அண்ணே வணக்கம்ணே !
இந்த பதிவுக்கு மொதல்ல நித்யானந்தாவும் ரஸ்புதினும்னு தான் தலைப்பு
வச்சேன். ஆனால் ஞா கிழமை ஆச்சா ஆரும் கண்டுக்கிட மாட்டாய்ங்களோங்கற
சந்தேகத்துலதான் இந்த வில்லங்க தலைப்பு. ஆனால் இது சரித்திர உண்மைங்கோ..
நித்யானந்தாவை பற்றி சொல்ல வந்தால் கழண்டுக்குவிங்க. அதனால
சரித்திரத்துல ஏறக்குறைய இதே கேரக்டரோட இருந்த ரஸ்புதினை பத்தி சொல்லலாம்னு
ஒரு கெட்ட எண்ணம்.
ரஷ்யாவுலன்னு ஞா. அலெக்சியான்னு ஒரு இளவரசனுக்கு ரத்தம் உறையா நோய்
இருந்தது. நமக்கு அடிப்பட்டா ரத்தம் வரும் .கொஞ்சம் நேரத்துல பாடி
என்னென்னமோ ரசாயனத்தை எல்லாம் சுரந்து ரத்தம் போற வழியை சீல் பண்ணிரும்.
ஆனால் அலெக்சியாவுக்கு இது நடக்காது. சோசியக்காரவுக எல்லாம் “இது
வேலைக்காகாது இளவரசர் டிக்கெட் போட்டுருவாருன்னு “சொல்லியாச்சு.
ரஸ்புதின் நம்ம நித்யானந்தா மாதிரி கிராக்கி. லேசா ஹிப்னாட்டிசம் தெரியும் போல (மனவசியம்)
மேற்படி இளவரசனோட அம்மா (?) என்னென்னமோ முயற்சி எல்லாம் செய்துட்டு நொந்து கிடக்க ரஸ்புதினுக்கு அரண்மனை சகவாசம் ஏற்படுது.
தன்னோட ஹிப்னாட்டிக் பவர் மூலம் இளவரசருக்கு அடிப்படும்போதெல்லாம் ரத்த சேதம் அதிகமாகாம அதை உறைய வச்சுருவாரு.
இந்த ஒரே ஒரு ட்ரம்ப் கார்டை வச்சுக்கிட்டு ஓவர் ஆலா அந்த நாட்டையே தன்
கைக்குள்ள வச்சுக்கறாரு. அல்லாருக்கு வர்ர சாவு அவருக்கும் வருது. மேட்டர்
ஓவர்.
இப்பம் நித்யா மேட்டருக்கே வருவம். மதுரை ஆதீனம் நித்யாவை இளைய ஆதீனமா
பட்டம் சூட்ட ஆயிரத்தெட்டு காரணம் சொல்லப்படுது. ஆனால் நான் என்ன
நினைக்கிறேன்னா நித்யா தன் ஹிப்னடிக் பவரை உபயோகிச்சு அவரோட இளைப்பு நோயை
கட்டுப்படுத்தியிருக்காரு. ஆதீனம் படக்குனு விழுந்துட்டாரு.Read More
No comments:
Post a Comment