டெஸ்ட் ட்யூப் பேபிகளுக்கு கூட ஜாதக ராசி வேலை செய்யுதுங்கோ. முதல் பேபியை பிறப்பிச்சவருக்கு நோபல் பரிசு. ரெண்டாவது குழந்தையை பிறப்பிச்சவருக்கு தற்கொலை பரிசு.
* உலகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை பிறக்கசெய்த பிரிட்டன் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத டெஸ்ட் ட்யூப் பேபி பிறந்த பிறகு ஜஸ்ட் 67 நாள்ள இரண்டாவது டெஸ்ட் ட்யூப் பேபியை கல்கத்தாவில் பிறக்கச்செய்த இந்திய விஞ்ஞானி முக்கோபாத்யாயாவுக்கு நாம என்ன கொடுத்தோம் தெரியுமா? மரணம்.
ஆமா அந்தாளை மத்திய மானில அரசுகள் நானாவித டார்ச்சர் பண்ணி தற்கொலைக்கு தூண்ட தற்கொலையே செய்துக்கிட்டாரு.
தாளி நான் ஜப்பானுக்கு போறேன்யா. என் ரிசர்ச் பேப்பர்ஸ் அங்கன சப்மிட் பண்றேன்னா அதுக்கு கூட அனுமதிக்கலையாம்.
நாடும் விஞ்ஞா ஆராய்ச்சியும் நெல்லாவே விளங்கும்யா !
நொறுக்ஸ்:
1.பெண்கள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தூங்கினா போதும் . புதிய மருத்துவ பரிசோதனையில் முடிவு. அதனாலதான் பெரியவுக பின் தூங்கி முன் எந்திரிக்க சொன்னாப்ல கீதுப்பா
2.ஒய்.எஸ்.ஆருக்கு கோவில்
"பல்லெ பாட்டா" (கிராமத்துக்கு போவலாமுனு அர்த்தம்) ன்னிட்டு ஒரு ப்ரோக்ராம்ல ஒரு வில்லேஜுக்கு போனாராம். அப்போ அங்கத்தி சனம் கேட்டதையெல்லாம் கேட்டபடி கொடுக்கசொல்ட்டு பூட்டாராம். அப்பாறம் 2 வருசம் கழிச்சு வந்து "இன்னாமா நீங்க கேட்டதெல்லாம் கிடைச்சுதானு வேற கேட்டாராம்.அதனால குஜிலியாகி சனம் கோவில் கட்டுதுப்பா ( ஆமாண்ணே தமிழ் நாட்ல குஷ்புவுக்கு கோயில் கட்ணாங்களே என்னாச்சு?)
Warning:
சாரிண்ணே, அக்டோபர் 17 முதல் சனி செவ்வாய்க்கு பார்வை ஏற்படுது. இந்த திகீர் பகீர் கிரகஸ்திதியை அடிப்படையா வச்சு 12 ராசிக்கும் பலன் எழுதி (அடிச்சு) வச்சேன். அதை ..............காக்கா தூக்கிட்டு போகலை. பென் ட்ரைவ்ல காப்பி பண்ண மறந்துட்டன். இன்னிக்கு மதியம் வரை அஜீஸ் பண்ணிக்கங்க. மதியம் ரிலீஸ் பண்ணீரலாம்.
உடுங்க ஜூட்
வலையுலக ரசிகர்களின் ரசனையை தெரிஞ்சுக்க கீழே போங்க (படம் வச்சிருக்கேன்) நல்லாவே படம் காட்டறப்பானு நொந்துக்கிடாதிங்கண்ணே
No comments:
Post a Comment