'>

Sunday, November 14, 2010

பெரியார் வாழ்வும் அவர் ஜாதகப்படித்தான்

ஆமா பாஸ் பெரியாருக்கும் ஜாதகமிருக்கு. பெரியார் வாழ்வும் அவர் ஜாதகப்படித்தான் நடந்திருக்கும். ஆர்னா அவரோட டைம் ஆஃப் பர்த் கொடுத்தா இந்த பாயிண்டை நிரூபிக்கிறேன்.

அவர் கடவுளே இல்லேன்னாலும், ஜோசியம் பொய்னு வாழ் நாள் எல்லாம் சொன்னாலும் கிரகங்கங்கள் தங்களோட வேலைய காட்டிக்கிட்டே தான் இருந்திருப்பாய்ங்க.

சின்ன சிக்கல் என்னன்னா ஜாதகத்துல ஒரு சில கிரக அமைப்புகள் இருந்தா அவிகளுக்கு எதைச்சொன்னாலும் எதிர்த்து  வாதம் பண்ணுவாய்ங்க. ஒத்துக்கிட மாட்டாய்ங்க. அந்த மாதிரி கிரக அமைப்புள்ள பார்ட்டியோட ஜாதகத்தை அக்கக்கா அனலைஸ் பண்ணத்தான் போறேன்.

எனக்குள்ளும் ஒரு பார்ப்பான் இருக்கான். அவனை இந்த பார்ட்டி தட்டி எழுப்பி " நான் தான் முருகேசா கரீட்டு"ன்னு சொல்ல வச்சிருச்சு. அந்த அனுபவத்தை பார்க்கிறதுக்கு முந்தி பெரியார் மேட்டர்:

கடவுள் இருக்காருனு சொல்ல எந்த அனுபவமும் தேவையில்லை (மெஜாரிட்டி இவிகதானே) ஆனால் கடவுள் இல்லேனு சொல்லத்தான் அனுபவம் தேவை. அந்த கடவுளோட ஒரு புரிதல் தேவை. கடவுள் மேட்டர்ல ஆரம்பிச்ச பெரியார் நாத்திகத்தின் உச்சிக்கு போனார். மனிதனை பேசினார். இன்னைக்கும் ஆன்மீக வாதிகள்னு பீத்திக்கிற பிக்காலிங்க கடவுளையே பிடிச்சு தொங்கிக்கிட்டு கிடக்குதுங்க.

ஆன்மீகத்தோட உச்சிக்கு போயிட்டா கடவுள் காணாம போயி மனிதன் தரிசனம் கொடுப்பான். யாராச்சும் பீராய்ங்கப்பா.. பெரியாரோட பர்த் டைம்.

ஓகே இப்ப எனக்குள்ள இருந்த பாப்பான் அவனை கிளப்பிவிட்ட பார்ட்டி பத்தி பார்ப்போம்.

குறிப்பிட்ட தொழில் செய்றவுகளுக்கு குறிப்பிட்ட நோய் வருமாம். உ.ம் உட்கார்ந்து வேலை செய்றவுகளுக்கு ஆசனத்துல கட்டி,  டூவீலர்ல ரெம்ப தூரம் பிரயாணம் பண்றவுகளுக்கு முனை எரியறது,சொட்டு மூத்திரம், பீடி சுத்தறவுகளுக்கு டி.பி.

இந்த ஜோசியத்தொழில் செய்றதால பார்ப்பனீய நோய் தாக்கிருச்சானு ஒரு சம்சயம் வந்துருச்சு.  உங்க ஊர்ல ஐயருங்க எப்படியோ தெரியாது எங்க ஊர் ஐயருங்க வீட்டுக்கு போனா அய்யர் சூ .. வா கழுவிக்கிட்டு வந்து சீட்ல உட்கார்ரவரைக்கும் நீங்க திண்ணைல தான் உட்காரனும்.

ஐயரு சீட்ல வந்து உட்கார்ந்துட்டா மொகத்தை வெளக்கெண்ணை குடி்ச்ச மாதிரி வச்சுக்குவாரு.   நம்மாளுங்க பயபக்தியா வெத்திலை பாக்கு பூ பழம் தட்சிணை எல்லாம் அலங்கரிச்சு ரெண்டு கையால ஐயரு முன்னே வைப்பாய்ங்க.

ஜோசியத்தை தவிர வேற எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது. ஜோசியம்னா என்ன பெருசா.. பிரசங்கம்லாம் இருக்காது. ஆரூடத்தை வச்சிக்கிட்டு பலான வேலையா வந்தியா ? அது ஆகும் ஆகாது.  நீங்க ஜாதக புஸ்தவத்தையே எதிர்க்க வச்சாலும் ஒரு பார்வை. மிஞ்சி மிஞ்சிப்போனா ஜாதககட்டத்துல சந்திரன் எங்கன இருக்காருனு பார்த்துக்கிட்டு கோசாரம்.

திருமண பொருத்தம்னா இன்னம் கோரம். தாளி ஜாதகத்தையே பார்க்கமாட்டாய்ங்க. ஜஸ்ட் நட்சத்திர பொருத்தம்தேன்.அதுவும் பொருந்தலைன்னா பேர் பொருத்தம். அதுவும் பொருந்தலைன்னா பேரை மாத்திருவாரு.. லட்சுமிங்கற பேருக்கு நல்லாவரலை ஆதிலட்சுமினு வச்சுக்கங்கோ ..

வாதம்,விவாதம்,கலந்துரையாடல், கடலை பர்ஃபியெல்லாம் மூச். ஐயரு பொருத்தின பொண்ணு லோலாயினு தெரிஞ்சாலோ, மறுமாசமே தாலியறுத்தாலோ கூட போய் என்னானு கேட்க முடியாது. இது அவிக ஸ்டைல்.

நமக்கு ஜோசியத்துல ஆர்வம் வந்ததே 1989ல. அப்ப நமக்கு 22 வயசு. நம்ம பேட்ச் எல்லாம் நாமர்தாங்க.அதுகளுக்கெல்லாம் டீ,சிகரட் சொல்லிட்டு காசு செட்டில் பண்ணாம மச்சான் உன் டேட் ஆஃப் பர்த் சொல்லேனு ஆரம்பிச்சா " அய்யய்யோ "ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்"ன்னு தலைய பிடிச்சுக்குவாய்ங்க.

"டே டே காசு கூட கொண்டு வல்லேடா என்ன  விட்டுர்ரா மொதல்ல டீக்காசை கொடுத்து தொலைடா"னு  கெஞ்ச ஆரம்பிப்பாய்ங்க. இந்த மாதிரி நத்தம், நாடோடி,பொறம்போக்கு, அரை டிக்கட்,கால் டிக்கட், ஃபோர் ட்வன்டி, பீத்தரைங்க,பிக்காலிங்களுக்கெல்லாம் ( செல்லமாத்தான் - அன்னைய தேதிக்கு நாமளும் இந்த கேட்டகிரிதானே) சொல்லி சொல்லி அவிகளுக்கே நம்பிக்கை வந்து  நாம சோசியம் சொல்லி, பொருத்தம் பார்த்து கண்ணாலமாகி  இப்பம் வரானு வைங்க. திண்ணைல உட்கார வைக்கமுடியுமா? முடியாது. மொகத்தை வெளக்கெண்ணை குடிச்சமாதிரி வச்சுக்க முடியுமா முடியாது.

நாம இந்த அய்யரு பசங்கதான் பில்டப் கொடுத்து பில்டப் கொடுத்து சனத்தை ஏமாத்தினாய்ங்க.

எதிர்காலங்கறது உலக மேப். ஜாதகன் அதும்பின்னால அச்சிடப்பட்ட மனிதனோட படம். ஒன்னு பின்னால ஒன்னு அச்சாகி இருக்கு. சுக்கு நூறா கிழிஞ்சு கிடக்கு. எதிர்காலத்தை சார்ட் அவுட் பண்ண மனிதனோட படத்தையும் உலக மேப்பையும் மேட்ச் பண்ணிக்கிட்டுத்தான் தீரனும். இதுக்கு எத்தனை பேர் ஒத்துழைப்பாய்ங்க?

அஸ்கு புஸ்கு எங்கை கையிலயே மேட்டர் தெரிஞ்சிக்க இந்த டாவானு கேப்பிக.

ஐயா! எதிர்காலங்கறது உங்க கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை வச்சு மாறுது. ஜாதக கட்டங்களை அப்படியே நிமிர்த்தி படுக்க வைங்க. இதான் உங்க வாழ்க்கை பாதை. சில கட்டங்கள்ள இயற்கை க்ளைமோர் பாம் வச்சிருக்கு.

சில கட்டங்கள்ள மனிதன் படத்துல ஸ்டார் ஸ்டாரா கொட்டுமே அந்த மாதிரியும்  புதைச்சு வச்சிருக்கு. நீங்க மொத தடவை காலை வச்சா வெடிக்கிற தீவிரத்துக்கும் ரெண்டாவது தாட்டி காலை வச்சா வெடிக்கிற தீவிரத்துக்கும் வித்யாசமிருக்கு.

நம்ம கேஸ்லயே மொதல் கண்ணாலம் தாளி 24 மணி நேரத்துல பி(ரி)ச்சு போட்டுட்டானுவ. ரெண்டாவது கண்ணாலம் இதோ இந்த நவம்பர் 29 வந்தா 19 வ முடிஞ்சு 20ல அடியெடுத்துவைக்கறோம்.

அட ஜோதிஷம்ங்கறதே ஒரு கடல். இதுல மூழ்கி முத்தெடுத்தவுகல்லாம் போய் சேர்ந்துட்டாய்ங்க. சரி விலைக்கு கிடைச்சா வாங்கிரலாம்னு போனா அவாள் சீக்ரெட் சீக்ரெட்டுனுட்டு ஆசனத்துல செருகி வச்சி வச்சி  நாறிக்கிடக்கு. சரி  நாமளே போய் குதிச்சுருவம்னு போனா கரையெல்லாம் பேண்டு வச்சிருக்காய்ங்க.அதுல செருகி வச்ச முத்து இருந்தாலும் அதை தொட ஒம்பாம வாழ்க்கைய ,உயிரை , வேலை நாட்களை பலி கொடுத்து பணயம் வச்சு   கடல்ல குதிச்சி சங்கும், மீனும்,தவளையும்,முத்துமா அள்ளிட்டு வந்து வச்சிருக்கம்.

இந்த மயித்துல பரீட்சை வேற. ஆத்தா வச்ச பரீட்சையிலயே ஜெயிச்சாச்சு. ஒரு பிக்காலி அய்யர் பெருமைய பத்தி பீத்தி வேணா பிராமண தூஷணை வேணானு ப்ளாக் மெயில் பண்ண போடாங்கோ.. என் பின்னாடி தர்மம் இருக்கு. அந்த தர்மத்து மின்ன பார்ப்பான் என்ன அவன் வச்சி கொள்ளையடிக்கிறானே அந்த தெய்வமே தலைவணங்கியாகனும். பி.தூ பண்ணதால என் ...ரு கூட உதிராது. ஆனா ஒரு பிரபல கோவில்ல பெரிய கொள்ளை நடக்கும். நாளைக்கு பேப்பரை பாருன்னேன். மறு நா "விஜயவாடா கனகதுர்கா கோவில்ல கிரீடத்தையே அடிச்சிட்டானுவ.

எதிர்காலங்கறது தேவ ரகசியம்.அது யூனிவர்சல் மைண்ட்ல மட்டும்தான் ஸ்பார்க் ஆகும். அதுக்கு ஈகோ தான் எதிரி. சொல்றவனுக்கு மட்டும் இல்லாம இருந்தா போதாது கேட்கிறவனுக்கும் இருக்கக்கூடாது.

நேர்மையான ஜோசியர்ங்களுக்கு கூட அவிக சொல்றதெல்லாம் நடக்குதுங்கற  ஈகோ வளர்ந்துரக்கூடாதுனு கடவுள் வருசத்துக்கு ஒரு கேஸை அனுப்புவாரு. இது கடவுளோட லீலை.

நமக்கிருக்கிற கெட்ட பேரு "கெட்டதையே அதிகமா  சொல்றாருப்பா தாளி ஒன்னு விடாம நடந்துருது"ங்கறதுதான். உண்மை என்னன்னா நிறைய மேட்டர் சொல்ல முடியறதில்லை. காரணம்  அவிக தாங்க மாட்டாய்ங்க.  நொந்து போய் வர்ர பார்ட்டிக்கு ஏதோ ஒரு ஆறுதலை தர சின்ன பாயிண்டை கூட ஹைலைட் பண்ணி ஆறுதல் தந்துர்ரம்.

உண்மையான ஜோசியம் சொல்லனும்னா காசு வாங்காம சொல்லனும். இந்த காசு கர்ம சம்பவம். காசோட அவன் கர்மமும் ஒட்டிக்கிட்டு வருது. அவன் கர்மம்தான்  நம்மை கட்டுப்படுத்தும். அவனுக்கு எந்தளவுக்கு அவன் எதிர்காலம் ரிவீல் ஆகனுமோ அதுவரை தான் ரிவீல் ஆகும். காசு வாங்கலைன்னா நம்ம வில் வேலை செய்யும். அதனாலதான் நான் இலவச ஜோதிட ஆலோசனையே ஆரம்பிச்சேன்.

சரி இத்தனாம் பெரிய  மொக்கை எதுக்கு வாத்யாரே..உனக்குள்ள எப்ப பார்ப்பான் நுழைஞ்சானு கேப்பிக. சொல்றேன்.

மொத பத்தில சொன்ன அய்யருங்க மாதிரி மனசாட்சிய கழட்டி வச்சுட்டு, பார்ட்டிய தள்ளி நில்லுனுட்டு , காசே குறியா "தொழில்" நடத்தியிருந்தா இந்த பதிவு போடவேண்டிய அவசியமே இருந்திருக்காது.

நாம லிபரல் - ஃப்ரெண்ட்லி - ஹ்யுமேனிஸ்ட் - சமூக பொறுப்பு - டீ சமோசானுட்டு சந்து கொடுத்தோம் ஒரு பார்ட்டி சிந்து பாடிருச்சு.  மொதல்ல அந்த ஜாதகத்துல உள்ள கிரக நிலைய பாருங்க

தனுசு லக்னம். லக்னாதிபதியான குருவோடயே ராகு சேர்ந்துட்டாரு.  சந்திரன் சனி சேர்க்கையிருக்கு. சந்திரனுக்கு அஷ்டமாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இவர் பத்துல கீறாரு.

7/10க்கு அதிபதியான புதன் விரயத்துல இருக்காரு.  இவரோட பித்ரு  பாக்யாதியான சூரியனும் சேர்ந்திருக்காரு. லக்னத்துலயே 6 க்குஅதிபதி. இவருக்கு லாபாதிபத்யம் வேற இருக்கு (சுக்கிரன்)  3ல கேது . இதெல்லாம் போதாதுன்னு ராசி வேற  கன்னி  ராசி

எச்சரிக்கை:
அய்யய்யோ முருகேசன் கிட்டே ஜோசியம் பார்த்துக்கறதே ஆபத்து மாதிரியிருக்கே.. பலனை பதிவா போட்டுருவாரு போலிருக்கேனு பயந்துக்காதிங்க. பார்ட்டியோட பர்மிஷனோடதான் இந்த பதிவு போடப்படுது.


நியாய தர்மமா பார்த்தா ஜாதகம் கணிச்சு முடிச்சதுமே குரு ராகு சேர்க்கைய பார்த்ததுமே பாருப்பா உன்னுது நாத்திக ஜாதகம். உனக்கு சாஸ்திர நம்பிக்கை இருக்காது . சொன்னாலும் நீ ஏத்துக்கமாட்டே.

விவகாரத்துக்கான அதிபதியே லக்னத்துல உட்கார்ந்திருக்காரு. நீ பஞ்சாயத்துக்கு இறங்கிட்டா வம்பு. உன் ராசி வேற கன்னி. ( ராசிச்சக்கரத்துல 6 ஆவது ராசி) நீ விவகாரத்துக்குன்னே பிறந்தவன்.

சனி சந்திரன் வேற சேர்ந்திருக்காய்ங்க. ப்ளாக் மெயில் பண்ணியே சாகடிப்பே. அஷ்டமாதிபதியான சந்திரனே பத்துல இருக்காரு. சனத்தை கொல்றதே உன் தொழில். அவர் மனோகாரகங்கறதால  நல்லவேளை மானசீகமாத்தான் கொல்லுவே

உன் லக்னாதிபதியான குருவோடயே ராகு சேர்ந்து ஏறக்குறைய சப்பதோசக்காரன் மென்டாலிட்டிக்கு வந்திட்டிருப்பே. நீ எவனையும் நம்ப மாட்டே. ரத்தத்துக்கு அதிபதியான செவ்வாயும் ராகுவோட சேர்ந்திருக்காரு. உன் ரத்தத்துலயே சந்தேகம் இருக்கும்.

போதும் போதாததுக்கு கேது 3ல உட்கார்ந்து தகிரியத்தை வேற கொடுத்துருவாரு. முன்ன பின்னே ரோசிக்காம பேசுவ..

உன் ஜாதகத்துக்கு பலன் சொல்ல முடியாது ஆளை விடுனு அமவுண்டை ரிட்டர்ன் பண்ணியிருக்கனும். பண்ணலை.

ஜஸ்ட் ஒரே ஒரு ஜாதகம்தேன் .ரூ.250 தேன். நமக்கு  நெட் பேங்கிங் எல்லாம் தெரியாது. சொம்மா லாட்டரி ரிசல்ட் பார்க்கிற மாதிரி பேலன்ஸ் பார்க்க தெரியும்.  ட்ரான்ஸ்ஃபர் பண்றதெல்லாம் இன்னம் கத்துக்கலை.

வேற ஒரு பார்ட்டி கோவிலுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண வேண்டிய பணத்தை நம்ம அக்கவுண்ட்ல போட்டுட்டு அய்யோ குய்யோனு புலம்ப இதான் ஐடி இதான் பாஸ்வோர்ட் வச்சிக்க நீன்னு மெயில் பண்ணிட்டன்.

தாளி எஸ்.பி.ஐல ஃபண்ட் ட்ரான்ஸ்பர் எல்லாம் பண்ணனும்னா அதுக்கு தனி பாஸ்வோர்ட் வேணமாம்.அதுக்கு அப்ளை பண்ணா மும்பை போய் வர பத்து நாள் ஆகுமாம்.

அப்பாறம் மகளை கெஞ்சி கூத்தாடி ஏ டி எம்ல ட்ரா பண்ண வச்சு அவரு கணக்குல கட்ட வச்சேன்.

தமாசு என்னடான்னா சனங்க டெப்பாசிட் பண்ற ஃபீஸை ஏடிஎம்ல ட்ரா பண்றது கூட மக தான். தாளி நாம தடுமார்ரதை பார்த்து பின்னாடி நிக்கிறவன் "எவனோட ஏடிஎம்மையோ ஆட்டைய போட்டு வந்தாப்ல இருக்கு"னு நினைச்சுட்டா என்ன பண்றது? அதனால மகளையே அனுப்பிர்ரது.

ஏடிஎம்ல க்யூல நிக்கவே பொறுமையில்லாத பார்ட்டி நாம ..இதுல பாங்க்ல க்யூல நின்னு பார்ட்டி அக்கவுண்ட்ல கட்டறதெல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஒரு ஜாதகத்தை ரிஜெக்ட் பண்ணாத குறைக்கு மாசக்கணக்குல பஞ்சாயத்து. அந்த பஞ்சாயத்தை அடுத்தபதிவுல பார்ப்போம்.

2 comments:

Unknown said...

Umakku nalla tamil la ( Yella district makkalukkum purikintra tamil la, tamil medium school book yellam nenga paarthathu illaya, padithathu illaya)intha pathivukalai yelutha theriyatha? Ne yenna yelavu solla varuranu padikkira makkalukku puriya venama? Muthalil ne nallaa, yella makkalukkum purikira maathiri pathivukalai yelutha palaku, Athukku apram ne un arivu pulamai yellam parisothanai seiyyalam.

Ungalai mariyathai kuraivaka yeluthi iruppathaka nengal feel panninal mannikkavum.

Chittoor Murugesan said...

Vee Ramani !
மொதல்ல நீங்க தமிங்கிலிஷை விட்டு தமிழ் அல்லது ஆங்கிலத்துல எழுத பழகிட்டு பிறவு இந்த கமெண்ட் போட்டிருக்கனும்.

வட்டார வழக்கு மொழியில எழுதறது ஒன்னும் குத்தமில்லை.

நீங்க பத்திரிக்கையில படிக்கிற தமிழ்லாம் "அவா" கை வரிசை. அல்லது அவா இன்ஸ்பிரேஷன்ல எழுதற சூத்திராள் மடமை.