Wednesday, May 9, 2012
சட்டம் ஒழுங்கு : ஜெ வுக்கு சில யோசனைகள்
அண்ணே வணக்கம்ணே !
ஜெ வுக்கு ஆலோசனை சொல்லத்தான் சோ அய்யர் இருக்காரே .இதுல உன் ரோசனைக்கு என்ன தேவையிருக்குன்னு கேட்க வரிங்க.அதானே.
அவா மென்டாலிட்டி நம்மவா நல்லாருந்தா போதுங்கறது. நம்ம மென்டாலிட்டி நமக்கே ஆப்பா முடிஞ்சாலும் சரி நாலு பேருக்கு நல்லது நடக்கனும். இதான் நமக்கும் அவாளுக்கு வித்யாசம்.அதனால நம்ம ரோசனைதேன் அம்மாவுக்கு தேவை.
இதுல நம்ம நோக்கம் ரெம்ப சிம்பிள். ஒரு நாளில்லை ஒரு நாள் நாம லைம் லைட்டுக்கு வருவம். நாளிதுவரை ப்ளாக்லயும் வெப்சைட்லயும் நாம சொல்ல ஒரு ஆயிரம் பேர் மட்டும் கேட்ட நிலை மாறி பல்லாயிர
ணக்கானவுக ஏன் லட்சக்கணக்கானவுக கேட்கிற நேரம் வரும்.
அப்பம் வில்லங்கம் புடிச்ச பேப்பர் காரவுக சகட்டு மேனிக்கு கேள்வி கேட்பாய்ங்க.கொய்யால 2020 ல உலகத்தையே காப்பாத்த வந்த மாதிரி வாயை கிழிச்சுக்கறியே .
2006-11 பீரியட்ல கலைஞர் அரசை இஷ்டாத்துக்கு திட்டி தீர்த்தே - நக்கல் அடிச்சே - நையாண்டி பண்ணே- பெரிய வராஹமிரர் கணக்கா தாத்தா காலி - அம்மா தான் சி.எம்னு தம்பட்டம் அடிச்சே.
அம்மா வந்தாய்ங்க. என்ன ஆச்சு? பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வுன்னு தாளிச்சாய்ங்க. அப்பம் வாயை திறந்தயா ? 2011- 2012 ல சனம் நாய் படாத பாடுபட்டாய்ங்களே அப்பம் என்னதான் புடுங்கிக்கினு இருந்தேன்னு கேட்பாய்ங்க.
அவிகளுக்காவ இல்லின்னாலும் கு.ப நம்ம மனசாட்சிக்காக வாச்சும் ஏதாவது பண்ணனும். பசியும் பட்டியுமா இருந்த காலத்துல மாங்கு மாங்குன்னு எளுதி ஃபாக்ஸ் பண்ணனும் அ கூரியர்ல அனுப்பனும். இன்னைக்கு ஒரு பதிவு போட்டா போதும். மனசாட்சி ஒரு 3 மாசத்துக்கு முரண்டு பிடிக்காது. பொளப்பை பார்க்கலாம்.
தமிழ் நாட்டோட தலை எழுத்து நெல்லா இருந்து ஆருனா இன்டலிஜென்ஸ் காரவுக இந்த பதிவோட ப்ரிண்ட் அவுட்டை ரிப்போர்ட் பண்ணா இன்னம் பெட்டர்.
நான் அம்மாவுக்கு ஏற்கெனவே சொன்ன / சொல்லப்போற ரோசனைல்லாம் ஊர் பிள்ளைய கிணத்துல தள்ளி ஆழம் பார்க்கிற ரோசனை கிடையாது. எதிர்காலத்துல நாமளோ நாம கை காட்டற ஆசாமியோ சி.எம்/பி.எம் இப்படி ஒரு பதவிக்கு வந்தா நாம அப்ளை பண்ண போற அவிகளுக்கு தரப்போற கைட் லைன்ஸ் தேன்.அதனால அதிகாரிங்களோ -கட்சிக்காரவுகளோ ஆரும் பயந்துக்க தேவையில்லை. நம்ம ரோசனைல்லாம் கோக்கு மாக்கா இருந்தாலும் ஃபைனல் ரிசல்ட் ஃபைனா இருக்கும். ஓகே உடுங்க ஜூட்.
மாற்றம்:
அரசியல்ல ஒரு தோல்விக்கு அப்பாறம் -ஒரு அவப்பேருக்கு அப்பாறம் தலைவன்ல ஒரு மாற்றம் வரனும். வெறுமனே மாற்றம் வந்துட்டா போதாது. அட இந்தாளு மாறிட்டான்யாங்கற நம்பிக்கை சனத்துக்கு வரனும்.
அம்மா எதுல தோத்துப்போனாய்ங்கன்னு கேப்பிக. சொல்றேன். கலைஞர் ஆட்சியில படாத பாடு பட்ட சனம் அம்மா ஆட்சி வந்தா கு.ப இந்த கோமா நிலை இருக்காது. கு.பட்சம் சட்டம் ஒழுங்கு பெட்டரா இருக்கும்னு நம்பினாய்ங்க. அந்த நம்பிக்கை நாசமா போச்சு.
சட்டம் ஒழுங்கை காப்பாத்தனும்னா அது ஒரு மிஷன். அதுக்கான ரோசனைகளை கீழே தரேன். சட்டம் ஒழுங்கு கரீட்டாயிருச்சுன்னா அம்மாவுக்கு இழந்த இமேஜ் திரும்பி வரும் அவ்ளதான். புதுசா இமேஜ் வரனும்னா அதுக்கு பலான பலான ரோசனைல்லாம் இருக்கு.அடுத்த பதிவுல பார்ப்போம்.
இப்பம் சட்டம் ஒழுங்குக்கு டிப்ஸ்:
1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும். இதனால் எவரும் எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்காது. மேற்படி 3 செட்ஸ் ஆஃப் மென்ல ஒரு எஸ் ஐ ஆவது எல்.எல்.பி பண்ணியிருந்தா பெஸ்ட்.
வழக்கு பதிவு செய்யறதோட காவலர்களின் வேலை முடிஞ்சுரனும். குற்றவாளியை கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டு அலையறது -தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்கு வேற விங் ஏற்படுத்திரனும்.
2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும். அவிகளுக்கான போஸ்டிங்ஸ் கூட கணிணியே போடனும்.
3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது சேமிப்புக்கும் - அத்தியாவசிய,விபரீத சூழல்களுக்கு மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)
4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும். பிரச்சினை உள்ளவுகளுக்கு உடனடியா சிகிச்சை,கவுன்சிலிங்.
5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.
6.காவல் துறை வாகனங்கள் , கட்டிடங்கள் இத்யாதியை பராமரிக்க க்ளோபல் டென்டர் கூப்டு தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்துரனும்.
7.மத்திய அரசுக்கு ப்ரப்போஸ் பண்ணி /கு.ப அண்டை மானில அரசுகளுடன் பேசி அனைத்து/ தென்/ சில மானில போலீஸ் துறைகளையாவது ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி)
நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்
8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால் நாடு கடத்த வேண்டும்
9.ஒரு காவல் நிலையத்தின் செயல் திறனை பொருத்து அந்த காவல் நிலைய ஊழியர்களுக்கு போனஸ், இன்சென்டிவ் கொடுக்கனும்.செயல் திறன் குறைந்தால் சம்பளத்தில் சலுகையில் வெட்டு விதிக்கனும்.
10..குற்றங்கள் நிகழ்ந்த பிறகு குற்றவாளியை துரத்துவதை விட -குற்றங்கள் நிகழாது பார்த்துக்கொள்வதே காவல் துறையின் முக்கிய வேலையாக மாறவேண்டும்.
இது பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்..
டாப் சீக்ரெட்:
நம்ம எதிர்கால மாப்பிள்ளை ( 12 நாள் உண்ணாவிரதத்துக்கு அப்பாறம் நாம எப்டியிருந்தமோ அப்டியே இருப்பாரு) ஒரு குறு நிலமன்னர் கூட மோதிட்டாரு. இந்த மேட்டர்ல் ஃபயர் இஞ்சின் வ்லை பண்றதுக்கே தாவு தீர்ந்துருச்சு. அதான் நேத்து பதிவு போடலை. இன்னைக்கும் ஏறக்குறைய மீள் பதிவு. நாளையிலருந்து
ப்ராப்ளம் பேஸ்ட் ரெமிடீஸ் தொடரும்.
போனஸ்:
அம்மா பக்தர்கள் பார்வைக்கு கீழ் காணும் பதிவுகளை வைக்கிறேன். நெஜமாலுமே அம்மா அடுத்த 4 வருசமும் நல்லாட்சி தரனும் - நல்ல பேர் வாங்கனும் -2014 பார்லிமென்ட் எலக்சன்லயும் ஸ்வீப் பண்ணனும் -பிரதமரை நிர்ணயிக்கிற பொசிஷன்ல இருக்கனும் -விட்டா அடுத்த சட்டமன்ற தேர்தல்கள்ளயும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகனும்னு நீங்க நினைச்சா இந்த பதிவுகளை ப்ரிண்ட் எடுத்து அம்மாவுக்கு ஃபாக்ஸ் பண்ணுங்க
விலைவாசியை குறைக்க
மானிலங்கள் குறித்த கனவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment