதெல்லாம் இவிகளுக்கு தேவையா"ன்னு அசால்டா கிண்டலடிச்சிட்டிருந்தது ஞா வருது. அதனோட தீவிரம் எனக்கு உறைக்கனும்னு இந்த சம்பவம் நடந்ததா என்ன தெரியலை.


வழக்கமா 1992 லருந்து 2003 வரை வருசத்துக்கு 2 தாட்டி ரத்ததானம் பண்ணிக்கிட்டிருந்தேன். இடையில கேப் விட்டு போயிருச்சு. நான் என்னவோ 2010 அக்டோபர் 2 ஆம்தேதி ரத்ததானம் பண்ணத்தான் போனேன்.ஆனா ப்ளட் பேங்க்ல ஸ்டாக் ஃபுல் - டிமாண்ட் நில்னுட்டு திருப்பி அனுப்பிட்டாய்ங்க.

என்னமோ போங்க நான் பிழைச்சது "அவாளுக்கு " சந்தோசத்தை தராதுனு எனக்கு தெரியும். என் நோக்கம் அவிகளையும் சென்ட்ரல் ஸ்ட்ரீமுக்கு கொண்டுவர்ரதுதான். ஜஸ்ட் ஒரே ஸ்டேட்மெண்ட் எனஃப்.

கடந்தகாலத்துல எங்க மூதாதையர் பண்ணதெல்லாம் வடிகட்டின முட்டாள் தனம். அந்த கடந்தகாலத்தை நாங்க திரஸ்கரிக்கிறோம்.அதை நினைச்சு வெட்க படறோம். எங்களையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்கனு சொன்னா போதும். (அவிக சொல்லமாட்டாய்ங்க)

நேத்துகூட ஆர் எஸ் எஸ் சார்புல மல்ட்டி கலர்ல ஒரு ப்ரவுச்சர் வினியோகம் நடந்தது. ஜெயேந்திரரை அரெஸ்ட் பண்ணினதுக்கும் இந்து விரோத போக்குக்கு லிங்க் வைக்கிறாய்ங்க.

ங்கொய்யால ராசா டெலிகாம்ல மாட்டினப்ப கலைஞர் தான் தலித் வாதத்தை முன் வச்சாரே தவிர தலித் சமூகமில்லை.

இந்த ரூட்ல பிராமண குலம் வந்துட்டா அப்பாறம் நான் ஏன் வையப்போறேன். நான் சர்வே ஜனா சுகினோபவந்துங்கறதை பந்தாவா யூஸ் பண்ணிக்கிட்டிருந்தேன்.அதுக்கு மின்னாடி ஒரு லைன் வருதுங்கண்ணா

"கோ பிராம்ஹனேப்யோ சுபமஸ்து நித்யம்"

(கோ = பசுக்களுக்கும் ; ப்ராம்ஹனேப்யோ =பிராமணர்களுக்கும் ; சுபமஸ்து நித்யம் = நித்தம் நன்மை உண்டாகட்டும்)

போங்கடாங்கோ.... இதையெல்லாம் கேட்டுக்கிட்டு, பொத்திக்கிட்டு நூறுவருசம் வாழறதை விட இதையெல்லாம் கேள்வி கேட்டு அரை நிமிசத்துல சாகக்கூட நான் ரெடி..

6 comments:

தனி காட்டு ராஜா said...

தர்மம் 'தல' யை காத்து உள்ளது ....:)

//"கோ பிராம்ஹனேப்யோ சுபமஸ்து நித்யம்"//

அவாள விட்டு தள்ளுங்கோ...

Kalyan said...

அவள்லாம் பண்ணற அட்டூழியத்தை விட்டு தள்ளுங்க, அதுங்க அப்படித்தான், திருத்தவே முடியாது, தாம் செய்வது தவறுன்னு தெரிந்தும் பண்றதுங்க. நீங்க நல்ல படியா தப்பிச்சிட்டீங்களே அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லி பணியை தொடருங்க.

Amudhavan said...

நல்லபடியாக நீங்கள் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி.உங்களின் வழக்கமான அசால்ட்டான எழுத்துநடை எனக்குப் பிடிக்கிறது. மீண்டும் தமிழ்மணத்தில் இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

Chittoor Murugesan said...

அமுதவன் அய்யா அவர்களுக்கு,
தங்கள் வருகையும், மறு(அமுத) மொழியும் புத்துயிரையும் ,ஆயிரம் யானை பலத்தையும் தந்திருக்கிறது.

நன்றி

Unknown said...

எல்லாம் நன்மைக்கேன்னு நினையுங்கோ...

இந்த அளவில் போனதே ... இதை விட பெரிசா எதும் ஆய்டாம...

Unknown said...

செவ்வாய் கிரகத்துவம் நெருப்பு... ஆனா மின்சாரத்துத்க்கு ராகுதான்னு படிச்சென் சரியான்னு பாருங்க