அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு நம்ம ஊருல ராமர் கோவில் தேரு. ஒரு காலத்துல அண்ணாந்து பார்க்கிற உசரத்துல மரத்தேர் இருந்தது. அதை சனங்களோட நெக்லெஜென்சியும் செதிலும் தின்னுருச்சு. இன்னொரு சோகம் என்னடான்னா கடந்த பதினாலு வருசமா உற்சவமே நடக்கல்லை.
நம்ம தொகுதி எம்.எல்.ஏ இனிஷியேட் பண்ணதுல கடந்த வருசம் ரீ ஸ்டார்ட் ஆச்சு. உங்க ஊருல தேருன்னா எங்களுக்கென்னய்யான்னு கேப்பிக. மேட்டர் என்னடான்னா தேர் உலா வர்ரதுக்காவ சாலைக்கு குறுக்கே போற எலக்ட்ரிக் ஒயரை எல்லாம் கழட்டி விட்டுருவாய்ங்க. மதியம் 1 மணி வரை பவர் கட். அதனாலதேன் இன்னைக்கு பதிவு லேட்டு.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல.
வயசுக்கு வர்ரது , புஷ்பவதியாறது ,பெரியமனுஷி ஆறது , மெச்சூர் ஆறதுன்னு எத்தனை வார்த்தையில சொன்னாலும் மேட்டர் ஒன்னுதேன்.
ஆந்திராவுல ஒரு சோசியரு பெண்கள் எப்பம் வயசுக்கு வந்தா அவிக லைஃப் எப்படி இருக்கும்னு ஒரு புஸ்தவத்துல எளுதிட்டாரு. தாய்க்குலம் மனித உரிமை கமிசனுக்கு புகார் கொடுத்துட்டாய்ங்க.
ஆனால் வாசன் பஞ்சாங்கத்துல பெண்கள் எந்த நட்சத்திரத்துல வயசுக்கு வந்தா என்ன ஆவாய்ங்கன்னு விலாவாரியா தந்திருக்காய்ங்க. இந்த பலன்ல நமக்கு நம்பிக்கை இல்லை.
நம்ம ஜோதிடம் 360 புஸ்தவத்துல கூட //ஜாதகத்திலான ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் பூதாகரமாக்கி ( நட்சத்திரம்,ராசி,லக்னம், ஏதோ ஒரு கிரகம்,ஏதோ ஒரு பாவ) அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிப்பதோ பலனை எதிர்ப்பார்ப்பதோ மடத்தனம். கூட்டிக்கழிச்சு Gross ஐ நெட்டாக்கி ஹிட் அடிக்கனும் ராசா !//ன்னுதேன் சொல்லியிருக்கம்.
ஜாதகத்துக்கே இதான் நம்ம ரூலு. இதுல ருது ஜாதகம்னு பார்க்கும் போது அசலான ஜாதகம் ரெம்ப தேசலா இருந்து ருது ஜாதகம் பெட்டரா இருந்தா ஓரளவு ரிலீஃப் கிடைக்கலாமோ என்னமோ ..ஜாதகம் நல்லா இருந்து ருது ஜாதகம் எப்படி இழவெடுத்துப்போனாலும் அசலன ஜாதகம் தேன் நின்னு விளையாடும்.
"அதிர்ஷ்டசாலிய எவனும் கெடுக்க முடியாது -துரதிர்ஷ்ட சாலியை எவனும் உருப்பட வைக்கமுடியாதுங்கோ"
கீழே வாசன் பஞ்சாங்கத்துல கொடுத்திருக்கிற பட்டியலை அப்படியே தந்திருக்கேன். இந்த பலனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லிங்கோ. வாசன அண்ட் கோ அப்ஜெக்ட் பண்ணா ஒடனே நீக்கிருவம்.
அஸ்வினி - விதவை
கொய்யால இருக்கிற பெண்களை எல்லாம் 27 க்ரூப்பா பிரிச்சுரலாம் . அப்பம் 27 பெண்கள்ள ஒரு பெண் விதவையாத்தான் இருக்கனும். பின்னே ஜனத்தொகை எகிறுது? அதனால இதெல்லாம் ஜல்லி. அதே நேரம் அசலான ஜாதகத்துல ஆப்பு இருந்தா நாம அம்பேல்.
இதே ரேஞ்சுல கமெண்ட் அடிச்சா ரெம்ப வில்லங்கமா போவும்.சனி வேற ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் மாதிரி வாக்குஸ்தானத்துக்கு வந்திருக்காரு. அதனால நாம ஜகா வாங்கிக்கிறோம்.
இதை படிக்கிறவுக வேணம்னா கமெண்ட் போடலாம்.
பரணி -புத்ரவதி
கிருத்திகை -மலடி
ரோகிணி- நன்மை உடையவள்
மிருகசீர்ஷம் -புருஷர்க்கினியவள்
திருவாதிரை-வெறுப்புள்ளவள்
புனர் பூசம் -சுகமுடையவள்
பூசம் - சீருடையவள்
ஆயில்யம் -வயிறழிவு ( அபார்ஷன்?)
மகம் - பர்த்தாவுக்கு நல்லவள்
பூரம் -மலடி
உத்திரம் - பிரயோஜனவதி
ஹஸ்தம் -நல்லவள்
சித்திரை -அறிவுள்ளவள்
ஸ்வாதி -குடும்பி
விசாகம் -அமங்கலி
அனுஷம் -போகி
கேட்டை -பரஸ்த்ரீ
மூலம் - பாலுடையவள்
பூராடம் -அடிமை தேடும்
உத்திராடம் -தர்மிஷ்டி
திருவோணம் -பாக்யவதி
அவிட்டம் - பொருள் உடையவள்
சதயம் -பொருளழிவு
பூரட்டாதி -மலடி
உத்திரட்டாதி -தரித்திரி
ரேவதி -ரோகி