'>

Sunday, October 3, 2010

இயற்கை கொஞ்சம் பெருசு, மனிதன் கொஞ்சம் சிறுசு

ரீ என்ட்ரி
அனுபவஜோதிடம் என்ற இந்த வலைப்பூவை ரெம்ப நெக்லெக்ட் பண்ணிட்டன். எப்படியும் கவிதை07ல உறுப்பினர் எண்ணிக்கை 500 ஆக போறதுமில்லை. புதுப்பதிவு போடப்போறதுமில்லை. அதனால இந்த பேட்டைபக்கம் ஒதுங்கியிருக்கேன். ஆரம்ப ஜோர்ல பதிவுகள் போட்டதோட அம்பேல். 

கிணறு வெட்டினவனையே நீ தண்ணி குடிக்க கூடாதுனு தடை பண்ணிட்டிருந்தாய்ங்களே அந்த கதையாயிருச்சு. என்ன ஒரு வித்யாசம்னா கிணறு வெட்டினது உங்களுக்காக .. ஒரு ஐ நூறு பேர் கூட இதுல தண்ணியெடுப்போம்னு உறுதி தரலைன்னா அதை தூறெடுத்து என்ன புண்ணீயம். அதான் அப்படியே விட்டுட்டு வந்துட்டன்.

ரெண்டு மூணு நாள்ள என் கிட்டே உள்ள மெயில் ஐடிக்கெல்லாம் ப்ளாகை பார்க்க வரும்படி ஒரு இன்விட்டேஷன் அனுப்பிட்டு அதுல உள்ள லிங்கை க்ளிக் பண்ணி வந்து சைன் இன் பண்ணாதவிர ப்ளாகை பார்க்க முடியாதபடி பண்ணிர போறேன். சைன் இன் பண்ண விருப்பமில்லாதவுக  ஒரு மாசம் வரை கெஸ்டா வந்து போகலாம்.

சரிங்கண்ணா மேட்டருக்கு வரேன்.

ஜோசியத்து மேல சனத்துக்கு ஏன் இத்தனை ஆர்வம்னு பார்ப்போமா? மன்சன் சைக்காலஜி என்னடான்னா இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படறதுதான். இவனோட இறந்த காலம் ,நிகழ்காலம் என்னனு இவனுக்கு தெரியும். தெரியாதது எதிர்காலம் ஒன்னுதான் அதனால தான் ஜோசியம்னா இத்தனை ஆர்வம். மக்களுக்கு எதுல ஆர்வமிருக்கோ அதை வச்சி கேஷ் பண்றதுதானே பிக்காலிங்க ஸ்டைல். அதனாலதான் ரெண்டு ரூபா கிளி ஜோசியத்துல இருந்து டிவில வர்ர  டுமீல் பார்ட்டிங்க வரை சகட்டு மேனிக்கு சனத்தை ஏ....மாத்தறாய்ங்க.

இந்த இயற்கையோட மீனியேச்சர் தான் மனிதன். ( ராம  நாரயணன் படத்துல வர்ர மிருகங்க உங்களை கடிக்கிற கொசு கூட இப்படித்தான்)  என்ன இந்த இயற்கை கொஞ்சம் பெருசு, மனிதன் கொஞ்சம் சிறுசு.  ஒட்டு மொத்த படைப்பும் மனிதனுக்குள்ள அடக்கமாகியிருக்கு.

இவனுக்குள்ளயும் சூரிய சந்திரர்கள், கிரகங்கள் நடசத்திரங்கள் எல்லாம் உண்டு. ஒவ்வொரு உயிருக்கும் ஏன் மரம் செடி கொடிக்கு கூட இந்த ஒட்டு மொத்த படைப்போட எதிர்காலம் என்னனு தெரியும்.

இதை யூனிவர்சல் மைண்டுங்கறாய்ங்க. குழந்தை இந்த யூனிவர்சல் மைண்டோட தான் பிறக்குது. அதாவது மத்த உயிர்களை போலவே மனித குழந்தைக்கும் தன்னை இயற்கையிலிருந்து வேறு படுத்தி பார்க்க தெரியாது. நானுங்கற வார்த்தையே ஆரம்பத்துல பாப்பா வாய்லருந்து வராது. பேச்சு ஆரம்பிச்ச பிறவும் கூட தனக்கு எதுனா வேணம்னா "பாப்பாக்கு பாச்சி" "பாப்பாவுக்கு ஊ" னு தான் சொல்லும்.

அப்பாறம் தான் பேரண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாருமா சேர்ந்து நீ தனி இயற்கை தனினு அதோட மைண்டை கரப்ட் பண்ணிர்ராய்ங்க. இதை தான் சைக்காலஜில ஈகோனு ஆன்மீகத்துல அகங்காரம்னும் சொல்றாய்ங்க.

யூனிவர்சல் மைண்டோட ஈகோ சேர்ந்தா அது இன்டிவியூஜுவல் மைண்ட் ஆயிருது. அதனோட மூளையில பதிவாகியிருந்த ஒட்டு மொத்த படைப்பின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்த பதிவுகள் மறைக்கப்பட்டுருது. அதனாலதான் நாம கிளி ஜோசியம், குட்டி சைத்தான்னு அலையறோம்.

உங்களுக்கு உங்க எதிர்காலம் மட்டுமில்லாம ஒட்டு மொத்த படைப்பின் எதிர்காலத்தையும் தெரிஞ்சுக்கனும்னு சின்னதா ஆசை இருந்தா அதை நிறைவேத்திக்கிறது சிம்பிள். ஜஸ்ட் உங்க ஈகோவை விட்டுரனும். இந்த படைப்போட இரண்டற கலந்துரனும். சூரியன் உதிச்சா விழிக்கனும், மறைஞ்சா தூங்கிரனும். கோடை வெயில் பட்டை உரிச்சாலும் செருப்பு போடக்கூடாது. காத்து,மழை,வெயில் எல்லாத்தையும் சமமா ஏத்துக்கிடனும். அப்போ யூனிவர்சல் மைண்ட மூடியிருக்கிற ஈகோ கரைஞ்சு உள்ள இருக்கிற மேட்டர் எல்லாம் பல்பு போடும். ஓகே .

இதான் தொகையறா. இன்னும் எடுப்பு,தொடுப்பு,பல்லவி,அனுபல்லவி சரணம்லாம் இருக்கு. நெதானமா பார்ப்போம்.

ஒரு வேண்டு கோள். இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உடனே இந்த ப்ளாக்ல மெம்பராயிருங்க. உடு ஜூட்

No comments: