Sunday, May 13, 2012
நித்யானந்தா -ஜெயேந்திரர் ரகசிய சந்திப்பு
(அண்ணே .. இது முழுக்க முழுக்க கற்பனை தான். ஆனால் அவிக ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினா அந்த கான்வர்சேஷன் ஏறக்குறைய இந்த பதிவு மாதிரியே இருக்கவும் வாய்ப்பிருக்கு.ஆனால் அவிக மானத்தை விட்டு,மரியாதைய விட்டு ,மரபுகளை காத்துல விட்டு பேசுவாய்ங்களே தவிர மனசு விட்டு மட்டும் பேசமாட்டாய்ங்க இது உறுதி )
நித்யானந்தா:
என்னய்யா.. என்னை இளைய ஆதீனமா நியமிச்சதை ஏத்துக்க முடியாதுன்னு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டிங்களே ..ஏதோ உங்க மேலயும் பாலியல் புகார்கள் இருக்கு, உங்க மேலயும் வழக்குகள் இருக்கு.காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ் மாதிரி நீங்களாவது எனக்கு ஆதரவு கொடுப்பிங்கன்னு பார்த்தேன்.படக்குன்னு கவுத்துட்டிங்களே..
ஜெயேந்திரர்:
ஏண்டா அபிஷ்டு..கீதையில கிருஷ்ணர் என்ன சொன்னாரு? பரதர்மம் எவ்ள உசந்ததா இருந்தாலும் சுதர்மம் தான் பெட்டர்னு சொல்லல்லே.. உன் குலமென்ன கோத்திரமென்ன பிறப்பென்ன வளர்ப்பென்ன நீ உன் வேலைய பார்த்துண்டு போகாம ஒனக்கேண்டா இந்த மடாதிபதி கனவெல்லாம்? நீ எல்லாம் மடாதிபதி ஆகனும். அதுக்கு நான் ஆதரவு தரனுமா?
நித்யானந்தா:
ஏற்கெனவே நான் ஆசிரமம்லாம் வச்சு மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கேனே. அப்பல்லாம் ஒன்னும் பேசல்லை
ஜெயேந்திரர்:
அதெல்லாம் சுய இன்பம் மாதிரி .. சூத்திராள் இப்படிப்பட்ட பை தனம்லாம் பண்ணத்தான் செய்வா. நாம கண்டுக்கப்படாதுன்னு இருந்தேன்
நித்யானந்தா:
சொந்த மடம் வச்சுக்கலாம்.ஆனால் ஆதீனத்துக்கு இளவரசராக கூடாதுங்கறிங்களா?
ஜெயேந்திரர்:
நீ பீடதியோட நின்னா அதுக்குண்டான ரெகக்னிஷன் வேற .ஆதீனமாயிட்டா அதுக்குண்டான ரெகக்னிஷன் வேற .
நித்யானந்தா:
பிராமணனல்லாதவனுக்கு அங்கீகாரம் தரப்படக்கூடாதுங்கறது உங்க ஸ்டாண்டா?
ஜெயேந்திரர்:
ஆமாம்.
நித்யானந்தா:
அப்போ எதுக்கு ரஞ்சிதாவ எல்லாம் இழுக்கனும்.
ஜெயேந்திரர்:
இழுத்தது நீ.கட்டிப்புரண்டது நீ ..ரஞ்சிதா மேட்டர்ல எல்லாம் என்னை இழுக்காதே
நித்யானந்தா:
ஏன் ரஞ்சிதாவை விட பெட்டர் டிக்கெட்டெல்லாம் அவெய்லபிலிட்டியில இருக்கோ ?
ஜெயேந்திரர்:
ஆனை படுத்தாலும் குதிரை மட்டம் அதை தெரிஞ்சுக்கோ
நித்யானந்தா:
அதாவது பாலியல் புகார் இருந்தாலும் - வழக்குகள் இருந்தாலும் உங்க ரேஞ்சே ரேஞ்சுங்கறிங்க.
ஜெயேந்திரர்:
இல்லையா பின்னே. கலெக்டரும் பில் கலெக்டரும் ஒன்னா?
நித்யானந்தா:
இவ்ளோ தரா தரம் பார்க்கிற நீங்க எதுக்கு வாடகை கொலையாளிகளோட எல்லாம் இன்டர் ஆக்ட் ஆகனும்
ஜெயேந்திரர்:
வழக்கு கோர்ட்டுல இருக்கு.
நித்யானந்தா:
அது சரி.. நீதிபதிக்கு லஞ்சம் தர்ரதை கூட நீங்களே பேசினதா டேப் வந்திருக்கே.. அப்ப என்ன ஆச்சு உங்க ரேஞ்சு
ஜெயேந்திரர்:
வழக்கு கோர்ட்டுல இருக்கு
நித்யானந்தா:
ஏங்க .. எப்படி பார்த்தாலும் நாம ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான்.ஆனால் இந்த மீடியா ஏன் என்னை மட்டும் இப்படி காச்சு காச்சுன்னு காச்சுது.
ஜெயேந்திரர்:
மீடியா எங்களவா கையில இருக்கு.
நித்யானந்தா:
இருந்து என்ன புண்ணியம் .. இப்பவும் மூத்த சங்கராச்சாரியோட அருள் வாக்குதான் பத்திரிக்கையில வருது.உங்களை ஏத்துக்கவே இல்லையே.
ஜெயேந்திரர்:
அதெல்லாம் இன்னர் பாலிட்டிக்ஸ். பெரியவா இருந்தப்போ எங்களவா எல்லாம் அவரை மொய்ச்சுண்டிருந்தா. எப்படியாவது அவரை ஓவர் டேக் பண்ணனும் -நமக்குன்னு ஒரு ஆதரவு தளத்தை உருவாக்கனும்னுதான் ஜன கல்யாண்,ஜன ஜாக்ரன்னு ஆரம்பிச்சு சேரிக்கெல்லாம் போக ஆரம்பிச்சேன். அந்த கசப்பை அவாள் இன்னம் மறக்கல்ல.
நித்யானந்தா:
அதெல்லாம் கிடக்கட்டுங்க. நான் இளைய ஆதீனமா தொடர்ரதுக்கு ஆதரவு கொடுங்க ப்ளீஸ்.. நொந்து போய் இருக்கேன்.
ஜெயேந்திரர்:
எனக்கே மரியாதைங்கறது இப்பவே மிச்சம் மீதி இல்லாம போயிருச்சு. த மரியாதை.. ஒனக்கு ஆதரவு கொடுத்தேன்னு வை ..சுத்தமா எந்த காலத்துக்கும் நிரந்தரமா இல்லாமயே போயிரும்..
நித்யானந்தா:
அதான் இல்லேங்கறிங்கல்ல. ரஞ்சிதாவ அனுப்பிவைக்கட்டுமா?
ஜெயேந்திரர்:
இப்படித்தான் ஆதீனத்தை மடக்கிட்டயா?
நித்யானந்தா:
நான் கிருஷ்ணன் ரஞ்சிதா ராதா.. அர்த நாரீஸ்வர தத்துவம் தெரியுமில்லை. ஒரு பாதியால ஆகாத காரியத்தை அடுத்த பாதியை வச்சு ட்ரை பண்ணலாமேன்னு
ஜெயேந்திரர்:
ஏண்டா அம்பி .. நானெல்லாம் மூத்த சங்கராச்சாரியார் காலத்துல அடங்கி,ஒடுங்கி,அடக்கி,ஒடுக்கி,நொந்து நூடுல்ஸாகி கிடந்தோமே.. வருசக்கணக்கா நான் பட்ட அவதியெதையுமே படாம நீ பாட்டுக்கு இளைய ஆதீனம்னா வயித்துல எரியாதா?
நித்யானந்தா:
அட இப்படி ஒரு ஆங்கிள் கூட இருக்கா?
ஜெயேந்திரர்:
கெட்ட வார்த்தைல்லாம் பேசாதே
நித்யானந்தர்:
வார்த்தைக்கு பொருள் டிக்சனரியில இருக்கு. கெட்ட அர்த்தம் கேடு கெட்ட மைண்ட்ல இருக்கு
ஜெயேந்திரர்:
சரிடாப்பா எங்க மைண்ட் எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போச்சு. ஆதீனத்தையாவது விட்டுரு
நித்யானந்தர்:
ஆங் அது நடக்காது.. நான் என்னவோ கோர்ட்டுக்கு போகாம இருக்க ஆதீனத்துக்கு ஒரு சேங்சன் இருக்கிறதா கேள்விப்பட்டு ரொட்டீனா தான் வந்தேன். நீங்க எல்லாம் என்னை சீண்டி விட்டுட்டிங்க.. ஆதீனத்தை மட்டும் இல்லை ஒரு நாளில்லை ஒரு நாள் காஞ்சி மடத்தையும் பிடிச்சே தீருவேன். நம்ம லேட்டஸ்ட் ப்ளான் என்ன தெரியுமா .. ஜனாதிபதியா கன்டெஸ்ட் பண்ணப்போறோம். ஏன்னா ஜனாதிபதியைத்தான் கோர்ட்டுக்கு கூப்பிடமுடியாதாம்..
ஜெயேந்திரர்:
அய்யய்யோ.. இதென்னடா பாரதமாதாவோட அடிமடியிலயே கை வைக்கிறே ..சக்தி ஸ்வரூபம்டா இந்த தேசம். நாசமா போயிருவ..
நித்யானந்தர்:
ஆமா ஆரோ ஒரு லேடிக்கு ஏலக்காய் மாலை போடறேன்னு எதுலயோ கை வச்சீராமே.. எதுல சாமி..
ஜெயேந்திரர்:
நக்கீரனை கேளு
நித்யானந்தா:
ஏங்க நானாச்சும் ஏதோ ரஞ்சிதா கூட சில்மிஷம் பண்ணேன். பிரம்மச்சரியத்தால பலன் இல்லை. காமத்தை கடக்க கல்யாணமே நல்ல வழின்னுட்டு சன்யாசியா உள்ள நான் ராஜரிஷியா மாறமுடியும். பிரச்சினை தீர்ந்து போயிரும். ஆனால் நீங்க பண்ணியிருக்கிற வேலை? சங்கர்ராமனை உயிர் பிழைக்க வைக்கமுடியுமா?
ஜெயேந்திரர்:
ஒனக்கு ஒரு கும்பிடு ..போய் வா..
(நித்யானந்தா வெளி வர - அங்கே காத்திருக்கும் நிருபர்களிடம் நித்யானந்தா பேசுகிறார்)
வந்த காரியம் முடிந்தது . ஜெயேந்திரர் இளைய ஆதீனமாக அங்கீகரித்ததோடு என்னை கையெடுத்து கும்பிட்டு விட்டார்.விரைவில் எல்லா மடாதிபதிகளையும் என்னை கும்பிடவைப்பேன்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment